சனி வக்ர பெயர்ச்சி... ஜூன் மாதம் முதல் பிரச்சனைகள் ஆரம்பம் ... சூதானமா இருங்க!

சனி வக்ர பெயர்ச்சி:  தற்போது கும்ப ராசியில் இருக்கும் சனிதேவன் ஜூன் 29 ஆம் தேதி இரவு 12:35 மணிக்கு சனி தனது மூலஸ்தான ராசியான கும்பத்தில் வக்ர பெயர்ச்சு ஆவார். சனி 15 நவம்பர் 2024 வரை வக்ர நிலையில் இருந்து அதன் பிறகு வக்ர நிவர்த்தி அடைவார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 23, 2024, 11:49 AM IST
  • சில ராசிகளுக்கு சனியின் வக்ர நிலையினால் பலன்கள் சாதகமாக இருக்காது.
  • வேலை மற்றும் வியாபாரத்தில் திடீரென்று பல தடைகளை சந்திக்க நேரிடும்.
  • தனிப்பட்ட வாழ்க்கையையும் மிகவும் மோசமாக பாதிக்கும்.
சனி வக்ர பெயர்ச்சி... ஜூன் மாதம் முதல் பிரச்சனைகள் ஆரம்பம் ... சூதானமா இருங்க! title=

Saturn Retrograde Transit Effect: சனியின் வக்ர பெயர்ச்சி 2024 ஜூன் 29ம் தேதி அன்று நள்ளிரவு 12:35 மணிக்கு நிகழும். நவம்பர் 15, 2024 வரை சனி கும்பத்தில் வக்ர நிலையிலேயே நீடிப்பார். அனைத்து 12 ராசிகளிலும் சனியின் வக்ர நிலை ஏதோ ஒரு வகையில் பாதிக்கும் என்றாலும், சில ராசிகளுக்கு சனியின் வக்ர நிலையினால் பலன்கள் சாதகமாக இருக்காது என கணித்துள்ளனர் ஜோதிடர்கள்.  சனியின் வக்ர பெயர்ச்சியின் தாக்கத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். 

மேஷம்: சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்

மேஷ ராசிக்காரர்களுக்கு, சனி வக்ர பெயர்ச்சி சிக்கல்களை கொண்டு வரும் உங்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் அதிகரிக்கும் மற்றும் வேலை மற்றும் வியாபாரத்தில் திடீரென்று பல தடைகளை சந்திக்க நேரிடும். உங்கள் விதியில் நிதி இழப்புக்கான வாய்ப்புகள் உள்ளன. அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவ மாட்டார்கள். சனி வக்ர பெயர்ச்சி  உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும் மிகவும் மோசமாக பாதிக்கும். உங்கள் மனைவியுடனான உங்கள் உறவு கசப்பாக மாறலாம் மற்றும் பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தம் கணிசமாக அதிகரிக்கலாம். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தி, எள்ளுருண்டைகளை சனிக்கிழமை தானம் செய்யுங்கள்.

ரிஷபம்: சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்

ரிஷபம் ராசிக்காரர்கள் சனி வக்ர பெயர்ச்சியினால் வரும் காலங்களில் சிரமங்களையும், பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடலாம். அலுவலகத்தில் பாரபட்சமாக நடந்து கொள்வீர்கள். இலக்கை அடையவில்லை என்றால், நீங்கள் விமர்சனத்தை கேட்க வேண்டியிருக்கும். வியாபாரத்தில் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடலாம். தொழில் வாழ்க்கையில் மன அழுத்தம் காரணமாக, வீட்டில் சூழ்நிலை பாதிக்கப்படலாம். இதற்கு பரிகாரமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் கருப்பு உடை அணிந்து அலுவலகம் செல்லுங்கள்.

கடகம்: சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்

கடக ராசி உள்ளவர்கள் சனி வக்ர பெயர்ச்சியினால்,  தனிப்பட்ட வாழ்க்கையில் மன அழுத்தம் மற்றும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேலை அல்லது வியாபாரத்தில் எந்த விதமான மாற்றங்களிலிருந்தும் விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்களை வீழ்த்துவதற்கு எந்த அளவிற்கும் சென்று விடுவார்கள். உங்கள் குடும்பத்தினர் அல்லது உறவினர்களிடமிருந்து சில மோசமான தகவல்களைப் பெறலாம். உங்கள் வீட்டில் நிதி பற்றாக்குறையினால் சண்டைகள் அதிகரிக்கலாம். இதற்குப் பரிகாரமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் கோவிலுக்குச் சென்று சனி பகவானிடம்  உங்கள் செயலுக்காக மன்னிப்புக் கேளுங்கள்.

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டமான நாள்!

துலாம்: சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்

துலாம் ராசிக்காரர்கள் சனி வக்ர பெயர்ச்சி காலத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் திடீரென அதிகரிக்கலாம். உத்தியோகத்தில் திடீரென்று பிரச்சனைகள் வரலாம், வேலை செய்வது கடினமாக இருக்கும். உங்களுக்கு வரும் பணம் திடீரென்று தடை படலாம். இந்த நேரத்தில் நீங்கள் புதிதாக முதலீடு செய்ய நினைத்தால், கவனமாக சிந்தியுங்கள் அல்லது முடிவை ஒத்திப் போடுங்கள். உங்கள் பணம் கைக்கு வராமல் கஷ்டத்தை ஏற்படுத்தலாம். இதற்குப் பரிகாரமாக, ஒவ்வொரு சனிக்கிழமையும் கருப்பு எள்ளை ஓடும் நீரில் மிதக்கவிடவும்.

கும்பம்: சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்

கும்ப ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சி மிகவும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். தொழில் விஷயத்தில் சரியான முடிவை எடுப்பது நல்லது, அனுபவஸ்தர்களை கலந்து ஆலோசிக்கவும். அலுவலகம் மற்றும் வியாபாரத்தில் சில விஷயங்கள் உங்களுக்கு எதிராக இருக்கலாம். உங்கள் வேலையை மாற்ற நினைத்தால், மீண்டும் ஒரு முறை யோசியுங்கள். நீங்கள் பணத்தை அதிக அளவில் முதலீடு செய்யாமல் இருந்தால் நல்லது.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி... மேஷம் முதல் மீனம் வரை... அதிர்ஷ்ட ராசிகள் எவை..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News