இந்த ராசிகள் மீது குருவின் சுப பார்வை: பணம், பதவி, புகழ்... அனைத்தும் தேடி வரும்
Guru Shubh Drishti 2023: குருவின் சுபமான ஒன்பதாம் பார்வை, அதாவது நவமி திருஷ்டி சில ராசிக்காரர்களுக்கு திடீர் செல்வச் செழிப்பையும் அதிர்ஷ்டத்தையும் உருவாக்கித் தரும்.
குரு பகவானின் சுப திருஷ்டி, ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசியை மாற்றுகிறது. ராசி மட்டுமின்றி கிரகங்களின் இயக்கங்களும், அஸ்தமன, உதய நிலைகளும் கூட அவ்வப்போது மாறுகின்றன. அதே போல், கிரகங்கள் அவ்வப்போது சில ராசிக்காரர்கள் மீது தங்கள் சுப பார்வையை வீசுகின்றன. அப்போது அந்த ராசிகளுக்கு அமோகமான சுப பலன்கள் ஏற்படுகின்றன.
குரு பெயர்ச்சி
அதிர்ஷ்டம், மகிழ்ச்சி மற்றும் திருமணத்தின் காரணியான குரு பகவான் ஒரு வருடத்திற்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். இந்த ஆண்டு, ஏப்ரல் 22, 2023 அன்று, குரு தனது ராசியை மாற்றி மேஷ ராசியில் பெயர்ச்சியானார். இப்போது குரு மே 1, 2024 வரை மேஷத்தில் இருப்பார். மேஷ ராசியில் குரு இருப்பதன் காரணமாக, சில ராசிகள் மீது அவரது சுப பார்வை விழுகிறது. இந்த ராசிகள் மீது அவர் தனது கருணையையும் அருளையும் பொழிகிறார்.
குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், குறிப்பாக குருவின் சுபமான ஒன்பதாம் பார்வை, அதாவது நவமி திருஷ்டி சில ராசிக்காரர்களுக்கு திடீர் செல்வச் செழிப்பையும் அதிர்ஷ்டத்தையும் உருவாக்கித் தரும். இவர்கள் வாழ்வில் திடீர் செழிப்பு ஏற்படும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வியாழன் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும்
மேஷ ராசி:
தேவகுருவான வியாழனின் ஒன்பதாம் பார்வை மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்களைத் தரும். இவர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். தடைபட்டிருந்த வேலைகள் இப்போது நடந்து முடியும். அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுவீர்கள். தொழில்-வியாபாரத்திற்கு இது நல்ல நேரமாக இருக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படலாம். வருமானம் அதிகரிக்கும். வியாபாரம் நன்றாக நடக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம். சுப மற்றும் சமய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். அலுவலக வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும். நிதி ரீதியாகவும் ஸ்திரமாக இருப்பீர்கள். இந்த நேரத்தில் அதிர்ஷ்ட தெய்வம் கதவைத் தட்ட வாய்ப்புள்ளது.
மிதுன ராசி:
மிதுன ராசிக்காரர்கள் தேவகுருவான வியாழனின் ஒன்பதாம் பார்வையால் பெரிதும் நன்மை அடைவார்கள். திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நன்றாகப் பழகுவீர்கள். உறவு வலுவாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு இப்போது திருமணம் நிச்சயம் ஆகும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்தால் உங்கள் வேலையில் வெற்றி கிடைக்கும். உயர் பதவியில் இருப்பவர்களுடனான உறவுகள் நன்மைகளைத் தரும். புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நேரம் இது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மேலும் கடனாக கொடுத்த பணமும் திரும்ப கிடைக்கும். பண வரவு அதிகமாக இருக்கும்.
சிம்ம ராசி:
சிம்ம ராசிக்காரர்களுக்கு தேவகுரு வியாழன் மிகுந்த மகிழ்ச்சியையும் செல்வத்தையும் தருவார். அதிர்ஷ்டத்தின் உதவியால் அனைத்து காரியங்களும் நிறைவேறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த காலத்தில் பல நல்ல செய்திகள் உங்களைத் தேடி வரும். எதிர்பாராத இடத்திலிருந்து பண வரவு இருக்கும். இது உங்கள் வங்கி இருப்பை அதிகரிக்கும். சமயப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஜூலை மாத ராசி பலன்: புது வேலை கூடவே புரமோசன் கிடைக்கும்..முழு ராசிபலன் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ