Guru Peyarchi Palangal 2024 : ஜோதிடத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றும். இந்த கிரங்களின் ராசி மாற்ற மிகவும் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. அதிலும் கிரகப் பெயர்ச்சி, நட்சத்திரப் பெயர்ச்சி, வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி, கிரகத்தின் உதயம், கிரகத்தின் அஸ்தமனம் போன்றவை மிகவும் முக்கியமான நிகழ்வுகளாகும். அந்த வகையில் நவகிரகங்களில் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படும் குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் ஆகியவற்றின் காரணி ஆவார். தற்போது இவர் இன்னும் 2 மாதங்களில் பெயர்ச்சியடையப் போகிறது. இதனால் எந்த ராசியினருக்கும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. இந்த கிரகத்தில் ஏற்படும் மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் முடிந்தவரை லாபகரமான பலன்களை மட்டுமே தரும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுமட்டுமின்றி இந்த குரு பெயர்ச்சியானது வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நிகழும் என்பதால், இந்த ஆண்டு வருகிற மே மாதம் 1 ஆம் தேதி மதியம் 02:29 மணிக்கு மேஷ ராசியில் இருந்து குரு விலகி ரிஷப ராசிக்கு (கார்த்திகை, ரோகிணி, மிருகஷீரிடம் உள்ளிட்ட நட்சத்திரங்களில் பயணம் செய்வார்) இடப் பெயர்ச்சி அடையப் போகிறார். இதன் தாக்கம் மூன்று ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான பலனைத் தரக்கூடும். இந்த ராசிக்காரர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை பெறுவார்கள். கிடைக்கும். இந்நிலையில் குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களின் பொற்காலம் ஆரம்பிக்கும் என்பதை தெரிந்து கொள்வோம் -


ரிஷப ராசி (Taurus Zodiac Sign) : சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜென்ம ராசியில் குரு வரப் போகிறது. இந்த குரு இடம் மாற்றத்தால் ரிஷபம் ராசிக்காரர்கள் அலுவலகத்தில் புரமோசன் கட்டாயம் கிடைக்கும். நிதி நிலை முன்பை விட மேம்படும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கலாம். சுப செலவுகள் அதிகரிக்கும். புதிய வேலைகளைத் தொடங்க மே மாதம் சாதகமாக இருக்கும். திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.


மேலும் படிக்க | 63 நாயன்மார்களுடன் ஆதியோகி தேர் பவனி! ஈஷாவுக்கு பாத யாத்திரை வந்த சிவ பக்தர்கள்!


சிம்ம ராசி (Leo Zodiac Sign) : சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சுப பலன் உண்டாகும். மேலும் பத்தாம் இடத்தில் அமரப்போகும் குருவால் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலன் கிடைக்கும். தொழிலை விரிவுப்படுத்தலாம். வாழ்க்கை துணையின் ஆதரவைப் பெறுவீர்கள்.


கன்னி ராசி (Virgo Zodiac Sign) :புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் லாபகரமான பலன் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் நிறைவடையும். தொழிலில் லாபம் உண்டாகும். முக்கிய பொறுப்புகளை பெறலாம். வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | அன்னை மகாலட்சுமியின் மனதிற்கு பிடித்த ராசிகள்... பணத்திற்கு பஞ்சம் என்பதே இருக்காது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ