குரு ராகு சேர்க்கை, ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசி மற்றும் இயக்கத்தையும் மாற்றுகிறது. கிரகங்களின் இந்த மாற்றங்கள் மனிதர்களின் வாழ்வில் பல வித தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இந்த தாக்கங்கள் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும் சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் அளிக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிரகங்களின் அதிபதியாகக் கருதப்படும் வியாழன் ஏப்ரல் 22ஆம் தேதி தனது சுய ராசியான மீனத்தில் இருந்து மேஷ ராசிக்கு மாறவுள்ளார். நிழல் கிரகமாக கருதப்படும் ராகு ஏற்கனவே மேஷ ராசியில் உள்ளார். மேஷ ராசியில் இவ்விரண்டு கிரகங்களின் சேர்க்கையால் குரு சண்டாள யோகம் உருவாகும். இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு தீய பலன்கள் உண்டாகும்.


குரு சண்டாள யோகம் எந்தெந்த ராசிகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என இந்த பதிவில் காணலாம். 


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு தேவகுரு மற்றும் ராகு சேர்க்கை சிறிதும் சிறப்பாக இருக்காது. ஏப்ரல் 22ம் தேதிக்கு பிறகு இந்த ராசியில் இரு கிரகங்களும் வருவதால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். இந்த நேரம் முதலீட்டுக்கு ஏற்றதாக இருக்காது. பண இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எந்தவொரு விவாதத்திலும் ஈடுபடாமல், களத்தில் கவனமாக செயல்படுங்கள்.


மேலும் படிக்க | சனி அஸ்தமனம்: மார்ச் 6 வரை இந்த ராசிகளுக்கு சோதனை காலம், சூதானமா இருங்க!!


மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு குரு, ராகு சேர்க்கையால் உருவாகும் குரு சண்டாள யோகம் சோதனைகளில் பாரத்தை சுமத்தும். இந்த காலத்தில் பெருமளவு பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் உள்ள வரையில், எதிலும் முதலீடு செய்வதைத் தவிர்த்து, பணப் பரிவர்த்தனைகளில் சிறிது  கவனமாக இருங்கள். இந்த காலத்தில் இந்த ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.


கடக ராசி


குரு மற்றும் ராகு இணைவது கடக ராசிக்காரர்களுக்கு பாதகமான பலன்களைத் தரும். இந்த ராசிக்காரர்களுக்கு இந்த கூட்டணி மிகவும் மோசமானதாக இருக்கும். இவர்கள் வாழ்வில் பல சிரமங்கள் எழும், ஒவ்வொரு அடியிலும் சிரமங்களை சந்திக்க வேண்டி வரும். இந்த நேரத்தில், உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்தவும், குறிப்பாக எதிரிகளிடமிருந்து கவனமாக இருக்கவும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு-சாண்டள தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ