இந்த வாரம் செவ்வாய் கிரகம், ரிஷப ராசிக்குள் நுழைகிறது இது அனைவரின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும். குப்த நவராத்திரி தொடங்குவது என பல மாற்றங்கள் ஜோதிட ரீதியாக மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும். செவ்வாய்ப் பெயர்ச்சியால் யாருக்கு என்ன நன்மை ஏற்படும்? யார் கவனமாக இருக்க வேண்டும் என தெரிந்துக் கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்
தொழில் சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சகோதர வகையில் மூத்த சகோதரிகள் அனுகூலமாக இருப்பார்கள். பணி நிமித்தமான பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேற கடின உழைப்பை போட வேண்டும். வீடு மற்றும் சொத்து சார்ந்த பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். முன்யோசனையின்றி செயல்பட்டால் பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க வேண்டும் என்பதால் சிந்தித்து செயலாற்றவும்.  


ரிஷபம் 
மனதில் புதிய நம்பிக்கை உண்டாகும் என்றாலும்  வாகனங்கள் தொடர்பான விஷயங்களில் கவனம் அவசியம். வாகனப் பழுதுகளை சீர் செய்யவும். உறவினர்கள் தொடர்பான விஷயத்தில் கவனமாக இருக்கவும். கற்பனைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.


மிதுனம்
வெளியூர் செல்லும் வாய்ப்புகள் ஏற்படும், இது ஆடம்பரப் பொருட்கள் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும். செயல்பாடுகளில் புத்துணர்ச்சி ஏற்படும், ஆனால் சிந்தித்துச் செயல்படவும். பணப் பிரச்சனைகள் நீங்கும், நெருக்கடிகள் குறையும். அரசு தொடர்பான விஷயங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். 


கடகம்
பொறுப்புகள் அதிகரிக்கும் நேரம் இது என்பதால் கவனத்துடன் இருக்கவும். எதிர்பாராத சில செலவுகள் கவலையை ஏற்படுத்தும், சிந்தித்துச் செயல்படவும். கருத்துகளை சொல்லும்போது வார்த்தைகளை கவனித்து சொல்லவும். கவனம் தேவைப்படும் வாரம் இது. மனதளவில் குழப்பம் உண்டாகும், கோபத்தை நிர்வகிக்காமல் விட்டால், அது உங்களுக்கு பிரச்சனையாக மாறிவிடும்.  


மேலும் படிக்க | நாளை சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல நாட்கள் ஆரம்பம்


சிம்மம்
வெளிநாட்டில் இருந்து வரும் செய்திகள் நல்ல வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கும். சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது, சிந்தித்து முடிவெடுக்கவும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.  வீண் செலவுகளை தவிர்த்தால் நல்லது. நண்பர்களிடம் அனுசரித்துச் செல்லவும்.  


கன்னி
தகவல் தொடர்பு தொடர்பான பணியில் இருப்பவர்களுக்கு நல்ல காலம் இது. பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். சிக்கனமாக செயல்படுவது நல்லது.  கல்வித்துறையில் இருப்பவர்களுக்கு இழுபறியான நிலை நெருக்கடியைக் கொடுக்கும். 


துலாம்
குழந்தைகளின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் ஏற்படுவது கவலையை அதிகரிக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் கவலையைக் கொடுக்கும். வேலை பார்ப்பவர்களுக்கு அவர்களுடைய பணிகளால் ஆதாயம் ஏற்படும். வியாபாரப் பணிகள் நல்ல லாபத்தைக் கொடுக்கும். சில பயணங்கள் லாபத்தைக் கொடுக்கும்.


விருச்சிகம்
பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். பெற்றோரின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். வீடு, வாகனங்களை சரி செய்வீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு புதிய முடிவுகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு உகந்த பலன்கள் கிடைக்கும்.  


தனுசு
உடன்பிறந்தவர்களின் மனதில் உங்களைப் பற்றிய தவறான எண்ணம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வெளி உணவுகளை குறைத்துக் கொள்வது உடல்நிலையை கெடுத்துவிடும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. விலை மதிப்புள்ள பொருட்களை கையாள்வதில் கவனம் வேண்டும்.  வியாபாரம் மந்தமாகவே இருக்கும். உத்தியோகத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். 


மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சியால் யாருக்கு நல்ல காலம் மாறிப்போச்சு? அழகுக்கு காரணமான கிரகத்தின் சஞ்சார மாற்றம்...


மகரம்
உறவினர்களின் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். மனதிலும் உற்சாகமும் நிம்மதியும் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் மூலம் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வாய் அடக்கம் என்றும் நல்லது. தேவையில்லாத கருத்துகளை சொல்லாமல் இருப்பது நல்லது.  உறவினர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும்.  


கும்பம்
வாழ்க்கையில் கிடைக்கும் சில எதிர்பாராத சில உதவிகளின் முக்கியத்துவம் புரியும் காலம் இது. செவ்வாய் பெயர்ச்சியால் ஏற்படும் மாற்றத்தால், கும்ப ராசிக்காரர்கள், சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. சுறுசுறுப்பாக வேலைகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் மீதான போட்டி பொறாமை குறையும். சிந்தித்து செயல்பட்டால் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.


மீனம்


குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நினைத்த எண்ணங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வாழ்க்கையில் நிம்மதியாக வாய்ப்புகள் அமையும் நேரம் இது. சமூகப் பணிகளில் விருப்பம் உருவாகும். பழைய நினைவுகளை தூண்டும் நினைவுகள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.  


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: தீபாவளி வரை இந்த ராசிகளுக்கு ராஜ பொற்காலம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ