Guru Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தின்படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. ராசிகள் தவிர கிரகங்களின் நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அனைத்து கிரகங்களும் மாற்றங்களை எதிர்கொண்டாலும், ஜோதிட சாஸ்திரத்தில் குரு பெயர்ச்சிக்கும் சனி பெயர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல வித சுப விளைவுகளை அளிக்கும் குரு பகவானின் பெயர்ச்சிகளுக்கு விசேஷ பலன்கள் உள்ளன. குறிப்பாக குரு வக்ர பெயர்ச்சி சிறப்பு வாய்ந்த ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. இந்த ஆண்டு, அக்டோபர் 9, 2024 அன்று குரு பகவான் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். 119 நாட்களுக்கு அதாவது 4 மாதங்களுக்கு வக்ர நிலையில் இருந்துவிட்டு,  2025 ஆம் ஆண்டில் பிப்ரவரி 4 ஆம் தேதி அவர் வக்ர நிவர்த்தி அடைவார். 


குரு வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நல்ல மாற்றங்கள் ஏற்படும். இவர்களுக்கு சுப விளைவுகள் அதிகரிக்கும். இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


குரு வக்ர பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகள்


கடகம் (Cancer)


குரு வக்ர பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் ஆக்கப்பூர்வமானதாக இருக்கும். மாணவர்கள் தங்கள் கலைத்திறனை மேம்படுத்தி அதை வெளிக்காட்ட பல வித வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். சமூகப் பணிகளில் தீவிரமாக ஈடுபட வாய்ப்பு கிடைக்கும். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் இனிமை இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மன அமைதி அதிகமாகும்.


மேலும் படிக்க | சனிபகவானும் ஷஷ ராஜயோகமும்... இந்த ராசிகளை 2025 மார்ச் வரை பிடிக்கவே முடியாது


விருச்சிகம் (Scorpio)


விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு வக்ர பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். சாதகமான பல நல்ல பலன்களை பெறுவீர்கள். அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கும். சொந்தமாக தொழில் தொடங்க எண்ணம் கொண்டுள்ளவர்களுக்கு இப்போது அதற்கான வாய்ப்பு கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு வியாபாரத்தில் நிதி ஆதாயம் கிடைக்கும். நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பண வரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் அமைதியான சூழல் இருக்கும். 


மீனம் (Pisces)


குரு பகவானின் சொந்த ராசியான மீன ராசிக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். குரு வக்ர பெயர்ச்சி இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பும் புரிதலும் அதிகரிக்கும். பண வரவு அதிகமாகும். வருமானம் அதிகரிப்பதால் வாழ்க்கை நிலை மற்றும் தரம் இரண்டும் உயரும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலதிபர்களுக்கு லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்பு உண்டு.


பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.  


மேலும் படிக்க | சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி.. அனைத்திலும் வெற்றி, ராஜாதி ராஜ வாழ்க்கை இந்த ராசிகளுக்கு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ