மீனத்தில் சுக்கிரன் சஞ்சாரம்: இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை, அமோகமான வாழ்வு

Shukra Gochar: சுக்கிரனின் இந்த மாற்றத்தால் ஐந்து ராசிக்காரர்கள் அதிகப்படியான நற்பலன்களைப் பெறுவார்கள். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 15, 2023, 06:06 PM IST
  • கன்னி ராசியின் ஏழாம் வீட்டில் சுக்கிரனின் பெயர்ச்சி நடைபெறும்.
  • கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும்.
  • பணியில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன.
மீனத்தில் சுக்கிரன் சஞ்சாரம்: இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை, அமோகமான வாழ்வு title=

மீனத்தில் சுக்கிரன் பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரன் கிரகம் ஒரு முக்கிய கிரகமாக கருதப்படுகிறது. சுக்கிரன் மீனம், ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக உள்ளது. மேலும் இந்த கிரகம் தைத்யகுருவாகவும் கருதப்படுகிறது. இதனுடன், சுக்கிரன் லாபத்தின் காரணி என்று அழைக்கப்படுகிறது. சுக்கிரன் கிரகம் நம் வாழ்வில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும் என்று ஐதீகம். மீனத்தில் உச்சத்தில் இருக்கும் சுக்கிரன் கன்னி ராசியில் நீச்சமாக உள்ளார். மேலும் சுக்கிரன் சனி, புதன் மற்றும் கேதுவுடன் நட்புறவுடனும், சூரியன், சந்திரன் மற்றும் ராகுவுடன் பகையுணர்வுடனும் இருக்கிறார். 

அனைத்து கிரகங்களையும் போலவே, சுக்கிரனும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு தனது ராசியை மாற்றுகிறார். பொதுவாகவே அனைத்து கிரகங்களின் ராசி மாற்றங்களும் அனைத்து ராசிகளையும் பாதிக்கும். சுக்கிரனின் ராசி மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

பஞ்சாங்கத்தின்படி, பிப்ரவரி 15, 2023, அதாவது இன்று இரவு 7.43 மணிக்கு, சுக்கிரன் கும்ப ராசியில் இருந்து அதன் உச்ச ராசியான மீனத்திற்கு மாறுகிறார். முன்னதாக ஜனவரி மாதம் ஜனவரி 22ம் தேதி சுக்கிரன் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறினார். இதைத் தொடர்ந்து இன்று சுக்கிரன் கும்ப ராசியை விட்டு மீன ராசியில் நுழையவுள்ளார். சுக்கிரனின் இந்த மாற்றத்தால் ஐந்து ராசிக்காரர்கள் அதிகப்படியான நற்பலன்களைப் பெறுவார்கள். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

ரிஷபம்: 

ரிஷப ராசியில் சுக்கிரன் பதினொன்றாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். சுக்கிரன் சஞ்சாரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு பணவரவை அதிகரிக்கச்செய்யும். மேலும் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். நீண்ட நாட்களாக உங்கள் பணியில் இருந்து வந்த தடைகள் நீங்கும். சுக்கிரனின் பெயர்ச்சி உங்கள் ராசிக்கு காதல் வாழ்க்கை, வேலை, தொழில், கட்டிடம் மற்றும் வாகனம் வாங்கும் யோகம் ஆகியவற்றுக்கு பலன் தரும்.

மேலும் படிக்க | கும்பத்தில் 3 பெரிய கிரகங்களின் சேர்க்கை, இந்த 3 ராசிக்காரர்கள் சரவெடி ஜாக்பாட்

கடகம்: 

சுக்கிரன் கடகத்தின் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிப்பதால், உங்கள் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். பிரச்சினைகள் நீங்கும். பணப்பற்றாக்குறை சரியாகும். வெற்றி கிட்டும், தொழிலில் லாபம் உண்டாகும்.

சிம்மம்: 

சிம்ம ராசியின் எட்டாம் வீட்டில் சுக்கிரன் நுழைவதால், உங்களுக்கு பண பலன்கள் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக அமையும். வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

கன்னி: 

கன்னி ராசியின் ஏழாம் வீட்டில் சுக்கிரனின் பெயர்ச்சி நடைபெறும். கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். பணியில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் மனைவியுடன் இனிமையாக நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.

மீனம்: 

சுக்கிரன் மீன ராசியில்தான் பெயர்ச்சியாக உள்ளார். மேலும், மீனம் சுக்கிரனின் உச்ச ராசியாகும். சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் உங்கள் ராசியில் இருக்கும். உங்கள் பேச்சில் இனிமை இருக்கும், அதனால் உறவுகள் இனிமையாக மாறும். தொழில்-வியாபாரத்திலும் ஏற்றம் உண்டாகும்.

மேலும் படிக்க | சனி உதயம்: இந்த ராசிகளுக்கு அதிரடி அதிர்ஷ்டம், சரவெடி வெற்றி, உங்க ராசி என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News