வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு-சாண்டள தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள்..!!

குரு ராகு மற்றும் கேதுவின் சேர்க்கையால் உருவாகும் குரு சண்டாள தோஷத்தின் பாதிப்பு என்ன, அதை எவ்வாறு நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 11, 2023, 12:25 AM IST
வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு-சாண்டள தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள்..!! title=

ஒருவரின் ஜாதகத்தில் பல சுப, அசுப யோகங்கள் உருவாகும். இந்த யோகங்கள் கிரகங்களின் சேர்க்கையால் யோகங்களும், தோஷங்களும் உருவாகின்றன. மங்கள யோகம் வாழ்க்கையில் சாதகமான விளைவைக் கொண்டிருக்கிறது. மறுபுறம், அசுப யோகம் வாழ்க்கையில் பல வகையான சிரமங்களை உருவாக்குகிறது. அப்படிப்பட்ட ஒரு யோகம் குரு, ராகு மற்றும் கேதுவின் சேர்க்கையால் உருவாகிறது. இது குரு சண்டாள தோஷம் எனப்படும். குரு சண்டாள தோஷத்தின் பாதிப்பு என்ன, அதை எவ்வாறு நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.

முதல் வீட்டில் குரு - ராகு

ஜாதகத்தின் முதல் வீட்டில் குருவும் ராகுவும் ஒன்றாக அமர்ந்திருந்தால், அந்த மனிதனுக்கு சந்தேகப்படும் தன்மை உண்டாகிறது. இதனுடன், அந்த நபர் சட்டவிரோதமாக பணம் சம்பாதிப்பதில் ஈடுபடும் வாய்ப்பும் அதிகம் ஏற்படுகிறது.

மேலும் படிக்க | இன்றைய ராசிப்பலன்: பண மழையில் நனையப்போகும் ராசிகள்!

இரண்டாம் வீட்டில்  குரு - ராகு

ஜாதகத்தின் இரண்டாம் வீட்டில் குரு சண்டாள யோகம் அமைந்தால், அந்த நபர் செல்வந்தராக இருப்பார். ஆனால் மகிழ்ச்சிக்காகவும் ஆடம்பரத்திற்காகவும் பணத்தை செலவிடுபவராக இருப்பார். இது தவிர, குரு பலவீனமானமாக, இருப்பதால் நபர் போதைக்கு அடிமையாகவதாக இருப்பார்.

மூன்றாவது வீட்டில் குரு - ராகு

ஜாதகத்தின் மூன்றாவது வீட்டில் குருவும் ராகுவும் சந்திப்பதால், ஒரு நபர் வலிமையும் தைரியமும் கொண்டவராகவும் இருக்கிறார். ஆனால் தவறான செயல்களில் பெயர் போனவராக இருப்பார். மேலும், அந்த நபர் பந்தயம், சூதாட்டம் போன்றவற்றின் மூலம் பணம் சம்பாதிக்க முயற்சிப்பவராக இருப்பார்.

 பரிகாரங்கள்

குரு சண்டாள தோஷம் நீங்க, குரு மற்றும் ராகு சாந்தி பாராயணம் செய்ய வேண்டும். இது தவிர, பெற்றோருக்கு சேவை செய்ய வேண்டும். வீட்டில் அல்லது கோவிலில் விஷ்ணுவை வழிபடுவது குரு சண்டாள தோஷத்தின் எதிர்மறை விளைவுகளை குறைக்கிறது. திங்கட்கிழமை இரண்டு முகம் ருத்ராட்சம் அணிவதும் நன்மை தரும். மேலும் விநாயகப் பெருமானை தொடர்ந்து வழிபடுவதால் குரு சண்டாள தோஷம் நீங்கும். குரு மந்திரம் 'ஓம் ப்ரம் பிரிம் ப்ரௌன் சஹ குர்வே நமஹ' என்ற மந்திரத்தை தினமும் உச்சரிக்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 17 ஆண்டுகள் நீடிக்கும் புதன் மகாதிசை! ராஜ போக வாழ்க்கை அமையும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News