12 ஆண்டுகளுக்கு பின் இணையும் குரு - செவ்வாய்... இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்..!!

Jupiter Mars Conjunction: 12 ஆண்டுகளுக்குப் பிறகு, ரிஷப ராசியில் குரு பகவானும் மற்றும் செவ்வாயும் இணைவதால் உருவாகும் யோக பலன் காரணமாக ஜூலை இரண்டாம் வாரத்தில் மேஷம், மிதுனம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அபரிமிதமாக இருக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 5, 2024, 03:32 PM IST
  • நிதி விஷயங்களில் திட்டமிட்டு செயல்படுவது நிச்சயம் பலன்களைத் தரும்.
  • எதிர்பாராத பண வரவு மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
  • தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் அமையும்.
12 ஆண்டுகளுக்கு பின் இணையும் குரு - செவ்வாய்... இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்..!! title=

Jupiter Mars Conjunction Effects: குரு பகவான் மற்றும் செவ்வாய் கிரக சேர்க்கை காரணமாக, ஜூலை இரண்டாவது வாரத்தில் சில ராசிகள் அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள். ஜோதிட சாஸ்திரத்தில் குரு பகவானும் மற்றும் செவ்வாயும் இணைவது மிகவும் மங்களகரமாக கருதப்படுகிறது.  12 ஆண்டுகளுக்குப் பிறகு, ரிஷப ராசியில் குரு பகவானும் மற்றும் செவ்வாயும் இணைவதால் உருவாகும் யோக பலன் காரணமாக ஜூலை இரண்டாம் வாரத்தில் மேஷம், மிதுனம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு வேலையில், தொழிலில், முன்னேற்றம், பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

குரு பகவான் மற்றும் செவ்வாயின் சேர்க்கை காரணமாக, வரும் வாரத்தில் செல்வம், சொத்து ஆதாயம் மற்றும் சந்தோஷம் ஆகியவற்றை குறையாம் அடைய உள்ள,  ஜூலை இரண்டாவது வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம்: ஜூலை இரண்டாம் வாரத்தில் மேஷ ராசிக்காரர்கள் சுப காரியங்களில் பங்கேற்று உறவினர்களுடன் மகிழ்ச்சியாக அதிக நேரத்தை செலவிடுவார்கள். எதிர்பாராத பண வரவு மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். குடும்பத்தினருடன் இனிமையான பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால், உறவுகளில் நெருக்கம் உண்டாகும். பழைய முதலீடுகள் மூலம் அதிகம் லாபம் கிடைக்கும். எனினும் செலவு சிறிது அதிகரிக்கலாம். வீட்டைப் பழுதுபார்ப்பதற்கோ அல்லது ஆடம்பரப் பொருட்களை வாங்குவதற்கோ பணம் செலவழிக்க வாய்ப்பு உள்ளது.

மிதுனம்: ஜூலை இரண்டாம் வாரத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளையும் நிறைவேற்ற முடியும். நீண்ட நாட்களாக வாட்டி வந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். இது மட்டுமின்றி உங்கள் காதல் துணையுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் முடிவுக்கு வரும். புதிய சொத்து வாங்க, விற்க ஏற்ற நேரம் இது. நிதி விஷயங்களில் திட்டமிட்டு செயல்படுவது நிச்சயம் பலன்களைத் தரும். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். வெளியூர் சம்பந்தமான தொழில் செய்பவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். 

கடகம்: ஜூலை இரண்டாம் வார தொடக்கத்தில் கடக ராசிக்காரர்கள் பணியிடத்தில் உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக முழுமையடையாமல் இருந்த திட்டங்களை விரிவுபடுத்துவார்கள். குடும்பத்தில் சில சுப காரியங்கள் நிறைவேறும் வாய்ப்பும் உண்டு. குடும்ப உறவினர்கள் உங்கள் காதலை ஏற்றுக் கொள்வார்கள். இருப்பினும், இந்த வாரம் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். ஏனெனில் கொடுத்த பணம் கிடைக்காமல் போக வாய்ப்பு உண்டு. எனவே எச்சரிக்கையாக இருக்கவும்.

மேலும் படிக்க | சூரியனின் அருளால் ‘இந்த’ ராசிகளுக்கு ஆடி மாதம் அமர்களமாய் இருக்கும்! 

துலாம்: ஜூலை இரண்டாம் வாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு சொத்து விஷயங்களில் சாதகமாக இருக்கும். பண வரவும் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். எனினும், வார இறுதியில் தேவையற்ற செலவுகளால் சற்று மனச்சோர்வடையலாம். தொழில் சம்பந்தமான எந்த முடிவையும் சிந்தித்து எடுங்கள். உங்கள் சொத்து சம்பந்தமாக ஏதேனும் வழக்கு இருந்தால் உங்களுக்கு சாதகமாக முடியும் வாய்ப்பு உள்ளது. உங்கள் நண்பர்களில் ஒருவரின் ஆதரவால் நீங்கள் நிறைய நிம்மதி அடைவீர்கள். காதல் உறவில் இருப்பவர்கள் தங்கள் துணையின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

விருச்சிகம்:  ஜூலை இரண்டாம் வாரம் விருச்சிக ராசிக்காரர்களின் விருப்பங்கள் நிறைவேறும். வேலை தேடும் இந்த ராசிக்காரர்களின் விருப்பங்கள் நிறைவேறும். எதிர்பாராத பண வரவு மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். வாரத்தின் நடுப்பகுதியில் உடன்பிறந்தவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மூத்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு கால நேரம் சாதகமாக இருக்கும். வார இறுதியில் உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் நிறைவேறும். 

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | ஜூலை 7 முதல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்: கொட்டிக்கொடுப்பார் சுக்கிரன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News