அனைத்து இராசிகளும் ஒருவரின் ஆளுமையை வரையறுக்கும் அவற்றின் சொந்த குணாதிசயங்கள் மற்றும் பண்புகளைக் கொண்டுள்ளன. இன்றைய தினம் என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றிய குறிப்புகளைத் தெரிந்து கொண்டு உங்கள் நாளைத் தொடங்கினால் அது உதவியாக இருக்கும். கடவுளை வணங்கி நாளைத் தொடங்குவது நல்லது... வாய்ப்புகள் சாதகமாக இருக்குமா இல்லையா என்பதை அறிந்து இந்த நாளைத் தொடங்கினால் நாள் நல்ல நாளாக மலரும்... இன்று சோபகிருது ஆண்டு, மாசி மாதம் 24ம் நாள்..


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

07-03-2024 இன்றைய ராசிப்பலன்


மேஷம்


கடின உழைப்பில் நம்பிக்கை வையுங்கள். சுபசெலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் நிறைவேறும். சாதகமான நிர்வாகம் அமையும். நிர்வாக முடிவுகள் சாதகமாக இருக்கும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.


ரிஷபம்


சக ஊழியர்களிடம் நம்பிக்கை கிடைக்கும். கடன் வாங்குவதை தவிர்க்கவும். விழிப்புடன் வேலையைக் கையாளுங்கள். விழிப்புடன் வேலை செய்யுங்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொழிலில் வெளிவட்டார தொடர்பின் மூலம் அனுகூலம் கிட்டும். சேமிப்பு உயரும்.


மிதுனம்


விழிப்புடன் தொடர்ந்து முன்னேறுங்கள். சூழ்நிலைகள் எதிர்பாராததாகவும் கட்டுப்படுத்த முடியாததாகவும் மாறலாம். ஏனென்றால், எதிர்பாராத காரணங்களால் வேலை பாதிக்கப்படலாம். அபாயகரமான முயற்சிகளைத் தவிர்க்கவும். குடும்ப ஆதரவு முக்கியமாக இருக்கும்.  ஆரோக்கியத்தில் சமரசம் செய்து கொள்ளாதீர்கள்.


மேலும் படிக்க | ராகு-கேது அருளால்.... இந்த ராசிகளில் வாழ்க்கையில் குறைகள் இருக்காது..!


கடகம்


இன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும்.


சிம்மம்


எந்த விஷயத்தையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் இணக்கம் அவசியம்.  உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். தொழில் ரீதியாக எதிர்பார்த்த பண உதவி எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். 


கன்னி


இன்று நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்புக் கிடைக்கும். உற்சாகமாக இருக்கும் நாள் இது. ஆன்மீகத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். போட்டியில் திறம்பட செயல்படுவீர்கள். இளைஞர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்.


மேலும் படிக்க | சுக்கிரன் அருளால் சித்திரையில் ராஜ யோகத்தை அனுபவிக்க உள்ள ‘6’ ராசிகள்!


துலாம்


இன்று திடீர் பணவரவு உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிடைக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும். 


விருச்சிகம்


மகிழ்ச்சியான மற்றும் உற்சாகமான சூழல் நிலவும். கல்வி நடவடிக்கைகள் அதிகரிக்கும். முக்கியமான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். எதையும் துணிந்து செய்யலாம் என்ற எண்ணம் ஏற்படும், ஆனால் கொஞ்சம் கவனமாக செயல்படவும்.  புத்திசாலித்தனத்தால் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பொறுமையுடனும் நேர்மையுடனும் முன்னேறுவீர்கள். 


தனுசு


இன்று எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். பெண்களின் நீண்டநாள் கனவுகள் நிறைவேறும்.  உடன்பிறந்தவர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வார்கள். உத்தியோக ரீதியாக பயணங்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது.  


மேலும் படிக்க | 15 நாட்களுக்குள் இரு கிரகணங்களின் பெயர்ச்சி! ஜாலியாக வாழ்க்கையை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள்!


மகரம்


இன்று ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் செய்ய வேண்டி வரும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நல்லது. அத்தியாவசியப் பணிகளில் கவனம் செலுத்துவார்கள். நட்பு ஆதரவாக இருக்கும். பரிவர்த்தனைகள் தெளிவாக இருக்கும்.


கும்பம்


இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். பெரியவர்களின் சந்திப்பு அனுகூலமாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். 


மீனம்


வேலை விஷயங்களில் ஆலோசனை மூலம் முடிவுகள் எடுக்கவும். நெருங்கியவர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும் என்றாலும் முக்கிய பிரச்னைகளை நன்றாக ஆலோசித்து முடிவெடுக்கவும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பயணங்களில் புதிய நட்பு ஏற்படும். 


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Jupiter Transit: குரு பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும்... பணம், புகழ், பதவி அனைத்தும் கிடைக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ