வார ராசிபலன்: அடுத்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள் இவைதான், தினம் தினம் மகிழ்ச்சி மழை

Weekly Horoscope: பிப்ரவரி மாதத்தின் மூன்றாவது வாரம் சிலருக்கு விரும்பிய வெற்றியைத் தரும். சில ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 10, 2023, 04:57 PM IST
  • கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பல பிரச்சனைகள் விலகும்.
  • நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தால், அதன் முடிவு உங்களுக்கு சாதகமாக வரலாம்.
  • மதிப்பும் மரியாதை அதிகரிக்கும்.
வார ராசிபலன்: அடுத்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள் இவைதான், தினம் தினம் மகிழ்ச்சி மழை title=

வார ராசிபலன் - பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 19 2023 வரை: வாராந்திர ஜாதகத்தின்படி, பிப்ரவரி மாதத்தின் மூன்றாவது வாரம் சிலருக்கு விரும்பிய வெற்றியைத் தரும். சில ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் உதவியால், இவர்களின் அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக நடந்துமுடியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். 

ஒவ்வொரு வாரமும் அந்த 7 நாட்களில் இருக்கும் கிரகங்களின் நிலை, இயக்கம் மற்றும் மாற்றங்களின் காரணமாக சில ராசிகளுக்கு அனுகூலமான நேரமும், சில ராசிகளுக்கு அனுகூலமற்ற நேரமும் உருவாகின்றது. அந்த வகையில், அடுத்த வாரம் (பிப்ரவரி 13 முதல் 19 வரை) எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும்?  யார் அடுத்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள் என இந்த பதிவில் காணலாம். 

மேஷம்: 

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வேலையில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பணிவாகவும், கோவமில்லாமலும் பேசினால், அனைத்து பணிகளும் எளிதில் முடிவடையும். முதலீடு செய்வதற்கு முன் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

மேலும் படிக்க | சூரியன்-சனி சேர்க்கை: இந்த ராசிகளுக்கு இக்கட்டான நேரம், அதிக எச்சரிக்கை தேவை!!

ரிஷபம்: 

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இந்த மாதம் இவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக இருக்கும். இவர்கள் தங்கள் தொழில் தொடர்பான சில நல்ல தகவல்களைப் பெறக்கூடும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பெரிய லாபம் கிடைக்கலாம். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. பணிபுரியும் பெண்கள் அதிக மரியாதை பெறலாம். காதல் துணையுடன் நல்ல பிணைப்பு காணப்படும்.

கன்னி: 

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பல பிரச்சனைகள் விலகும். நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தால், அதன் முடிவு உங்களுக்கு சாதகமாக வரலாம். மதிப்பும் மரியாதை அதிகரிக்கும். முதலீடு மூலம் லாபம் உண்டாகும். காதல் வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும் மிக ஆனந்தமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான பொழுதை கழிப்பீர்கள். 

துலாம்: 

துலா ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் நல்ல நேரமாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பரிபூரண ஆதரவு கிடைக்கும். அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு நேரம் சாதமகாக இருக்கும். அலுவலகத்தில் பெரிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். பயணங்கள் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும். இந்த பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இன்றைய ராசிப்பலன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News