Astro Tips: புதன் மகாதசையில் அசுபமான பலன்களையும் சுபமாய் மாற்றும் எளிய பரிகாரங்கள்!
Bhudan Mahadhasai Effect : 17 ஆண்டுகள் நீடிக்கும் புதன் மகாதசையில், புத்திசாலித்தனம், அறிவு, வணிகம், தொழில் மற்றும் நிதி நிலை ஆகியவற்றில் சிறப்பான பலன்களை பெற உதவிக்குறிப்புகள்...
கிரகங்களில் இளவரசனாகக் கருதப்படும் புதன் ஜாதகத்தில் எந்த நிலையில் இருக்கிறார் என்பதைப் பொறுத்து வாழ்க்கையில் நாம் வாழும் நிலை முடிவாகும். புதனின் மகாதடை அல்லது அந்தர்தசை மனிதனின் வாழ்க்கையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு கிரகமும் ஜாதகத்தில் தனது இருப்பைப் பொறுத்து, 12 ராசிகளையும் பாதிக்கிறது. புதன் கிரகம் 25 நாட்கள் ஒரு ராசியில் சஞ்சரிக்கும், அதன் பிறகு மற்றொரு ராசியில் மாறுகிறது. செல்வம், புத்திசாலித்தனம், தகவல் தொடர்பு, தொழில் என முக்கியமான விஷயங்களுக்கு அதிபதியான புதன், ஒருவரின் ஜாதகத்தில் வலுவாக இருந்தால், ஒருவரின் புத்திக் கூர்மை அற்புதமாக இருக்கும்.
பகுத்தறிவைக் கொடுக்கும் புதன்
நல்ல பகுத்தறியும் ஆற்றல் உள்ளவர்கள் புதனின் ஆதிக்கம் பெற்றவர்காக இருப்பார்கள், இவர்கள் வியாபாரத்தில் நிறைய சம்பாதிக்கிறார்கள். அவர்களுக்கு ஜாதகத்தில் புதனின் மகாதசை தொடங்கும் போது நல்ல லாபம் ஈட்டுகிறார்கள். வேலையில் இருப்பவர்கள், செல்வாக்கு, சம்பள உயர்வு என பல நன்மைகளைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.
புதனின் மகாதசை 17 ஆண்டுகள்
புதனின் மகாதசை ஒருவருக்கு 17 ஆண்டுகள் நீடிக்கும் புதன் மகாதசையில், புத்திசாலித்தனம், அறிவு, வணிகம், தொழில் மற்றும் நிதி நிலை ஆகியவற்றில் சுப மற்றும் அசுப விளைவுகள் ஏற்படும். ஒருவரின் ஜாதகத்தில் புதன் சுப ஸ்தானத்தில் இருந்தால், 17 வருடங்கள் அருமையான வாழ்க்கை அமையும். இந்த காலகட்டத்தில் பணம் சம்பாதித்து, தேவையான சுகபோகங்களை அனுபவிக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கும். நிதி நிலை வலுப்பெறும். புத்திசாலித்தனமான செயல்பாட்டால் புகழ் வந்து சேரும்.
மேலும் படிக்க | ஏப்ரலில் மிகப்பெரிய கிரக மாற்றங்கள்: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் இவைதான்
ஆனால் ஒருவரின் ஜாதகத்தில் புதன் பலவீனமான நிலையில் இருந்தால், எதிர்மறையான விளைவுகள் ஏற்படும். தனது இலக்கை அடைவதில் சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. சரியான முடிவுகளை எடுக்க முடியாமல் தடுமாற்றம், பேச்சு சாதுர்யம் குறைவது என ஆளுமையில் குறைபாடு ஏற்படுவதுடன், பணியிடத்தில் சிக்கல், தொழிலில் எதிர்பார்த்த லாபம் இல்லாதது என பல்வேறு கவலைகளை அனுபவிக்க வேண்டியிருக்கும்.
புதன் மகாதசை பரிகாரங்கள்
உங்கள் ஜாதகத்தில் புதனின் மகாதசை நடந்துக் கொண்டிருந்தால், அதிலும் புதன் பலவீனமான நிலையில் இருந்தால், புதன் தொடர்பான பரிகாரங்களைச் செய்வது நல்லது.
புதன் கிரகம் வலுப்பெற பசுவுக்கு தீவனம் கொடுக்கலாம். புதன் கிரகம் தொடர்பான பொருட்களை தானம் செய்வது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
புதன் மகாதசை நடக்கும்போது பச்சை நிற ஆடைகளை அணிந்து, பச்சை காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
புதன் கிரகத்தை வலுப்படுத்த, புதன் கிரகத்தின் மந்திரங்களை உச்சரித்து வணங்கவும்.
புதன் கிரகத்தின் நிறம் பச்சை என்று கூறப்படுகிறது. பச்சை மரகதம் கல் கொண்ட மோதிரங்களை அணியலாம். பேச்சு, வியாபாரம், ஆரோக்கியம், செல்வம் மற்றும் பல விஷயங்களில் வெற்றி பெற மரகதம் உதவுகிறது.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது)
மேலும் படிக்க | Sun Transit 2024: சூரியபெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு நல்ல காலம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ