இன்று சோபகிருது ஆண்டு, மாசி மாதம் 22ம் நாள். இன்றைய நாள் நல்ல நாளாக மலரட்டும். காலை கண் விழிக்கும்போதே கடவுளை வணங்கி நாளைத் தொடங்குவது நல்லது... வாய்ப்புகள் சாதகமாக இருக்குமா இல்லையாaஎன்பதை அறிந்து இந்த நாளைத் தொடங்கினால் நாள் நல்ல நாளாக மலரும்... வாய்ப்புகள் சாதகமாக இருக்குமா என்பதை அறிந்துக்கொண்டு இந்த நாளைத் தொடங்குவோம்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள் - (05-03-2024)


மேஷம் 


உத்தியோகப் பணிகளில் சில மாற்றங்கள் உண்டாகும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். சுப காரியங்கள் நடைபெறும் வாய்ப்புகள் உருவாகும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். சக ஊழியர்களிடத்தில் மதிப்பு மேம்படும். 


ரிஷபம் 
வியாபாரம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்கவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடலில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். பழைய கடன் பிரச்சனைகள் தீரும் என்றாலும், புதிய முதலீடுகள் காலை வாரும் என்பதால் சிந்தித்துச் செயல்படவும்.


மிதுனம் 
உறவினர்களின் வழியில் சுபச்செய்தி கிடைக்கும். பிரச்சனையாக இருந்த வந்த விஷயங்களில் சாதகமான முடிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும், மாணவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும்.


கடகம் 
கடக ராசிக்காரர்களுக்கு  உத்தியோகம் செய்பவராக இருந்தாலும் சரி, தொழில் செய்பவராக இருந்தாலும் சரி, பொறுப்புகள் அதிகமாகும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். ஜாமின் கொடுப்பதை தவிக்கவும், மனதில் நிம்மதி இருக்காது.  


சிம்மம் 
எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படுவது நல்லது.  மற்றவர்கள் பொருட்களின் மீது ஈர்ப்பு ஏற்படும். கலைத்துறையில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும், பணி இடத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படும்.


மேலும் படிக்க | மாசி மாதம் சதுர்த்தி சங்கஷ்டி சதுர்த்தி விரதம் விநாயகர் வழிபாடு


கன்னி


பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மறதி சார்ந்த பிரச்சனை குறையும். வதந்திகளை பொருட்படுத்தாமல் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளை சூழ்நிலை அறிந்து செயல்படுத்தவும்.  வியாபாரத்தை விரிவு செய்யவதில் ஆலோசனை வேண்டும்


துலாம் 


உத்தியோகத்தில் திருப்தியான சூழல் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பல விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த சோர்வு நீங்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.


விருச்சிகம் 
வியாபாரத்தில் இழுபறிகள் நீங்கி நிம்மதி அதிகரிக்கும். விட்டுக் கொடுத்துச் செயல்படவும். வாகன வசதிகள் அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்


தனுசு 
நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறிகள் நீங்குவதால், உற்சாகம் பிறக்கும். இழுபறியான சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். புதுவிதவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே சுமூகமான உறவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை தவறவிடவேண்டாம்.


மேலும் படிக்க | மங்களம் தரும் மகா சிவராத்திரியின் நான்கு கால பூஜை நியமங்களும் பூஜை விதிகளும்...


மகரம் 
சவாலான பணி சார்ந்த முயற்சிகள் சாதகமாகும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியத்திள் முன்னேற்றம் ஏற்படும். குழப்பம் விலகும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோகம் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும்


கும்பம் 
புதிய அனுபவம் உண்டாகும். உறவினர்களை பொறுமையுடன் கையாளவும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்பு உண்டாகும். தடைபட்ட பணிகள் நடைபெறும்


மீனம் 
மனதில் சஞ்சலங்கள் ஏற்பட்டாலும், புதிய முயற்சிகளை சூழ்நிலை அறிந்து செயல்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும்.  


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)


மேலும் படிக்க | மகா சிவராத்திரியின் மகிமை! சிவனை எப்படி கும்பிட்டால் வரம் சித்திப்பார்? தெரிந்து கொள்வோம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ