குரு பெயர்ச்சி: ரிஷப ராசிக்கு பெயர்கிறார் குரு பகவான், ஆலங்குடியில் பிரமாண்ட வைபவம்

நவக்கிரகக்களில் நன்மையை தரக்கூடிய, சுபகிரகம் என அழைக்கப்படும் குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி் ஆவார். அந்த வகையில் இந்த ஆண்டு இன்று மாலை 5.19 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இட பெயர்ச்சி் ஆகிறார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 1, 2024, 09:16 AM IST
  • இன்று மாலை 5.19 மணிக்கு ரிஷப ராசிக்கு இட பெயர்ச்சி் ஆகிறார்.
  • குருப்பெயர்ச்சிக்கான சிறப்பு யாகம் நேற்று இரவு நடைப்பெற்றது.
  • குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள், தீபாரதனை நடைபெறுகின்றன.
குரு பெயர்ச்சி: ரிஷப ராசிக்கு பெயர்கிறார் குரு பகவான், ஆலங்குடியில் பிரமாண்ட வைபவம் title=

நவக்கிரகக்களில் நன்மையை தரக்கூடிய, சுபகிரகம் என அழைக்கப்படும் குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி் ஆவார். அந்த வகையில் இந்த ஆண்டு இன்று மாலை 5.19 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இட பெயர்ச்சி் ஆகிறார்.

இதையொட்டி நவக்கிரங்களில் குருபரிகாரதலமாக விளங்கும் வரலாற்று சிறப்பு மிக்க திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேசுவரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள குருபகவானுக்கு குருபெயர்ச்சியை ஒட்டி குருபைவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றன. இதையொட்டி கடந்த நான்கு நாட்களாக முதல் கட்ட லட்ச்சார்ச்சனை நடைப்பெற்றது.

மேலும் படிக்க | கொடைக்கானலில் கால்ப் விளையாடும் முக ஸ்டாலின்! வைரல் வீடியோ!

இதைதொடர்ந்து குருப்பெயர்ச்சிக்கான சிறப்பு யாகம் நேற்று இரவு நடைப்பெற்றது. இதையொட்டி உற்சவர் குருபகவான் சன்னதியில் 108 கலசங்கள் வைக்கப்பட்டு பூர்வாங்க பூஜை, விக்னேஷ்வர் பூஜை, வேதருத்ரமந்திரங்கள் ஓத முதல் கால யாகபூஜை நடைப்பெற்று பூர்ணாஹூதி, தூபாரதனை் நடைப்பெற்றது. இதைதொடர்ந்து இன்று அதிகாலை இரண்டாம் கால யாக பூஜை, பூர்ணீஹூதி் தீபாரதனை நடைப்பெற்றது. தொடர்ந்து குருபகவானுக்கு அரிசிமாவு, மஞ்சள், திரவியபொடி, நெல்லிபொடி, பஞ்சாமிர்தம், 501 லிட்டர் பால், தயிர், எலுமிச்சை சாறு, இளநீர், சந்தனம், பன்னீர் போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷோகம் செய்யப்பட்டது.

பின்பு, 108 கலசாபிஷேகம், தீபாரதனை நடைப்பெற்றன. தொடர்ந்து குருபகவானுக்கு தங்க கவசம் அணிவித்து வண்ணமலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அலங்காரதீபம், பஞ்சார்த்தி தீபங்கள் காட்டப்பட்டு பூஜைகள் நடைப்பெற்றன. இதில் ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் குருபகவானை வழிப்பட்டனர். 

குருபகவான் பெயர்ச்சியாகும் இன்று மாலை 5.19 மணிக்கு குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள், தீபாரதனை நடைபெறுகின்றன. இதையொட்டி உற்சவர் குருபகவான் வண்ணமலர்களால் சிறப்பு அலங்காட்டிருந்த்து.கலங்கீமர்காத்த வினாயகர், சுப்ரமணியர், ஏலவார்குழலி அம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்த்து.

மேலும் படிக்க | ஓசூர் தனியார் குழந்தைகள் மருத்துவமனைக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News