மகர சங்கராந்தியில் செய்யும் ‘இந்த’ தானங்கள் தோஷங்களை நீக்கும்!
மகர சங்கராந்தி ஜனவரி 15, 2023 அன்று கொண்டாடப்படும். இந்த நாளில் தானம் செய்வது சிறப்பு வாய்ந்தது. யாருடைய தானம் எந்த கிரக தோஷம் நீங்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மகர சங்கராந்தி பண்டிகை இந்து மதத்தில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நாளில் சூரியன் மகர ராசியில் நுழைகிறார். மகர ராசியில் சூரியன் சஞ்சரிப்பதில் இருந்து நல்ல நாட்கள் தொடங்கும். இந்து ஆன்மீக நூல்களில், மகர சங்கராந்தி பண்டிகையில் செய்யும் தானம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக விவரிக்கப்பட்டுள்ளது. இந்நாளில் மக்கள் பலவிதமான பொருட்களை ஏழைகளுக்கு தனமாக வழங்குகிறார்கள். சங்கராந்தி தினத்தன்று காலையில் குளித்து சூரிய பகவானை வணங்கி,தானம் செய்வது சிறந்தது.
மகர சங்கராந்தி தினத்தன்று இவற்றை தானம் செய்வதால் சூரியன், சனி, புதன், குரு, சந்திரன், ராகு-கேது ஆகிய தோஷங்கள் நீங்கி கிரகங்களின் சுப பலமும் அதிர்ஷ்ட பலமும் பெருகும் என்பது ஆன்மீக நம்பிக்கை. மகர சங்கராந்தியின் போது எந்தெந்த பொருட்களை தானம் செய்வதன் மூலம் எந்த கிரகத்தின் தோஷம் தீரும் என்பதை அறிந்து கொள்வோம் வாருங்கள்.
எள் தானம்: மகர சங்கராந்தி தினத்தில், குளித்த பின் கருப்பு எள்ளை தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் சூரியனின் அருளால் செல்வமும், தானியமும் பெருகும், சனி தோஷமும் நீங்கும் என்பது நம்பிக்கை.
மேலும் படிக்க | திருநள்ளாறில் வீற்றிருக்கும் சனீஸ்வரரின் கிரகப் பெயர்ச்சி! உஷாராகும் 4 ராசிகள்
பொங்கல் தானம்: மகர சங்கராந்தி தினத்தன்று நீராடி, வழிபட்ட பின், அரிசி வெல்லம், நெய் கொண்டு தயாரிக்கப்பட்ட பொங்கலை ஏழை எளிய மக்களுக்கு தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் சனி, குரு, புதன் ஆகிய கிரகங்களின் தோஷங்கள் நீங்கி காரியங்களில் வெற்றி கிட்டும் என்பது நம்பிக்கை.
காலணி தானம்: மகர சங்கராந்தியன்று காலணி, கருப்பு எள், கருப்பட்டி ஆகியவற்றை தானம் செய்வதன் மூலம் சனி தோஷம் நீங்கும்.
வெல்லம் மற்றும் நெய் தானம்: மகர சங்கராந்தி நாளில் வெல்லம் மற்றும் நெய் தானம் செய்வதால், தேவகுரு பிரஹஸ்பதியின் தோஷம் நீங்கும்.
வெல்லம் தானம்: மகர சங்கராந்தி அன்று வெல்லம் தானம் செய்வதால் ஜாதகத்தில் சூரியன், வியாழன், சனி ஆகிய 3 கிரகங்களின் தோஷங்கள் நீங்கும். மகர சங்கராந்தியன்று எள் உருண்டை தானம் செய்வதால் சூரியனின் பலம் அதிகரிக்கும். மகர சங்கராந்தி தினத்தன்று வெல்லத்தால் செய்யப்பட்ட பொருட்களை உண்பதும், தானம் செய்வதும் சிறப்பான பலன்களைத் தரும்.
அரிசி தானம்: அரிசி சந்திரனின் அடையாளமாக கருதப்படுகிறது. மகர சங்கராந்தி அன்று அரிசி தானம் செய்வதால் சந்திரன் வலுவடைந்து வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும்.
போர்வைகள் தானம்: மகர சங்கராந்தியின் போது போர்வைகள் மற்றும் ஆடைகளை தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஜாதகத்தில் உள்ள ராகு மற்றும் கேதுவின் தோஷங்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் மட்டுமே. எந்தவொரு தகவலையும் அல்லது நம்பிக்கையையும் செயல்படுத்துவதற்கு முன், தொடர்புடைய நிபுணரை அணுகவும்.)
மேலும் படிக்க | மீனத்தில் ஹம்ச பஞ்ச மகா புருஷ யோகம்! செல்வந்தராகும் ‘3’ ராசிகள் இவை தான்!
மேலும் படிக்க | பழனி கோவில் முருகரின் நவபாஷாணம் மற்றும் கருவறை சிலைகள் ஆய்வு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ