Budhan Udhayam in Meenam: கிரகங்களின் ராசி மாற்றத்திற்கு ஜோதிடத்தில் மிகப்பெரிய முக்கியத்துவம் உள்ளது. இந்த ராசி மாற்றங்கள் பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த கிரக பெயர்ச்சிகள் சில ராசிகளுக்கு சுப விளைவுகளையும், சில ராசிகளுக்கு பிரச்சினைகளையும் அளிக்கின்றன. அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்டு காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புத்தி கூர்மை, தர்க்க சாஸ்திரம், பேச்சாற்றல், அறிவாற்றல், நட்பு அறிவாற்றின் காரணி கிரகமாக இருக்கும் புதன் கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் புதன் நல்ல நிலையில் இருந்தால் அந்த நபர் உலகில் உள்ள அனைத்து வித செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சி அடைகிறார். இன்னும் இரண்டு நாட்களில் அதாவது மார்ச் 15 ஆம் தேதி புதன் உதயமாக உள்ளார். தற்போது அவர் அஸ்தமன நிலையில் இருக்கிறார்.


மீனத்தில் புதனின் உதயம் அனைத்து ராசிகளிலும் பலவித மாற்றங்களை ஏற்படுத்தும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் உண்டாகும். இவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து நல்ல செய்திகளை பெறுவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.


மேஷம் (Aries)


மீன ராசியில் புதனின் உதயம் மேஷ ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். புதன் உதயத்தால் அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத இடங்களில் இருந்து பணவரவு இருக்கும். பொருளாதார நிலை மேம்படும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் பேச்சாற்றலால் மக்கள் ஈர்க்கப்படுவார்கள். பணியிடத்தில் உங்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். இவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இதனால் உங்களுக்கு பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் பல மாற்றங்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். 


மேலும் படிக்க | இன்னும் 49 நாட்களில் குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராஜராஜ வாழ்க்கை ஆரம்பம்


மிதுனம் (Taurus)


புதன் உதயம் மிதுன ராசிக்காரர்களுக்கு சுபமானதாக இருக்கும். ஜோதிட கணக்கீடுகளின் படி இந்த காலகட்டத்தில் நீங்கள் அதிகப்படியான மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். வணிகத்தில் ஈடுபட்டுள்ள மிதுன ராசிக்காரர்களுக்கு இப்பொழுது லாபம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த பணிகள் இப்பொழுது வெற்றிகரமாக நடந்து முடியும். நீங்கள் திட்டமிட்டுள்ள அனைத்து பணிகளும் திட்டமிட்டுள்ள படி சரியான நேரத்தில் நடக்கும். வேலை தேடிக் கொண்டிருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான பொழுதை கழிப்பீர்கள்.  பண வரவு அதிகரிக்கும். இந்த காலத்தில் கடின உழிப்பு இருந்தால், வெற்றியின் உச்சம் தொடலாம். 


சிம்மம் (Leo)


சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் உதய காலத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இதன் மூலம் உங்கள் திறமைகள் வெளிப்படும். மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் பரிபூரண ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும். பண வரவு அதிகமாகும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். சுப செலவுகள் அதிகரிக்கும். மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். மாணவர்களுக்கு இது சாதமகான நேரமாக இருக்கும். இந்த நேரத்தில் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். 


மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம், லாபம் அதிகரிக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ