புதன் பெயர்ச்சி 2023, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசியை மாற்றுகிறது. ராசி மட்டுமின்றி கிரகங்களின் இயகங்களும், அஸ்தமன உதய நிலைகளுக் கூட மாற்றம் பெருகின்றன. கிரகங்களின் இந்த மாற்றங்களின் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் காணப்படும். கிரகங்களின் இயக்க மற்றும் ராசி மாற்றங்களால் ராசிகளில் சுப மற்றும் அசுப பலன்கள் ஏற்படும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜூன் 7 ஆம் தேதி அதாவது இன்று புதன் கிரகம் தனது ராசியை மாற்றுகிறது. இதன் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் இருக்கும். சில ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் நல்ல பலன்களை அளிக்கும். இவர்கள் தொழில், வியாபாரத்தில் லாபம் அடைவார்கள். மறுபுறம், சில ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். இவர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். புதன் பெயர்ச்சியால் இக்கட்டான சூழலை எதிர்கொள்ளவிருக்கும் ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 


இந்த ராசிக்காரர்கள் புதன் சஞ்சாரத்தில் கவனமாக இருக்க வேண்டும்


மேஷம்


ஜோதிட சாஸ்திரப்படி, மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் புதனின் பெயர்ச்சி சுமாரான பலன்களை அளிக்கும். இந்த நேரத்தில் இந்த ராசிக்காரர்கள் தங்கள் குடும்பம் மற்றும் அன்புக்குரியவர்களுடன் கவனமாக இருக்க வேண்டும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் தொழில் சம்பந்தமாக கடினமாக உழைக்க வேண்டி வரும். இந்த நேரம் வணிகர்களுக்கும் சரியாக இருப்பதாக சொல்லப்படவில்லை. ஆகையால், வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் மேஷ ராசிக்காரர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேஷ ராசிக்காரர்களுக்கு நிதி இழப்பு ஏற்படலாம். ஆரோக்கியத்திலும் சிறப்பு கவனம் செலுத்துவது நல்லது.


மிதுன ராசி


ரிஷப ராசியில் புதன் பெயர்ச்சியாவதால் மிதுன ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும். இந்த நேரத்தில் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் அவர்களை தொந்தரவு செய்யலாம். அதுமட்டுமின்றி, இந்த ராசிக்காரர்கள் இந்தப் பெயர்ச்சியின் போது அதிக செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கும். அதே நேரத்தில், பணியிடத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும். இந்த நேரத்தில் உங்கள் வேலையை குறித்த நேரத்தில் முடிப்பது நல்லது. இல்லையென்றால் அதை காரணம் காட்டி சிலர் உங்களை கண்டிக்கவும் தண்டிக்கவும் வாய்ப்புள்ளது.


மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி இன்று: இந்த ராசிகளின் வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழும்


கடக ராசி


ஜோதிட சாஸ்திரத்தின்படி, கடக ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் பண இழப்பைத் தர வாய்ப்புகள் உள்ளன. தொழில் ரீதியாக நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். இந்த நேரத்தில் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். பயணம் செய்யும் எண்ணம் இருந்தால், அதை இப்போது தவிர்ப்பது நல்லதாக இருக்கும். இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இல்லை. உடன்பிறந்தவர்களுடன் ஏதேனும் தகராறு போன்றவற்றில் சிக்கிக் கொள்ளக்கூடும். ஆகையால், பேச்சில் அதிகப்படியான நிதானத்தை கடிபிடிப்பது மிக நல்லது. 


சிம்ம ராசி


ஜோதிட சாஸ்திரப்படி சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் சஞ்சாரம் மிக சுமாராக இருக்கும். இந்த நேரத்தில், இந்த ராசிக்காரர்கள் தொழில் துறையில் கவனமாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேசமயம், எங்காவது முதலீடு செய்யும் எண்ணம் உங்களுக்கு இருந்தால், இப்போது அதை செய்ய வேண்டான். தற்போது நிதி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், உங்களுக்கு நேரம் அத்தனை சாதகமாக இல்லை. ஆனையால் பண பரிவர்த்தனைகளிலும் மிக எச்சரிக்கையாக இருப்பது மிக நல்லதாக இருக்கும். இந்த நேரம் முதலீட்டுக்கு ஏற்றதல்ல. வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் ஏற்படும் சூழ்நிலையும் அமையும். அதிகப்படியான பொறுமையுடன் இருப்பது நல்லது. 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2023: இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் ஏப்ரல் 2024 வரை ஜொலிக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ