இன்னும் 49 நாட்களில் குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராஜராஜ வாழ்க்கை ஆரம்பம்

Guru Peyarchi Palangal 2024: ​​நவக்கிரகங்களில் சுப கிரகமாக திகழும் குரு பகவான் வருகிற மே 1, 2024 அன்று அதாவது இன்னும் 49 நாட்களில் மேஷ ராசியிலிருந்து வெளியேறி ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். எனவே இந்த குரு பெயர்ச்சியால எந்த ராசிகளின் பண வரவு, அதிர்ஷ்டம் உண்டாகும் என்று பார்ப்போம்.

Guru Peyarchi Palangal, Jupiter Transit in 49 Days : வேத ஜோதிடத்தில் அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்களின் ராசியை மாற்றும். அந்த வகையில் நவகிரகங்களில் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படும் விழாயன் இன்னும் 49 நாட்களில் (மே மாதம் 1 ஆம் தேதி மதியம் 02:29 மணிக்கு) ரிஷப ராசியில் (கார்த்திகை, ரோகிணி, மிருகஷீரிடம்) இடப் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, தொழில் லாபம் போன்றவை கிடைக்கப் போகிறது என்பதை தெரிந்துக்கொள்வோம்.

1 /6

மேஷ ராசிக்காரர்கள் மே 1ஆம் தேதி நிகழவிருக்கும் குரு பெயர்ச்சியால் சிறப்பான பலன் கிடைக்கும். நிதி நிலை வலுவாகும் மற்றும் நிதி ஆதாயமும் உண்டாகும். பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும் சில நல்ல செய்திகளையும் பெறலாம்.

2 /6

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு ஜென்ம ராசியில் குரு பெயர்ச்சியால் நடக்கப் போவதால் சாதகமான பலன் கிடைக்கும். நிதி நிலை மேம்படும். புதிய வேலை வாய்ப்பை பெறலாம். திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியுடன் இருக்கும். அலுவலகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறலாம்.

3 /6

கடக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அடைந்த பிறகு, அதிர்ஷ்டம் பெருகும். பணியிடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். முன்னேற்றத்திற்கான வாய்ப்பை பெறலாம். புதிய தொழிலை தொடங்கலாம், அதிலும் வெற்றி அலை வீசும், லாபம் உண்டாகும்.

4 /6

சிம்ம ராசிக்காரர்களுக்கு மே 1ஆம் தேதி நடக்கபோகும் குரு பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். தொழிலில் எதிர்பாராத நன்மைகளைப் பெறுவீர்கள். அதே சமயம் சிம்ம ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வும் கிடைக்கலாம். மூதாதையர் சொத்துக்களால் நிதி நிலை உயரும்.

5 /6

கன்னி ராசிக்காரர்களுக்கு மே 1ஆம் தேதி நிகழவிருக்கும் குரு பெயர்ச்சியால் நல்ல பலன் கிடைக்ககூம். அதிர்ஷ்டம் உங்களை வந்து மித்தமிடும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

6 /6

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.