ஜூன் 15 சூரியன் ராசி மாற்றம்; இவர்களுக்கு கஷ்ட காலம் ஆரம்பிக்கப் போகுதுதாம்
Surya Rashi Parivartan: சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுகிறார். அதன்படி ஜூன் மாதம், 15ம் தேதி சூரிய பகவான் தனது ராசியை மாற்றுகிறார்.
ஜோதிடத்தில் சூரியனுக்கு தனி இடம் உண்டு. சூரிய கடவுள் அனைத்து கிரகங்களுக்கும் ராஜா என்று அழைக்கப்படுகிறார். சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுகிறார். அதன்படி இந்தக மாதம் அதாவது ஜூன் மாதம், 15ம் தேதி சூரிய பகவான் ரிஷப ராசியை விட்டு மிதுன ராசியில் பிரவேசிக்கப் போகிறார். சூரியனின் ராசி மாற்றத்தால் அனைத்து ராசிக்காரர்களுக்கும் சுப, அசுப பலன்கள் ஏற்படும்.
இந்த நிலையில் சூரியன் மிதுன ராசியில் நுழைவதால் அனைத்து ராசிகளின் நிலை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம். எனவே மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு என்ன பலன் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | விரைவில் சனி தசை; சனிபகவானின் பிடியில் இந்த 2 ராசியினர் சிக்குவார்கள்
மேஷம் - பேச்சில் இனிமை இருக்கும். முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்பு கூடும். அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருக்கும். குழந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உரையாடலில் சமநிலையுடன் இருங்கள். முன்னேற்றப் பாதை அமையும். தாயிடமிருந்து பணம் கிடைக்கும்.
ரிஷபம் - மனதில் கோபம்-திருப்தி ஏற்படும் தருணங்களை உணரலாம். மனம் கலங்கும். தொழில் நிலை மேம்படும். வருமானம் அதிகரிக்கும். நண்பரின் உதவியால் வேலை வாய்ப்பு கிடைக்கும். இடமாற்றமும் சாத்தியமாகும். உடல்நலம் சம்பந்தமாக பிரச்சனைகள் வரலாம்.
மிதுனம் - மனதில் ஏமாற்றமும், அதிருப்தியும் ஏற்படும். தன்னம்பிக்கையுடன் இருங்கள். தேவையற்ற கோபத்தைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் சிரமங்கள் வரலாம். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம்.
கடகம் - கடக ராசிக்காரர்களின் நம்பிக்கை மற்றும் விரக்தி உணர்வுகள் மனதில் இருக்கலாம். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் வயதான பெண்மணி மூலம் பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு. பணியிடத்தில் சிரமங்கள் இருக்கலாம்.
சிம்மம் - மன அமைதி ஏற்படும். கல்வி அல்லது அறிவுசார் வேலைகளில் ஆர்வம் இருக்கும். ஆடைகள் மீதான போக்கு அதிகரிக்கலாம். உத்தியோகத்தில் உத்தியோகஸ்தர்களிடம் நன்மதிப்பைப் பேணவும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இனிப்பு உணவில் ஆர்வம் கூடும். பணிச்சுமை அதிகரிக்கலாம்.
கன்னி - வியாபார நடவடிக்கைகளில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் வரலாம். நண்பர்களின் ஆதரவையும் பெறுவீர்கள். லாபமும் அதிகரிக்கும். குடும்பப் பொறுப்புகள் கூடும். பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். குழந்தை மகிழ்ச்சி அதிகரிக்கும்.
துலாம் - தேவையற்ற கோபம் மற்றும் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கல்விப் பணிகளில் வெற்றி பெறுவீர்கள். குடும்ப பிரச்சனைகள் உங்களை தொல்லை செய்யலாம். குடும்பத்துடன் மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் திட்டம் நிறைவேறும்.
விருச்சிகம் - மனதில் ஏமாற்றமும், அதிருப்தியும் ஏற்படும். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள். உத்தியோகம் மாறுவதற்கான வாய்ப்புகள் கூடும். சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
தனுசு - பொறுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள். வேலை சுமை அதிகாரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆடைகள் மீதான போக்கு அதிகரிக்கலாம். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்ற பாதை அமையும்.
மகரம் - தன்னம்பிக்கை நிறைந்திருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கல்விப் பணிகளில் கவனம் செலுத்துவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். குடும்பத்துடன் புனித யாத்திரை செல்லலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.
கும்பம் - கல்விப் பணிகளில் மகிழ்ச்சியான முடிவுகள் ஏற்படும். வேலை, தேர்வு, நேர்காணல் போன்றவற்றில் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். சுவையான உணவில் ஆர்வம் கூடும்.
மீனம் - கல்விப் பணிகளில் கவனம் செலுத்துங்கள். பணியிடத்தில் அதிக உழைப்பு இருக்கும். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். அதிகப்படியான கோபத்தைத் தவிர்க்கவும். உத்தியோகம் மாறுவதற்கான வாய்ப்புகள் கூடும். மன அழுத்தத்தைத் தவிர்க்கவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | அக்டோபர் 23 வரை சனி வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR