Sukran Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் உள்ளது. கிரகங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. கிரக பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சில ராசிகளில் இதனால் சுப பலன்களும் சில ராசிகளில் பிரச்சனைகளும் ஏற்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரனுக்கு தனித்துவமான இடம் கொடுக்கப்பட்டுள்ளது. சுக்கிரன் உலக இன்பம், மகிழ்ச்சி, செல்வச் செழிப்பு, பண வரவு, அழகு, அன்பு ஆகியவற்றின் காரணியாக பார்க்கப்படுகிறார். ஜோதிட கணக்கீடுகளின் படி சுக்கிரனும் சூரியனைப் போல ஒரு மாத காலத்திற்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். ஜூலை 7ஆம் தேதி சுக்கிரன் கடக ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். ஒரு ஆண்டு காலத்திற்குப் பிறகு அவர் கடகத்தில் பெயர்ச்சியாவார். கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். பண வரவு அதிகமாகும். வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும். அனைத்து வெற்றிகளையும் பெறுவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.


கன்னி (Virgo)


சுக்கிரன் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். இந்த பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களின் லாபம் மற்றும் தன ஸ்தானத்தில் ஏற்படுகின்றது. ஆகையால் இந்த காலத்தில் பண வரவு அதிகமாகும். அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகரிக்கும். பணத்தை சேமிக்கவும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். முன்பு செய்த முதலீட்டுகளில் இருந்து இப்பொழுது லாபத்தை காண்பீர்கள். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். 


மேலும் படிக்க | அஷ்டம சனியும் அர்த்தாஷ்டம சனீஸ்வரரும்! சனி தோஷ பரிகாரங்களை செய்தால் துன்பம் தொலையும்!


துலாம் (Libra)


செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் சுக்கிரன் பெயர்ச்சி துலா ராசிக்காரர்களுக்கு சுபமானதாக இருக்கும். அலுவலகத்தில் நேரம் உங்களுக்கு சுகமானதாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருக்கும் துலா ராசிக்காரர்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். அலுவலகப் பணிகளில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் துலா ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் லாபம் அதிகமாகும். திரைப்படத்துறை, மாடலிங், மீடியா ஆகியவற்றில் உள்ள துலா ராசிக்காரர்கள் சுக்கிரன் பெயர்ச்சியால் அதிக லாபம் காண்பார்கள்.


விருச்சிகம் (Scorpio)


விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி அனுகூலமான பலன்களை அளிக்கும். இந்த காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவை பெறுவீர்கள். பண வரவு அதிகமாகும். பொருளாதார நிலை மேம்படும். இந்த காலத்தில் வெளிநாடுகளில் பல சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த பயணங்காளால் அனுகூலமான நன்மைகள் ஏற்படும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அலுவலகப் பணிகளில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஸ்ரீ சக்கரம் வழிபாட்டின் மகத்துவம்! லலிதா திருபுர சுந்தரியை வணங்கும் வழிமுறைகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ