சுக்கிரன் பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: செல்வம், செழிப்பு, பொருள் மகிழ்ச்சி, அழகு, இளமை, காதல், உடல்நலம் போன்றவற்றின் அடையாளமாக சுக்கிரன் கருதப்படுகிறார். சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக உள்ளார். சுக்கிரனின் அருள் ஒருவருக்கு இருந்தால் அவருக்கு உலக இன்பம், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி, வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் கௌரவம் ஆகியவை கிடைக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிட சாஸ்திரத்தில், சுக்கிரன் பெயர்ச்சியாகும் போதெல்லாம், பல ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். சிலர் ஏமாற்றத்தையும் சந்திக்க நேரிடும். இப்போது மார்ச் 12 ஆம் தேதி மேஷ ராசியில் கோச்சாரம் ஆகவுள்ளார். சுக்கிரனின் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் 4 ராசிக்காரர்கள் இதனால் அதிகப்படியான நற்பலன்களை அடைவார்கள். அவர்களது அதிர்ஷ்டம் மேம்படும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


சுக்கிரனின் பெயர்ச்சியால் அதிக நன்மைகளை பெறவுள்ள ராசிகள் 


ஆடம்பரப் பொருட்களை வாங்கலாம்


மேஷம்: 
சுக்கிரனின் சஞ்சாரம் காரணமாக, மேஷ ராசிக்காரர்களின் ஆளுமையில் பல சாதகமான மாற்றங்கள் வரப் போகின்றன. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து அதிக அன்பைப் பெறுவீர்கள். நீங்கள் பல ஆடம்பர பொருட்களை வாங்க வாய்ப்பு கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் வாழ்க்கைத்துணை மீதான அன்பு அதிகரிக்கும். இன்னும் தனிமையில் இருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயமாகலாம். 


பணத்தை சேமிப்பதில் வெற்றி கிடைக்கும்


மீனம்: 
மீன ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அவர்கள் தங்கள் ஆளுமையால் மக்களைத் தங்கள் பக்கம் ஈர்ப்பார்கள். பல்வேறு உணவு வகைகளை சுவைப்பதில் நாட்டம் அதிகரிக்கும், அதற்காக நீங்கள் செலவழிக்கும் பணத்தின் அளவும் அதிகரிக்கும். எனினும், பண வரவும் அதிகமாக இருக்கும் என்பதால், இந்த காலத்தில் அதிக பணத்தை மிச்சப்படுத்துவீர்கள். 


மேலும் படிக்க | 12 ஆண்டுக்கு பிறகு கிரகங்களின் மகா சங்கமம்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும் 


குடும்ப உறுப்பினர்களுடன் உங்கள் உறவு வலுவாக இருக்கும். புதிய தொழிலில் முதலீடு செய்யலாம். உங்கள் ஆரோக்கியத்தை குறிப்பாக தொண்டைப்பகுதியை கவனித்துக் கொள்ளுங்கள்.


செழிப்பும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்


மிதுனம்: 
சுக்கிரன் கிரகம் செல்வத்தையும் உடல் அழகையும் குறிக்கிறது. ஆகையால் சுக்கிரன் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பொருள்சார்ந்த இன்பங்களைக் கொண்டுவரும். இறக்குமதி-ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் பெரும் பலன்களைப் பெறுவார்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். காதல் வாழ்க்கைக்கு நேரம் நன்றாக இருக்கும், உறவுகளில் உற்சாகம் அதிகரிக்கும்.


தனிமையில் இருப்பவர்கள் புதிய உறவில் ஈடுபடலாம்


துலாம் ராசி: 
தனிமையில் உள்ளவர்களுக்கு, சுக்கிரன் பெயர்ச்சி சாதகமான பலன்களைத் தரும். அவர்கள் ஒரு புதிய உறவில் இணைக்கப்படலாம். திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கையை முழுமையான மகிழ்ச்சியுடன் அனுபவிப்பார்கள். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் மற்றும் உங்கள் வாழ்க்கை துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். உங்களை மேம்படுத்த உங்கள் ஆளுமையில் கவனம் செலுத்துவீர்கள். இதற்கு முன்பை விட அதிக பணம் செலவிடலாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Mars Transit: செவ்வாயின் செல்வ வரத்தால் கோடி கோடியாய் அள்ளப்போகும் 4 ராசிக்காரர்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ