ஜோதிட சாஸ்திரத்தில், அனைத்து ராசிக்காரர்களின் குண நலன்கள், ஆளுமை தன்மை, எதிர்காலம் உள்ளிட்ட பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். ஜோதிட சாஸ்திரத்தில், ராசி பலன்களை போலவே, ராசிக்காரர்கள் இயல்பு பற்றிய நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. அதில் சில ராசிக்காரர்கள், மிகவும் சோம்பேறி தன்மை கொண்டவர்கள் என்றும், கடின உழைப்பை கொடுப்பதில் ஆர்வம் இல்லாதவர்கள் என கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'சோம்பேறித்தனம் என்பது நமது மோசமான எதிரி' என்ற பழமொழி உண்டு. யாருக்கு ஓய்வு பிடிக்காது. ஆனால் ஓய்வெடுக்கும் பழக்கமும் நேரமும், எல்லை மீறினால், அது வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும். எவ்வளவு திறமை, அறிவு இருந்தாலும், சோம்பல் வெற்றி வாய்ப்புகளை அழித்து விடும். சோம்பேறித்தனம் என்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், இதற்குக் காரணம் உங்கள் ராசியாகவும் இருக்கலாம். ஒரு நபரின் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகள் மற்றும் அவர்களின் ராசிகள், அந்த நபரின் தன்மையை தீர்மானிக்கின்றன. ராசி என்பது ஒரு நபரின் நட்சத்திரம், அந்த நட்சத்திரத்தின் பாதம் ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகிறது. இதில் எந்த ராசிக்காரர்களுக்கு இயல்பிலே சோம்பேறித்தனம் அதிகம் என்பதை தெரிந்து கொள்வோம்.


இயல்பிலே சோம்பேறித்தனம் அதிகம் உள்ள ராசிகள்:


தனுசு: தனுசு ராசிக்காரர்கள் மிகவும் சோம்பேறிகள் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது. அவர்களுக்கு அடிக்கடி எழுந்திருப்பது கூட கஷ்டமானது தான். அவர்கள் தங்களுக்கு வசதியான 'Comfort Zone' என்பதிலிருந்து வெளியேற விரும்பவே மாட்டார்கள். தனுசு ராசிக்காரர்கள், சாப்பிடுவதற்கு கூட எழுந்திருக்க கஷ்டப்படுபவர்களாக இருப்பார்கள். தூக்கத்தின் பெரும் காதலர்களாக இருப்பார்கள்.


மேலும் படிக்க | Astro: 2023 ஜனவரி வரை ‘இந்த’ ராசிகளை பாடாய் படுத்தும் கேது; தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்!


மீனம்: மீன ராசிக்காரர்கள் பயங்கரமான சோம்பேறிகள் என சொல்ல முடியாது. ஆனால் அவர்களின் சோம்பல் என்பது மனநிலையைப் பொறுத்தது. அவர்களின் மனநிலை சரியாக இருந்தால், எல்லா வேலைகளையும் மகிழ்ச்சியுடன் செய்வார்கள். ஆனால், மனநிலை சரியில்லை என்றால், அவர்களை கொஞ்சம் நகருவது கூட சிரமம்.


கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் எந்த ஒரு வேலையையும், அடிக்கடி செய்வதை விரும்ப மாட்டார்கள். கும்ப ராசிக்காரர்கள் கடினமான தொழிலை அல்லது வேலையை தேர்ந்தெடுக்க தயங்குவார்கள். எளிதான வேலைகளை செய்வதையே விரும்புகிறார்கள்.  இருப்பினும் அவர்களிடம் பொறுப்பைக் கொடுத்தால் பின்வாங்க மாட்டார்கள்.


சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் அனைவரின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறார்கள். இந்த ராசிகள் விரைவில் பிரபலமடைய விரும்புகிறார்கள். நடனம், பாடல்கள் போன்ற ஆக்கப் படைப்புகளில் அவருக்கு ஆர்வம். எனினும், சிம்ம ராசிக்காரர்கள் கடின உழைப்பு தேர்ந்தெடுக்க தயங்குவார்கள்.  சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை, அதிகமாக வேலை செய்ய வேண்டும் என்றால், மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Astro: தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என சாதிக்கும் ‘4’ ராசிகள்!


மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ