ஜோதிடத்தில், எந்த கிரகத்தின் வக்கிரம் அல்லது மார்கி அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கிறது. ஜோதிடத்தில், சனி ஒரு கொடூரமான கிரகத்தின் பிரிவில் வைக்கப்படுகிறது. அதேபோல் கர்ம பலன்களை வழங்குபவர்கள் என்றும் இவரை அழைக்கப்பார்கள், ஏனென்றால் மக்களுக்கு அவர்களின் செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குகிறார் சனி பகவான். இதனுடன், அவர் நீதியின் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். பஞ்சாங்கத்தின்படி, 23 அக்டோபர் 2022 அன்று, சனி பகவான் மகர ராசிக்கு நகர்ந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனி மார்கி எப்போது நடந்தது ?
பஞ்சாங்கத்தின் படி, சனி பகவான் அக்டோபர் 23 ஆம் தேதி மகர ராசியில் பிற்போக்கு நிலையில் இருக்கிறார், மேலும் அவர் ஜனவரி 17, 2023 வரை இந்த நிலையில் இருப்பார். இதன் விளைவாக விருச்சிகம், தனுசு, கும்பம், மகரம் ராசிக்காரர்கள் சனி சஞ்சரிக்கும் வரை கஷ்ட காலத்தில் இருக்க வேண்டும்.


மேலும் படிக்க | நவம்பர் மாத ராசிபலன்: இந்த ராசிகள் மீது மாதம் முழுதும் பண மழை, லாபம் பெருகும்


சனியின் கோபத்தை தவிர்க்க , இந்த வழிமுறைகளை செய்யுங்கள்


சனியின் சஞ்சாரம் காரணமாக விருச்சிகம், தனுசு, கும்பம், மகரம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சனி தோஷம் உண்டாகும். சனிபகவானை மகிழ்விக்கவும், அவரது கோபத்தைத் தவிர்க்கவும், சனிக்கிழமையன்று சனிபகவானுக்கு கடுகு எண்ணெயை அர்ச்சனை செய்யுங்கள். இதனுடன் சனி கோவிலில் உள்ள சனிபகவான் முன் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றவும். மேலும் சனிக்கிழமையன்று, காலையில் ஆல மரத்துக்கு தண்ணீர் ஊற்றவும். மாலையில் எள் அல்லது கடுகு எண்ணெய் தீபம் ஏற்றவும்.


சனிப்பெயர்ச்சி பலன் 2023 எப்போது?
திருக்கணித பஞ்சாங்கத்தின் படி சனிப்பெயர்ச்சி ஜனவரி மாதம் 17ம் தேதி, செவ்வாய்க் கிழமை மாலை 6.04 மணிக்கு மகர ராசி அவிட்ட நட்சத்திரம் 2ம் பாதத்திலிருந்து, சனி தனது மற்றொரு சொந்த ராசியான கும்ப ராசி அவிட்ட நட்சத்திரம் 3ம் பாதத்திற்க்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.


அதே சனிப் பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின் படி வரும் சுபகிருது வருடம் பங்குனி மாதம் 15ம் தேதி (29 மார்ச் 2023) புதன் கிழமை அன்று பகல் 1.07 மணிக்கு மகரத்திலிருந்து, கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆக உள்ளார். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | திருமணத் தடையா? ராகு தோஷமா? ஏழில் ராகுவா? ராகு தோஷ நிவர்த்தி பரிகாரங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ