2025-ல் மனிதனின் அழிவு காலம் ஆரம்பம்!! பக்காவாக கணித்து சொன்ன பாபா வாங்கா..
Baba Vanga 2025 Predictions : பல்கேரியன் கணிப்பாளர் பாபா வாங்கா, தான் உயிரிழப்பதற்கு முன்னர் சில விஷயங்களை கணித்து வைத்திருக்கிறார். அவை என்னென்ன தெரியுமா?
Baba Vanga 2025 Predictions : உலகின் பிரபலமான தீர்க்கதரிசிகளுள் ஒருவர், பாபா வாங்கா. தனது 12 வயதில் பார்வையை இழந்த இவர் பல்கேரியா நாட்டை சேர்ந்தவர். இவரால் தனது குழந்தை பருவத்திலிருந்து பார்க்கத்தான் முடியாத தவிர எதிர்காலத்தை தனது தீர்க்கமான ஞானத்தால் கணித்து கூறுவார் எனக்கு கூறப்படுகிறது. இவர் தனது 84 ஆவது வயதில் 1996 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். ஆனால், உயிரிழப்பதற்கு முன்பு வரை பல்வேறு கணிப்புகளை எழுதி வைத்திருக்கிறார். அதன்படி 2025 ஆம் ஆண்டில் என்னென்ன நிகழ்வு என்பதையும் அவர் கூறியிருக்கிறார்.
முந்தைய கணிப்புகள்:
இன்னும் சில நாட்களில் புத்தாண்டு பிறக்க இருக்கிறது. புது வரவுகள் புது கதவுகள் திறக்கும் இந்த புத்தாண்டுக்காக வருடா வருடம் நாம் அனைவரும் காத்திருப்பது வழக்கம். அது மட்டுமன்றி இது போன்ற கணிப்புகளுக்காகவும் அவளுடன் காத்துக் கொண்டிருப்போம். அதன்படி இதுவரை பாபா வாங்கா கணித்து வைத்திருக்கும் விஷயங்கள் 90% நடைபெற்றிருக்கிறது. இதனால்தான் எதிர்காலத்தை கணிக்க இவரது கணிப்புகள் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இவர் இதுவரை பலவித அரசியல் மாற்றங்கள் குறித்தும் பேரழிவுகள் குறித்தும் அனைத்து கூறியிருக்கிறார். நோய் பரவல், போர் தொடங்குதல் என இவர் கணித்திருக்கும் விஷயங்கள் அப்படியே நிகழ்ந்திருக்கிறது.
உலகப் போர்:
பாபா வங்காவின் 20043 ஆம் ஆண்டுக்கான கணிப்புகள் தற்போது பெரும் பேஸ் பொருளாக மாறி இருக்கிறது. 2025 ஆம் ஆண்டு உலகப் போர் நடைபெறுவதற்கான துவக்க ஆண்டாக இருக்கும் என்று அவர் கணித்திருக்கிறார். அடுத்த ஆண்டில் ஐரோப்பாவில் போர் தொடங்கும் என கூறியிருக்கும் நபர் கொஞ்சம் கொஞ்சமாக அந்த போர் பரவி மிகப்பெரும் உன் அழிவு ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக கணித்திருக்கிறார்.
உலகின் வலுவான மனிதர்!
பாபா வாங்கா 2025 இல் உலகின் வலுவான மனிதர் யாராக இருப்பார் என்பது குறித்தும் ஒரு கணிப்பை எழுதியிருக்கிறார். அதன்படி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வலுவான மனிதராக இருப்பார் எனக் கூறப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு ஏற்படும் போரானது மனித இனத்தின் அழிவுக்கு அடித்தளமாக அமையலாம் என கூறப்படுகிறது. இதை வைத்து பார்த்தால், 5079 ஆம் ஆண்டில் மனித இனமே அழிந்து விடுமாம்.
முக்கியமான குறிப்புகள்:
மேற்கூறியது மட்டுமன்றி, பாபா வாங்கா இன்னும் சில கணிப்புகளையும் குறிப்பிட்டிருக்கிறார். அதன் படி, மனிதர்களால், அடுத்த வருடம் வாயை திறக்காமல் மனதின் மூலமாகவே பேசிக்கொள்ளும் நிலை ஏற்படலாம் என கூறியிருக்கிறார். இந்த முறைக்கு பெயர், டெலிபதி.
ஏலியன்களுடன் போரிடவும் நேரலாம் எனக்கூறுகிறது பாபா வாங்காவின் கணிப்பு. மேலும், 2043ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாடுகள், முஸ்லிம் ஆட்சிகளாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். பாபா வாங்காவின் கணிப்புகள் இதற்கு முன்பு பெரும்பாலும் தவறியதில்லை. எனவே, அவர் 2025-ல் நடக்கும் என்று குறிப்பிட்டிருக்கும் இந்த விஷயங்களும் நடக்குமா இல்லையா என்பது தெரியவில்லை. இனி வரும் காலங்கள்தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும்.
மேலும் படிக்க | 2025 ஆம் ஆண்டு ‘இந்த’ 5 ராசிகளுக்கு அமோகமாக இருக்காம்! பாபா வாங்காவின் கணிப்பு..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ