மீனத்தில் புதன் உதயம்: நாளை முதல் நல்ல காலம்... வெற்றியின் உச்சம் தொடப்போகும் ராசிகள் இவைதான்
Budhan Udhayam in Meenam: கிரக பெயர்ச்சிகளுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அறிவாற்றல், புத்திக்கூர்மை, பேச்சாற்றல், நட்பு, அழகு ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ள புதன் நாளை அதாவது மார்ச் 15 ஆம் தேதி உதயமாகவுள்ளார்.
Budhan Udhayam in Meenam: ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களுக்கும் ஒரு தனித்துவமான முக்கியத்துவம் உள்ளது. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. ராசிகள் தவிர கிரகங்களின் நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்கிர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல வித மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த கிரக மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றது.
கிரக பெயர்ச்சிகளுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அறிவாற்றல், புத்திக்கூர்மை, பேச்சாற்றல், நட்பு, அழகு ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ள புதன் நாளை அதாவது மார்ச் 15 ஆம் தேதி உதயமாகவுள்ளார். புதன் தற்போது மீனத்தில் அஸ்தமன நிலையில் இருக்கிறார். பொதுவாக கிரகங்களின் உதயம் சுபமான விஷயமாக பார்க்கப்படுகின்றது. அஸ்தமன நிலையில் கிரகங்களின் ஆற்றல் குறைந்து இருக்கின்றது. கிரகங்கள் உதயமான உடன் ஆற்றல் அதிகரிக்கிறது. புதன் உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு (Zodaic Signs) இதனால் ஏராளமான நற்பலன்கள் உண்டாகும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி பதிவில் காணலாம்.
மேஷம் (Aries)
புதன் உதயம் காரணமாக மேஷ ராசிக்காரர்களுக்கு லாபகரமான பலன்கள் கிடைக்கும். நீங்கள் செய்யும் அனைத்து பணிகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு பொருளாதார லாபம் உண்டாகும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வர்த்தகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு பணியிடத்தில் நேரம் நன்றாக இருக்கும். ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்
ரிஷபம் (Taurus)
ரிஷப ராசிக்காரர்களுக்கு புதன் உதயம் நல்ல காலத்தை கொண்டு வரும். பணியிடத்தில் நல்ல முன்னேற்றங்களை காண்பீர்கள். பொருளாதார நிலை மேம்படும். காரியங்களில் வந்த தடைகள் இப்பொழுது விலகும். இடைவிடாது கடுமையான உழைப்பை தொடருங்கள். இதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | எதிரிகளை நிர்மூலமாக்கும் வாராஹி அம்மன்! வெற்றிபெற வழிபாடு! எப்படி எப்போது எவ்வாறு?
மிதுனம் (Gemini)
மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் உதயம் நல்ல பலன்களை கொண்டுவரும். மனதில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகரிக்கும். நல்ல பண வரவு இருக்கும். புதிய வேலை தேடிக் கொண்டிருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். குடும்ப உறவுகள் பலப்படும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
சிம்மம் (Leo)
சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் உதயம் நல்ல செய்திகளை கொண்டு வரவுள்ளது. பணியிடத்தில் பொறுப்புகள் வழங்கப்படும். அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் பாராட்டையும் மதிப்பையும் பெறுவீர்கள். முதலீடு செய்ய நினைத்துக் கொண்டிருந்தால் அதற்கான சரியான நேரம் வந்துவிட்டது. இப்போது செய்யப்படும் முதலிட்டால் எதிர்காலத்தில் நல்ல வருமானம் கிடைக்கும். வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் காணப்படும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சூரியப் பெயர்ச்சி 2024: இந்த 5 ராசிகளுக்கு செல்வம் பெருக ஆரம்பிக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ