கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் முப்பெரும் தேவியர்களில்  கலைமகள் என அழைக்கப்படுபவர் சரஸ்வதி. நவராத்திரி விழாவின் ஒன்பதாவது நாள் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் நவராத்திரி கொலு  வைத்தவர்கள் வைக்காதவர்கள் என அனைவருமே வழிபடக்கூடிய நாளாக கருதப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் கொண்டாட பெரும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை மிக முக்கிய இந்து பண்டிகைகளில் ஒன்று. தென்னிந்தியாவில், தமிழகம் ஆந்திரா தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஆயுத பூஜையாக கொண்டாடப்படும் இந்த பண்டிகை, வட மாநிலங்களில் மகா நவமியாக கொண்டாடப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நவராத்திரியின் நிறைவு நாளான அக்டோபர் 11ஆம் தேதி, ஆயுத பூஜை கொண்டாடப்படும் நிலையில், இன்றைய நாளில் நம் வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும், அனைத்து வகையான கருவிகள் மற்றும் சாதனங்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் சிறிய கருவிகள் முதல், வாகனங்கள் இயந்திரங்கள் போன்ற பெரிய பெரிய கருவிகள் வரை, அனைத்திற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், அவற்றை சுத்தம் செய்து, சந்தனம் குங்குமம் இட்டு வழிபட்டால், வாழ்க்கையில் வெற்றிகளையும் சாதனைகளையும் படைக்கலாம் என்பது நம்பிக்கை.


ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம்


இந்த வருடம் சரஸ்வதி பூஜை அக்டோபர் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை வெள்ளிக்கிழமை வரும் நிலையில், காலை பத்தரை முதல் ஒரு மணி வரை ராகு காலம் என்பதால் அதனை தவிர்த்து, காலை பத்தரை மணிக்கு முன்னதாக பூஜை செய்யலாம். எனினும் மதியம் 12:15 மணி முதல் 1:15 மணி வரை நல்ல நேரம் என ஆன்மீக வல்லுனர்கள் கூறியுள்ளனர்.


ஆயுத பூஜை செய்யும் முறை


சரஸ்வதி தேவியை வெந்தாமரை அல்லது செம்பருத்தி பூ போன்ற வண்ணமயமான மலர்களால் அலங்கரித்து புத்தகங்கள் மற்றும் கலை தொடர்பான பொருட்கள், வாழ்க்கையிலும் வணிகம், தொழில், வியாபாரத்தில் பயன்படுத்தப்படும் கருவிகள் சாதனங்களை வைத்து பிறகு பூஜைக்கு தேவையான பொருள்கள், அன்றைய தினத்தின் நெய்வேத்தியங்கள் ஆகியவற்றை சமர்ப்பித்து தீப தூப ஆராதனை செய்து பூஜையை செய்யத் துவங்கலாம்.


மேலும் படிக்க | புரட்டாசி வியாழக்கிழமை: இன்று இந்த ராசிக்கு அதிர்ஷ்டம் உண்டாகும்


சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை அன்றும், விஜய தசமி அன்றும் குழந்தைகளுக்கு வித்யாரம்பம்  கற்றுத்தர உகந்த நாளாக கருதப்படுகிறது. வித்யா என்றால் அறிவு ஆரம்பம் என்றால் துவக்கம் ஆகும். இன்றைய தினத்தில் 2-5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை நெல் அல்லது அரிசியில் எழுத துவங்க செய்யலாம்.


 வித்யாரம்பம்  செய்து கொள்ள உகந்த நேரம்


அக்டோபர் 11ம் தேதி வெள்ளிக்கிழமை சரஸ்வதி பூஜை அன்று காலை 6 மணியிலிருந்து 9:00 மணி வரையிலும் ,மதியம் 1 மணியிலிருந்து நான்கு மணி வரையிலும், மாலை 5 மணியிலிருந்து 6 மணி வரையிலும் வித்யாரம்பம்  செய்து கொள்ளலாம்.  பிறகு அடுத்த நாள் விஜயதசமி தினமான அக்டோபர் 12ம் தேதி சனிக்கிழமை காலை காலை 7 - 8  மணி வரையிலும் 10:30 லிருந்து 1 மணி வரையிலும் மாலை 5-7  மணி வரையிலும் வித்யாரம்பம்  செய்து கொள்ளலாம்.


வித்யாரம்பம் செய்யும் நாள் குழந்தைகளுக்கு புத்தாடை உடுத்தி பூஜைக்கு தேவையான பொருட்களை வைத்து, ஒரு படி நெல் அல்லது ஒரு படி அரிசியை தட்டில் பரப்பி வைத்து வைக்க வேண்டும். பின்னர் குழந்தையை பெரியவர்கள் மடியில் வைத்து தட்டில் அவர்களை கையைப் பிடித்து பிள்ளையார் சுழி முதலில் எழுதி பிறகு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை எழுதி அதன் பிறகு அ என்ற தமிழ் முதல் எழுத்தையும் துவங்க வேண்டும். 


கல்வியும் திறமையும் மட்டுமே ஒரு மனிதனுக்கு அனைத்து  நன்மைகளையும் கொடுக்க வல்லது. ஞானஸ்ருபமாக விளங்கும் சரஸ்வதி தேவியின் கடாட்சம் பெறவும், நினைவாற்றல், கலைகளில் தேர்ச்சி போன்றவற்றில் சிறப்பாக திகழ கலைமகளை பிரார்த்தனை செய்வது சிறப்பாக கருதபடுகிறது .


மேலும் படிக்க | சரஸ்வதி பூஜையன்று இந்த மந்திரங்களை சொன்னால் போதும்: முட்டாளும் மேதையாகலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ