குரோதி ஆண்டு பஞ்சாங்கம் என்ன சொல்கிறது? உணவு பற்றாக்குறை... பருவமழை தப்பும்...

Details Related To Krodhi Tamil New year :  ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை சஷ்டி திதியில், திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, அதிகண்ட யோகம், தைதுளை கரணத்தில் குரோதி தமிழ் வருட பிறப்பு! விரிவான தகவல்கள்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 14, 2024, 03:44 PM IST
  • குரோதி வருசத்தில் இத்தனை விஷயங்களா?
  • வளர்பிறை சஷ்டியில் ஞாயிற்றுக்கிழமையன்று பிறக்கும் புத்தாண்டு
  • திருவாதிரை நட்சத்திரத்தில் பிறக்கும் குரோதி
குரோதி ஆண்டு பஞ்சாங்கம் என்ன சொல்கிறது? உணவு பற்றாக்குறை... பருவமழை தப்பும்... title=

சூரியன் தன் பயணத்தை, கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான், தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. மங்களகரமான  ஶ்ரீ குரோதி  வருட தமிழ்ப் புத்தாண்டு வருட பிறப்பு 14-04-2024  சித்திரை திங்கள் 01 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறும். ஶ்ரீ சோபகிருது ஆண்டு பங்குனி மாதம் 31ம் நாள் சனிக்கிழமை இரவு மணி 8.10 க்கு ஸ்திர துலா லக்கினத்தில் சனி ஓரையில் முடிவடைந்த பிரகு, தமிழ் (ஸ்ரீ க்ரோதி நாம சம்வத்சரம்) புத்தாண்டான குரோதி பிறக்கிறது.

ஶ்ரீ குரோதி  வருட தமிழ்ப் புத்தாண்டு
ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை சஷ்டி திதியில், திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, அதிகண்ட யோகம், தைதுளை கரணத்தில் குரோதி தமிழ் வருட பிறப்பு உதயமாகிறது. சித்திரை மாதம் சூரியன் மேஷத்தில் உச்சமாகி அமர்கிறர். இந்த ஆண்டு புத்தாண்டின் சிறப்பு என்னவென்றால், குருவும் சூரியனுடன் அமர்ந்துள்ளார் என்பதுதான். ஏனென்றால், இது மிகப்பெரிய அரிய கோச்சார அமைப்பு. 

குருவுடன் உச்ச சூரிய சேர்க்கை என்பது அரிதான நிகழ்வு, இது 12 ஆண்டுக்கு ஒரு முறையே நடைபெறும் என்பதால், இந்த குரோதி புத்தாண்டு பலருக்கும் நன்மையாகவே மலரும். குரு - சூரியன் இணைவு, சூரியனால் ஏற்படும் பல தோஷங்களை நீக்கிவிடும். சூரியன் உச்சமாகும் நிலையில் அவருடன் குருபகவான் உள்ளதால் ஆரோக்கியம் மேம்படும். அறிவு கூர்மையாகும். குழந்தை பேரு சிறக்கும். நிர்வாகத்திறன் மேம்படும்.

ஶ்ரீ குரோதி  வருஷம் வெண்பா

“அறுபது வருட வெண்பா” என்று தமிழ் ஆண்டுகள் தொடர்பான வெண்பா இடைக்காடர் என்ற சித்தரால் பாடப்பட்டது. ஶ்ரீ குரோதி தமிழ் புத்தாண்டு 60 ஆண்டுகளில் 38வது ஆண்டு ஆகும்.  

”கோரக் குரோதி தனிற் கொள்ளி மிகுங் கள்ளரினால் பாரிற் சனங்கள் பயமடைவார் - கார்மிக்க அற்பமழை பெய்யுமே மஃகங்குறையுமே சொற்பவிளையுண்டெனவே சொல்”.  

மேலும் படிக்க | நவ பஞ்சம யோகம்... அதிர்ஷ்ட மழையில் நனைய போகும் சில ராசிகள்

ஶ்ரீ குரோதி வெண்பா விளக்கம்

குரோதி தமிழ் ஆண்டு கோரமான வருடம். எங்கும் கொள்ளை களவு பகை பெருகும் என்று இந்த வெண்பா கூறுகிறது. திருடர்கள் மக்களை தாக்குவார்கள், பயம் மிகுதியாகும். மழை குறைவாகவே பொழியும் என்பதால் உணவுப் பொருள் பஞ்சம் ஏற்படும் என்று குரோதி வருட பஞ்சாங்க வெண்பா கூறுகிறது. 

ஶ்ரீ குரோதி தமிழ் புத்தாண்டு 60 ஆண்டுகளில் 38வது ஆண்டு ஆகும். இந்தியாவில் பிரபலமான வானியல் நூலான வேதாங்க சோதிடத்தில் அறுபது ஆண்டுகளின் பட்டியல் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரபவ முதல் அட்சய வரை 60 ஆண்டுகளின் பட்டியல் இது.

01.  பிரபவ 

 02.  விபவ   

03.  சுக்ல     

04.  பிரமோதூத

05.  பிரசோற்பத்தி   

06.  ஆங்கீரச     

07.  ஸ்ரீமுக 

08.  பவ     

09.  யுவ   

10.  தாது     

11.  ஈஸ்வர 
12.  வெகுதானிய     

13.  பிரமாதி       

14.  விக்கிரம 

15.  விஷு     

16.  சித்திரபானு   

17. சுபானு

18.  தாரண 

19.  பார்த்திப 

20. விய 

21. சர்வசித்து

22.  சர்வதாரி 

23.  விரோதி 

24. விக்ருதி 25. 

கர   26.  நந்தன 

27.  விஜய 

28.  ஜய 

29.  மன்மத   

30.  துன்முகி 

31.  ஹேவிளம்பி

32.  விளம்பி 

33.  விகாரி 

34.  சார்வரி 

35. பிலவ 

36. சுபகிருது

37. சோபகிருது 

38.  குரோதி 

39.  விசுவாசுவ

40. பரபாவ                      

41.  பிலவங்க 

42. கீலக

43.சௌமிய

44.  சாதாரண 

45.  விரோதகிருது

46.  பரிதாபி

47.  பிரமாதீச 

48.  ஆனந்த

49.  ராட்சச

50.  நள

51.  பிங்கள 

52.  காளயுக்தி

53.  சித்தார்த்தி

54.  ரௌத்திரி 

55.  துன்மதி

56.  துந்துபி

57.  ருத்ரோத்காரி 

58.  ரக்தாட்சி

59.  குரோதன 

60.  அட்சய

மேலும் படிக்க | அள்ளிக் கொடுப்பார் ராகு - கேது! இவர்களுக்கு குரோதி வருடம் அட்டகாசமாய் இருக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News