வியாபாரத்தில் அதிர்ஷ்ட ராசிகள்: பணம் என்பது நமது மனித வாழ்க்கைக்கு மிக அத்தியாவசியமான தேவையாக உள்ளது. பல விதங்களில் உழைத்து மக்கள் பணத்தை ஈட்டுகிறார்கள். சிலர் அலுவலக பணிகளில் சேருகிறார்கள். சிலர் சொந்தமாக தொழில் செய்கிறார்கள். சொந்தமாக வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் லாபம் ஈட்டுவது மிக அவசியமாகும். பல சமயங்களில் என்னதான் கடினமாக உழைத்தாலும், சிலருக்கு லாபம் கிடைக்காமல் நஷ்டத்தில் சிக்கித் தவிப்பது உண்டு. சிலரோ அந்த வியாபாரத்திற்காகவே பிறந்தவர்கள் போல அதிரடி லாபத்தை ஈட்டுகிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிட சாஸ்திரத்தின் படி, சில ராசிகளில் பிறந்தவர்கள் வியாபாரத்தில் உயர் நியையை அடைவதுண்டு. இதுமட்டுமின்றி, இவர்கள் வியாபாரத்தின் தொடக்கத்திலேயே வெற்றிக் கொடியை ஏற்றி விடுகிறார்கள். இவர்களுக்கு என்றும் பணத்துக்கு குறைவிருப்பதில்லை. வெற்றிகரமாக வியாபாரம் செய்து அதிக லாபம் சம்பாதிக்கும் அதிர்ஷ்டம் உள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


வியாபாரத்தில் உச்சம் தொடும் ராசிகள்


மேஷ ராசி


சாஸ்திரங்களின்படி, மேஷ ராசிக்காரர்களுக்கு தலைமைப் பண்பு உண்டு. இந்த ராசிக்காரர்கள் மிகவும் தைரியமானவர்கள். வியாபாரத்தில், அவர்கள் எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறார்கள். இத்துடன் அட்டகாசமான வெற்றியும் பெறுகிறார்கள். இவர்கள் உற்சாகம் நிறைந்தவர்கள். இது அவர்களுக்கு வணிகம், மேலாண்மை மற்றும் புதிய விஷயங்களை ஏற்றுக்கொள்வதில் வெற்றியைத் தருகிறது. மேஷ ராசிக்காரர்கள் பெரும்பாலும் வியாபாரத்தில் வெற்றி பெறுவார்கள், அதுவும் மிக விரைவில் வெற்றி பெறுவார்கள். இவர்கள் வியாபாரத்தில் வெற்றியைப் பெற எந்தப் போராட்டத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள்.


சிம்ம ராசி


சிம்ம ராசிக்காரர்கள் மற்றவர்களையும் தங்களுடன் சேர்ந்து வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்கிறார்கள். எந்த ஒரு செயலையும் செய்து முடிக்கும் உற்சாகம் இவர்களுக்கு இருக்கும், இது புதிய விஷயங்களை ஏற்று அதில் வெற்றி பெற உதவும். சிம்ம ராசிக்காரர்கள் விரைவில் உயர் பதவியை அடைவார்கள். சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் கருத்தைக் கடைப்பிடிக்கத் தயங்க மாட்டார்கள். பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலையில் வெற்றி பெறும் குணங்கள் அவர்களிடம் உள்ளன. இந்த ராசிக்காரர்கள் தொழிலில் மிகவும் பொறுமையாக வேலை செய்கிறார்கள். வியாபாரத்தில் விரைவில் வெற்றி பெறுவதற்கு இதுவே காரணம்.


மேலும் படிக்க | செவ்வாய் வந்துவிட்டார்.. உச்சம் செல்ல போகும் ராசிக்காரர்கள் நீங்களா?


கன்னி ராசி


ஜோதிட சாஸ்திரத்தின்படி, கன்னி ராசிக்காரர்கள் உயர் கல்வி கற்றவர்கள். மேலும், அவர்களின் சிந்தனை ஒரு சுயாதீன வகையில் இருக்கும். இந்த ராசிக்காரர்கள் முதலில் தங்கள் வணிகத்தை ஆழமாகப் படிக்கிறார்கள். மேலும், வியாபாரத்தில் வரும் மாற்றங்களை இவர்கள் நன்கு புரிந்து கொள்கிறார்கள். இந்த ராசிக்காரர்கள் அனைவருடனும் ஒத்துழைத்து, ஒன்று சேர்ந்து முன்னேறுவதில் நம்பிக்கை கொண்டு செயல்படுகிறார்கள். ஆகையால் இந்த ஒற்றுமை அவர்களை வணிகத்தில் வெற்றிபெற வைக்கிறது.


விருச்சிக ராசி
 
விருச்சிக ராசிக்காரர்கள் தைரியமானவர்கள், அதனால் வியாபாரத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் பல வித முயற்சிகளை செய்து பார்ப்பதில் இருந்து பின்வாங்க மாட்டார்கள். அதிவேக வியாபாரத்தில் வெற்றி பெறும் குணங்கள் இவர்களுக்கு உண்டு. அப்படிப்பட்டவர்கள் நன்கு திட்டமிட்ட பிறகே வியாபாரத்தில் அடியெடுத்து வைப்பார்கள். அவர்கள் வியாபாரத்தில் விரைவில் வெற்றி பெறுவதற்கு இதுவே காரணம். மேலும் இவர்கள் செய்யும் வியாபாரமும் வலுப்பெறும்.


மகர ராசி


திடமான எண்ணம் கொண்டவர்கள் மட்டுமே வியாபாரத்தில் நிலைத்து நிற்க முடியும். இந்த குணம் மகர ராசிக்காரர்களிடம் அதிகமாக உள்ளது. இந்த ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள். இந்த உழைப்பு வணிகத்தில் வெற்றியை அடைய உதவுகிறது. இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்திற்கு நிலையான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவார்கள்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கொட்டி கொடுக்கும் குரு.. அதிர்ஷ்ட வாழ்க்கை இந்த ராசிகளுக்கு தான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ