Venus Transit In Cancer Caution: குரோதி ஆண்டு ஆனி 23ஆம் நாளான இன்று பூச நட்சத்திரத்தில் சுக்கிரன் கடகத்திற்கு பெயர்ச்சியானார். இந்த மாதத்தின் கடைசி சஞ்சார மாற்றாமானது சிலருக்கு நல்லதை செய்யும் என்றால் சிலருக்கு எச்சரிக்கையை விடுக்கிறது.
இவை பொதுப்பலன்கள் என்றாலும், அவரவர் சுய ஜாதகத்தைப் பொறுத்து பலன்கள் மாறும். இருப்பினும் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்போதுமே நல்லது. இந்த சுக்கிரன் பெயர்ச்சியால் நட்பையும் பகையையும் கவனமாக கையாள வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்...
பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் செலவு செய்பவர்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். ஜாதகத்தில் பண வரவைக் கொடுக்கும் குரு, கெடுக்கும் இடத்தில் அமர்ந்திருந்தால் இது வாழ்க்கையில் பிரச்சனைகளை அதிகரிக்கும். ஏனெனில் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் செலவாளியாக இருப்பார்கள் என்பது பொதுவான கருத்து. ஆடம்பரப்பிரியர்களாகவும் செலவு செய்பவர்களாகவும் இருக்கும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களில் எந்தெந்த ராசிகள் இந்த சுக்கிரன் பெயர்ச்சியில் கவனமாக இருக்க வேண்டும்? தெரிந்துக் கொள்வோம்...
துலாம் ராசிக்காரர்கள், கடகத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கும் காலத்தில் கிடைக்கும் புதிய வாய்ப்புகளை தவறவிட வேண்டாம். ஆனால், அந்த வாய்ப்புகள் உங்களை ஈர்க்காமல் இருக்கலாம். வர்த்தகத்தில் சுணக்கமாக இருக்கும், வராக்கடன்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எப்போதும் சாதகமான சூழல் தான் இருக்காது என்பதைப் புரிந்துக் கொண்டு செயல்பட்டால் கவலை குறையும்.
இந்த சுக்கிரன் பெயர்ச்சி உங்களது மதிப்பைக் கொஞ்சம் குறைப்பதால், எரிச்சல் அதிகரிக்கலாம். தொழில் மற்றும் வியாபரத்தில் போட்டி அதிகரிக்கும். அதிகரிக்கும் செலவுகள் அதிக பொறுப்புகள் கவலைகளை அதிகரிக்கும். செலவு அதிகரிப்பதால் கடன் வாங்க வேண்டியிருக்கலாம். ஆனால், கடன்களை வாங்குவதற்கு முன் நன்கு யோசித்து வாங்கவும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும், பெற்றோரின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும்.
ஊதியத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு மேலதிகாரிகளுடன் பிரச்சனைகள் அதிகரிக்கும். உங்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் மனதில் விரக்தியை உண்டாக்கும். தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு ஏதேனும் ஒருவிதத்தில் ஏற்படும் நஷ்டம் விரக்தியைக் கொடுக்கும். எப்படியும் தனுசு ராசிக்காரர்கள் அடுத்த சுக்கிரன் பெயர்ச்சி வரை நிம்மதியாக இருக்கப் போவதில்லை என்பதால் செய்யும் வேலையை திருத்தமாக செய்யவும். செலவுகள் அதிகரிப்பதால், கவலை மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கும், இது அநாவசியமான வார்த்தைகளை பேசச் செய்து உறவுகளிலும் அதிருப்தியை ஏற்படுத்தலாம். எனவே எச்சரிக்கையாக இருப்பது அவசியம்
செய்யும் வேலையில் திருப்தி குறைவாக இருக்கும். வியாபாரத்தில், அதிர்ஷ்டமாக இருந்துவந்த காரணிகளே துரதிருஷ்டத்திற்கு காரணமாக மாறும். லாபம் குறையும். செலவுகள் அதிகரிக்கும். குடும்பட்திலும் கருத்து வேறுபாடுகள் காரணமாக வாக்குவாதங்கள் அதிகரிக்கலாம். குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற்காக அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். கவலைப்படுவதால் எதுவும் நடக்காது என்பதைப் புரிந்துக் கொண்டு சமயோஜிதமாக செயல்படுவது நல்லது. ஆடம்பரத்திற்காக செலவு செய்யாதீர்கள்
வேலையில் ஏற்படும் மாற்றங்கள் அதிருப்தியைத் தரலாம். வியாபாரத்தில் நஷ்டம், போட்டி, தடைகள் ஏற்படும். சேமிப்பு கரைவதைக் கண்டு கலக்கம் ஏற்படும். ஆனால், தேவையற்ற செலவுகளை தவிர்க்கமுடியாஹ்டு. குடும்பத்தினருடன் வாக்குவாதங்கள் மனதை சஞ்சலப்படுத்தும் என்பதால், வாயைக் கட்டுப்படுத்துங்கள். மருத்துவ செலவைக் குறைக்க வெளியில் உண்பதைத் தவிர்க்கவும்
வேலையில் அதிக அழுத்தங்களை சந்திக்க நேரிடலாம், செய்யும் வேலைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் அதிகரிக்கும். தொழில் செய்பவர்களுக்கு லாபம் குக்றைவதால் வருத்தம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள் கொன்சம் கவனமாக இருக்கும். குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே என்பது சரியானதாக இருந்தாலும், அதற்காக செய்யப்படும் செலவுகள், கடனாளியாக மாற்றிவிடக்கூடாது
சுக்கிரனின் கடகப் பெயர்ச்சியால் பல பிரச்சனைகள், பண நஷ்டம், மனக்கவலை அதிகரிக்கும் என்பது ஜோதிட பலன்களாக இருந்தாலும், நாள் என் செய்யும் கோள் என்ன செய்யும், நமசிவய என்ற நாமம் இருக்கையிலே? என்ற கேள்விக்கான பதிலாக, நவகிரக நாயகர் சிவபெருமானை வணங்கி சரணடைந்தால் துன்பங்கள் குறையும், வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள நல்ல வரம் அருள்வார் ஓம்காரர்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது