Sani Peyarchi Palangal: 2025 ஆம் ஆண்டு நடக்கவுள்ள சனி பெயர்ச்சியால் யாருக்கு லாபம்? யாருக்கு பிரச்சனை? அனைத்து ராசிகளுக்குமான பலன்களை இங்கே காணலாம்.
Sani Peyarchi Palangal: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதியின் கடவுளான சனி பகவான், அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். தற்போது கும்ப ராசியில் இருக்கும் சனி, 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீன ராசியில் பெயர்ச்சி ஆவார். இதனால் சில ராசிகளில் சுப விளைவுகளும் சில ராசிகளுக்கு பிரச்சனைகளும் ஏற்படும். சனி பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளிலும் ஏற்படவுள்ள நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு, மீனத்தில் சனி பெயர்ச்சி சாதகமான நன்மகளை அளிக்கும். இந்த காலத்தில் நீங்கள் வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த காலதில் பல நல்ல விஷயங்கள் உங்கள் வாழ்வில் நடக்கும். எனினும், சில தடைகளையும் நீங்கள் சந்திக்கலாம். வாழ்க்கையும் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். தடைகளை தகர்த்து வாழ்வில் வெற்றி பெற தினமும் ஹனுமான் சலிசா பாராயணம் செய்வது நல்லது.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி அலுவலக பணிகளில் சாதகமான பலன்களை அளிக்கும். மூத்த அதிகாரிகளுடனான உங்கள் உறவு பலப்படும். பணியிடத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகளும் உங்களுக்கு இருக்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். குழந்தைகள் தொடர்பான கவலைகள் இருக்கலாம். ஆனால், இவை கூடிய விரைவில் நீங்கும். நல்ல பலன்களை பெற துர்கை அன்னையை வழிபடவும்.
மிதுனம்: 2025 ஆம் ஆண்டில் நடக்கவுள்ள சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு திறனை நிரூபிக்க பணியிடத்தில் வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் இது உங்கள் பணி அழுத்தம் அதிகரிக்கலாம் மற்றும் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் செலவுகள் கூடும், குறையும். நிலையாக திட்டமிட முடியாத சூழல் ஏற்படலாம். பண பரிவர்த்தனைகளில் சற்று கவனமாக இருக்கவும். மாற்றுத்திறனாளிகளுக்கு சனிக்கிழமை உணவளிப்பது நன்மை பயக்கும்.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி அனுகூலமான பலன்களை அளிக்கும். உங்கள் வாழ்க்கையில் நிறைய நேர்மறையான மாற்றங்கள் இருக்கும், குறிப்பாக வணிகம் மற்றும் உறவுகள் மேம்படும். இந்தப் பெயர்ச்சியின் தாக்கத்தால் திடீர் பண ஆதாயங்கள் ஏற்படும். உங்கள் பணம் எங்காவது சிக்கியிருந்தால், அதை இப்போது திரும்பப் பெறலாம். ஆனால் ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களுக்குள் எச்சரிக்கையாக இருக்கவும், ஏனெனில் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். ஏழைகளுக்கு சனிக்கிழமைகளில் உணவு தானம் செய்வது நல்ல பலன் அளிக்கும்.
சிம்மம்: சனி பெயர்ச்சி சிம்ம ராச்சிக்காரர்களுக்கு கலவையான பலன்களை அளிக்கும். ஆரோக்கியத்தில் அதிகமான கவனம் தேவை. எனவே எந்த வகையான நோய்களையும் புறக்கணிக்காதீர்கள். நீண்ட கால நோயைத் தவிர்ப்பதற்கு வழக்கமான உடல்நலப் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். நிதி ரீதியாக, இந்த காலம் கடனை திருப்பிச் செலுத்துவதற்கும் கடனில் இருந்து விடுபடுவதற்கும் வாய்ப்பளிக்கலாம். இருப்பினும் எதிர்பாராத வகையில் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சனி ஸ்தோத்திரத்தை சனிக்கிழமை பாராயணம் செய்வது நல்ல பலன் அளிக்கும்.
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு, சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் பல நல்ல செய்திகள் கிடைக்கும். காதல் திருமணம் சாத்தியமாகும். கூடுதலாக, நீங்கள் திருமணம், வணிகம் அல்லது வேறு ஏதேனும் தேவையான வேலைக்காக வங்கியில் கடன் வாங்க திட்டமிட்டால், எளிதாக வெற்றி கிடைக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.
துலாம்: துலாம் ராசிக்காரர்கள் சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் புத்தாண்டில் உங்கள் எதிரிகளை வெல்வீர்கள், பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். இது தவிர, புத்தாண்டில், உங்களின் கடின உழைப்பின் முழு பலனையும் நீங்கள் பெறுவீர்கள். இது உங்கள் நிலையை மேலும் பலப்படுத்தும். இருப்பினும், நீங்கள் சோம்பலைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். ஜூலை முதல் நவம்பர் வரை உங்கள் உடல்நலம் குறித்து நீங்கள் குறிப்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில், குடும்பம் மற்றும் சொத்து தொடர்பான தகராறுகளும் ஏற்படலாம், எனவே கவனமாக இருங்கள். பரிகாரமாக சனிக்கிழமைகளில் ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யவும்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும். இந்த மாற்றத்தின் விளைவு உங்கள் காதல் உறவில் தீவிரத்தை ஏற்படுத்தும். தொழில் பார்வையில், வேலைகளை மாற்றுவதற்கான சரியான நேரம் பிப்ரவரி முதல் ஜூன் வரை அல்லது நவம்பருக்குப் பிறகு இருக்கும். இருப்பினும், ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் வேலைகளை மாற்றுவதைத் தவிர்க்கவும். பிள்ளைகள் தொடர்பான சில கவலைகள் இருக்கலாம், ஆனால் அவர்கள் தங்கள் துறையில் முன்னேறுவார்கள். கவலைகள் நீங்க சனிக்கிழமையன்று ஸ்ரீ ஹனுமான் சாலிசாவை 8 முறை பாராயணம் செய்யவும்.
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் தொழில் ரீதியாக நல்ல பலன்கள் கிடைக்கும். ஆனால், குடும்பத்தில் இருந்து தூரம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வேலை அல்லது பிற காரணங்களுக்காக நீங்கள் வசிக்கும் இடத்தை மாற்ற வேண்டியிருக்கும். இது தவிர, குடும்ப வாழ்க்கையில் பதற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் ஒற்றுமை இல்லாததால் சில பிரச்சனைகள் வரலாம். குறிப்பாக தாயின் உடல் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதற்கு பரிகாரமாக சனிக்கிழமைகளில் கருப்பு எள் தானம் செய்யவும்.
மகரம்: சனி பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு சுபமானதாக இருக்கும். 2025 ஆம் ஆண்டில், ஆன்மீக விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். வேலை தொடர்பாக நீங்கள் வெளிநாட்டிற்கு அல்லது வேடு நகரத்திற்கு மாற்றப்படலாம். குடும்பம் மற்றும் ஆரோக்கியத்தின் பார்வையில், சகோதர சகோதரிகளுக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருக்கலாம், ஆனால் பரஸ்பர உறவுகள் இந்த நேரத்தில் சுமூகமாக இருக்கும். நல்ல விளைவுகள் கிடைக்க, சனிக்கிழமை விரதம் இருந்து சனி பகவானை வழிபடவும்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி 2025 ஆம் ஆண்டில் கலவையான பலன்களை அளிக்கும். குடும்ப வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். இந்த நேரத்தில் உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். பிரச்சனைகளை தவிர்க்க, சனிக்கிழமையன்று ஸ்ரீ சனி சாலிசாவை பாராயணம் செய்யவும்.
மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு, சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் குடும்ப உறவுகள் மேம்படும், குறிப்பாக உடன்பிறந்தவர்களுடன் உறவு நன்றாக இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் சில ஏற்ற தாழ்வுகள் இருக்கும். மனைவி உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம், இது உறவை மோசமாக்கும். நீங்கள் வணிகத்தில் புதிய நபர்களுடன் உறவுகளை ஏற்படுத்துவீர்கள், இது நீண்ட காலத்திற்கு உங்களுக்கு நன்மை பயக்கும். தீய விளைவுகளை தவிரக்க, சனி பகவானை தவறாமல் வழிபடவும். சனி சாலிசாவை பாராயணம் செய்யவும். உங்களால் முடிந்த போதெல்லாம் ஏழைகளுக்கு உதவ வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.