Mars Transit: செவ்வாயின் செல்வ வரத்தால் கோடி கோடியாய் அள்ளப்போகும் 4 ராசிக்காரர்கள்

Mangal Gochar March 13: செவ்வாய் மார்ச் 13ம் தேதியன்று தனது ராசியை மாற்றப் போகிறார். மகர ராசிக்காரர்களுக்கு வெற்றியைத் தேடித்தரும் செவ்வாய், வாக்குவாதங்களில் ஈடுபட்டால் காலை வாரிவிடுவார் என்பதால் கவனம் தேவை 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 2, 2023, 07:15 AM IST
  • கூரையை பிய்த்துக் கொண்டு செல்வத்தை கொட்டும் செவ்வாய் பெயர்ச்சி
  • மகர ராசியினருக்கு ஜாக்பாட்
  • சிம்ம ராசியினரை சீக்கிரம் செட்டில் செய்யும் செவ்வாய்
Mars Transit: செவ்வாயின் செல்வ வரத்தால் கோடி கோடியாய் அள்ளப்போகும் 4 ராசிக்காரர்கள் title=

Mars Transit 2023: ஜோதிட சாஸ்திரத்தில், ஒவ்வொரு கிரகத்தின் ராசி மாறும் நேரமும் குறிப்பிடப்பட்டுள்ளது. போதும் பலன்கள் மாறும். மங்களகாரகர் எனப்படும் செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சியானது வாழ்க்கையின் பல முக்கிய அம்சங்களை பாதிக்கிறது. செவ்வாய் கிரகம் மகர ராசிக்குள் நுழைவதால், அனைத்து ராசிக்காரர்களுக்கும் பலவிதமான மாற்றங்கள் ஏற்படும்.

எனினும், 4 ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இந்த செவ்வாய் சஞ்சாரம் எந்த ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் பொழியப்போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு, பணியாளர்களுக்கு சக ஊழியர்களுடன் போட்டி இருக்கலாம், அதில் வெற்றி கிடைக்கும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெறலாம். ஏப்ரல் 15 க்குப் பிறகு, வேலையில் கவனமாக இருக்கவும். இல்லையெனில் உங்கள் தலைமையிடம் அதிருப்தியை சம்பாதிக்க வேண்டியிருக்கும்.

தொழில் புரிபவர்களுக்கு, வியாபாரத்தில் நிலவும் சச்சரவுகள் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கும். புதிய நபர்களுடன் ஏற்படும் தொடர்பால் தொழில் விருத்தியடையும். பரம்பரையாக தொழில் செய்து வருபவரக்ளுக்கு சற்று  பின்னடைவு ஏற்படும்.

ஏப்ரலில் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் மற்றும் எதிர்ப்புகள் எழலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும், ஆனால் உற்சாகம் குறைவாகவே இருக்கும்.

மேலும் படிக்க | மிதுன ராசியில் செவ்வாய்! பங்குனியில் பட்டையை கிளப்பப் போகும் ராசி இது தான்!

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு, ஆற்றலைக் கொடுக்கும் செவ்வாய், முழு தைரியத்துடன் பணிகளை முடிக்கும் ஆற்றலையும் தருவார்.. இத்துடன் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணிகளும் நிறைவடையும்.

உடன் பிறந்தவர்களுடனான உறவில் ஏற்ற தாழ்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இருப்பினும், தேவைப்படும் நேரத்தில் அவர்கள் ஆதரவௌ கிடைக்கும். ஆரோக்கியத்திலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

மிதுனம்
செவ்வாய் பெயர்ச்சி உங்கள் ஆற்றலை அதிகரிக்கும், ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குடும்பத்தினரின், அதிலும் குறிப்பாக தாயின் முழு ஆதரவையும் பெறுவீர்கள், ஆனால் நீங்கள் ஆரோக்கியமாக இருந்தாலும், குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

மிதுன ராசியில் செவ்வாய் சஞ்சாரம் செய்யும் போது, ​​சொத்து மூலம் பண லாபம் கிடைக்கும். நிலம் வாங்க அல்லது விற்க நினைத்தால், இந்த நேரம் சாதகமாக இருக்கும். பணிவாக நடந்துக் கொள்வது நல்லது. வாய் வார்த்தைகளை கட்டுப்பாட்டுடன் பிரயோகிப்பது நிம்மதியைக் கொடுக்கும்.  

மேலும் படிக்க | தோஷங்கள் அனைத்தையும் நீக்கி, சகல செல்வங்களையும் கொடுக்கும் கோபூஜை!

கன்னி
செவ்வாய் உங்கள் ஜாதகத்தில் மூன்றாவது மற்றும் எட்டாம் வீட்டிற்கு அதிபதி. மூன்றாவது வீடு உடன்பிறந்தவர்களைக் குறிக்கிறது மற்றும் எட்டாவது வீடு நிச்சயமற்ற தன்மையையும் இரகசியத்தையும் குறிக்கிறது. மிதுன ராசியில் செவ்வாய் சஞ்சாரம் உங்கள் பத்தாம் வீட்டில் இருக்கும் தொழிலைக் குறிக்கும். இந்த பெயர்ச்சியின் விளைவாக, தொழில் வாழ்க்கையில் நன்மைகளைப் பெறுவீர்கள்.

ஆற்றல் நிறைந்தவராக இருப்பீர்கள் மற்றும் தொழில் வாழ்க்கையில் சிறப்பாக செயல்பட முடியும். உங்கள் கடின உழைப்பையும் திறமையையும் உங்கள் மேலதிகாரி மிகவும் பாராட்டுவார். இது தவிர புதிய பொறுப்புகளையும் பெறலாம்.  

மேலும் படிக்க | சகல சங்கடங்களையும் போக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! கடைபிடிக்கும் முறை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News