Sri Chakra Worship : ஆதிபராசக்தியின் சூட்சும ரூபமான ஸ்ரீ சக்கரத்தின் நடுவில் உள்ள மையப்புள்ளியில் அரூப வடிவில், நடுநாயகமாக பார்வதி தேவி அமர்ந்திருக்கிறாள். சக்தியை மந்திர ஒலியினால் பூஜிக்கும் இடங்களில் ஸ்ரீசக்கரம் இருக்கும்
ஸ்ரீ சக்கர தேவியின் பெருமையையும், மேன்மையையும் எடுத்துக்கூறுகிறது லலிதா சஹஸ்ரநாமம். அன்னையை ஸ்ரீசக்கர வடிவில் தேவியை பூஜிப்பவர்களுக்கு சகல சௌபாக்கியமும் கிடைத்து வளமாய் வாழ்வார்கள்...
யந்திரங்களில் மிகவும் உயர்ந்ததும், சாமான்யங்களினால் எளிதில் வணங்கப்படக் கூடிய யந்திரம் ஸ்ரீ சக்ரம்.
ஸ்ரீ சக்ர பூர்ண மகாமேரு ஆகும். சில குறிப்பிட்ட காரண காரியங்களுக்காக ஸ்ரீ வித்யா பூஜை என்ற பெயரில் விஸ்தாரமாக செய்வதும் உண்டு.
சக்தி வாய்ந்த தேவியை உபாசித்தும், முறையான பூஜைகலும் செய்து வருபவர்கள், தேவியின் அருளை பெற்று நிம்மதியாக வாழலாம்
ஸ்ரீ சக்கர தேவியின் பெருமையையும், மேன்மையையும் கூறும் லலிதா சஹஸ்ரநாமத்தை தினமும் படித்து, தேவியை பூஜிப்பவர்களுக்கு சர்வ சௌபாக்கியமும் கிட்டும்
ஸ்ரீ சக்கரத்திற்கு மேலான யந்திரமோ, ஸ்ரீ வித்யாவுக்கு நிகரான மந்திரமோ, ஸ்ரீ லலிதாம்பிகைக்கு மேலான தெய்வமோ இல்லை
ஸ்ரீ சக்கரமும், ஸ்ரீ மஹா மேரு எனப்படும் யந்திரமும் ஒன்றுதான். ஸ்ரீ மஹா மேருவின் சமதளப்படுத்தப்பட்ட வடிவமே ஸ்ரீ சக்கரம் ஆகும்
பண்டாசுர வதத்திற்குப் பிறகு ஸ்ரீபுரம் என்னும் தன்னுடைய நகரத்தில் அன்னை அனைத்து தேவதைகளும் சூழ்ந்திருக்க சிவபெருமானுடன் லலிதாம்பிகை அமர்ந்திருந்தபோது, தேவியின் முகத்தில் இருந்து வாசினிகள் என்ற தேவதைகள் வெளிவந்தனர். அன்னையின் சக்தியை அந்த எட்டு வாசினிகளும் சொன்னவை தான் ஆயிரம் நாமங்களைக் கொண்ட ‘லலிதா சகஸ்ரநாமம்’ ஆகும்.
அப்போது உக்கிரமாக இருந்த பார்வதி தேவியின் உக்கிரத்தைத் தணிக்க சர்வேஸ்வரன் அந்த உக்கிரக் கலையையே ஸ்ரீசக்கரமாக ஸ்தாபித்து, ஆகர்ஷித்து அம்பிகைக்கு எதிரில் வைத்து அன்னையை சாந்தப்படுத்தினார். அப்போது, பார்வதி தேவி, அன்னை லலிதாம்பிகையாக உருமாறி உலகிற்கு காட்சி தந்தாள்.
சாந்தம் அடைந்த தேவி, வாசினிகள் சொன்ன சுலோகத்தை முறைப்படி கூறி தன்னை துதிப்பவர்களுக்கு, அந்த மந்திரமே தன்னிடம் வந்தடையும் பாதையாக அமையட்டும் எனக் கூறினார். அன்னையின் அருளை பெறுவதற்கு லலிதா சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்தால் போதுமானது