சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் இவைதான்
Sukran Peyarchi Palangal: சிம்மத்தில் சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும்.
Sukran Peyarchi In Leo: ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்களுக்கும் ராசிகளுக்கும் நேரடி தொடர்பு உள்ளது. ஜோதிடத்தில் அனைத்து கிரகங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கிரகங்களில் ஏற்படும் மாற்றங்கள் ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், தீய விளைவுகளையும் ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவற்றுக்கு தனித்துவமான சிறப்புகளும் உள்ளன. கிரக மாற்றங்கள் கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. இந்த கிரக பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றது.
நவ கிரங்களில் சுக்கிரன் சுகமான வாழ்க்கை, காதல், திருமணம், குழந்தைகள், செழிப்பு, செல்வம் ஆகியவற்றின் காரணி கிரகமாக கருதப்படுகிறார். பல வித மகிழ்ச்சியையும், செழுமையையும் தரும் சுக்கிரன் தற்போது கடக ராசியில் இருக்கிறார். ஜூலை 31 ஆம் தேதி மதியம் 2:40 மணிக்கு சுக்கிரன் சிம்ம ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். ஜூலை 31 ஆம் தேதி சுக்கிரன் சிம்ம ராசியை அடையும் போது பல சுப பலன்கள் ஏற்படும். சுக்கிரன் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை இந்த ராசியில் இருப்பார். சிம்மத்தில் சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.
கடகம் (Cancer) - கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சியால் பண மழை கொட்டும், இதனால் லாபம் உண்டாகும். பொருளாதாரத்தை பொறுத்த வரை, லாப வாய்ப்புகள் கொட்ட வாய்ப்புள்ளது. உங்கள் தொழிலில் புதிய அடையாளத்தைப் பெறலாம். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படலாம். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கலாம்.
துலாம் (Libra) - சிம்ம ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி நடைபெற உள்ளதால் துலாம் ராசிக்காரர்களின் வாழ்வில் சில முக்கிய மாற்றங்கள் ஏற்படலாம். சுக்ரதேவரின் அருளால் புதிய வழியில் வருமானம் பெறலாம். குடும்பத்துடன் இனிமையாக பொழுதைக் கழிப்பீர்கள். நிதி ரீதியாக எந்த குறையும் ஏற்படாது. வியாபாரிகளுக்கு வியாபாரம் விரிவாக்க வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். வனிகர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.
விருச்சிகம் (Scorpio) - விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி மிகவும் சாதகமான பலனைத் தரும். இந்த நேரத்தில் உயர் அதிகாரிகளின் முழுமையான ஆதரவைப் பெறுவீர்கள். பணியிடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். செல்வாக்கு மிக்க நபரை சந்திக்க வாய்ப்பு பெறலாம். சம்பள உயர்வு பெறலாம். லாபம் உண்டாகும்.
கும்பம் (Aquarius) - சுக்கிரன் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு சுகபோகங்கள் மற்றும் வசதிகளை அள்ளித் தரும். கூட்டு தொழில் மூலம் லாபத்தைப் பெறுவீர்கள். வாழ்க்கைத்துணையின் ஆதரவைப் பெறுவீர்கள். திடீர் நிதி ஆதாயம் உண்டாகலாம். வியாபாரிகளுக்கு சாதகமாக நேரம் அமையும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ