திருநள்ளாறில் வீற்றிருக்கும் சனீஸ்வரரின் கிரகப் பெயர்ச்சி! உஷாராகும் 4 ராசிகள்

Ezharai Nattu Shani Effect For 4 Zodiacs:  புத்தாண்டு மலர்ந்த மூன்றாவது வாரத்திலேயே சனி தனது சொந்த ராசியான கும்பத்திக்கு பெயர்ச்சியாகிறார், அனைவருக்கும் வெவ்வேறு விதமான பலன்களைக் கொடுப்பார் சனீஸ்வரர்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 8, 2023, 10:10 AM IST
  • நீதிதேவன் சனீஸ்வரர் இன்னும் சில நாட்களில் ராசி மாறுகிறார்
  • சனி தேவனின் சனிப் பெயர்ச்சி பலன்கள்
  • சனிக்கிழமையில் செய்ய வேண்டிய வழிபாடுகள்
திருநள்ளாறில் வீற்றிருக்கும் சனீஸ்வரரின் கிரகப் பெயர்ச்சி! உஷாராகும் 4 ராசிகள்

சனிப்பெயர்ச்சி ஜனவரி 2023: இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சனி பகவான் தன்னுடைய ராசியை மாற்றுகிறார். மந்தமாக நகரும் சனி பகவான், நம்முடைய செயல்களுக்கு ஏற்ப அவர்களுக்கு பலன்களை அளிக்கும் நீதிதேவனாக விளங்குகிறார். புத்தாண்டு மலர்ந்த மூன்றாவது வாரத்திலேயே சனி தனது சொந்த ராசியான கும்பத்திக்கு பெயர்ச்சியாகிறார். 

ஈஸ்வரப் பட்டம் பெற்ற சனிபகவான் கும்ப ராசியில் நுழைவதால் 12 ராசிகளுக்கும் மாற்றங்கள் ஏற்படும் என்றாலும், மகர ராசியினருக்கு ஆசுவாசம் கிடைக்கும். ஏனென்றால், தற்போது மகரத்தில் இருந்து தனுசுக்கு மாறும் சனியின் தீவிரமான தாக்கத்தில் இருந்து மகர ராசியினர் வெளியில் வருவதால், கெடு பலன்கள் குறையும். எனவே அவர்கள்இனி சற்று நிம்மதியாக இருக்கலாம்.

சனி மகா தசை

ஏழரை நாட்டு சனியின் பாதிப்புகளைத் தவிர, சனி தசையில் இருந்து விடுபடுபவர்களுக்கும், இந்த சனிப் பெயர்ச்சி மகிழ்ச்சியை அள்ளித்தரும். இன்னும் சில நாட்களில், அதாவது ஜனவரி 17ஆம் தேதி நடக்கவுள்ள சனியின் ராசி சஞ்சாரம், பலருக்கும் வெவ்வேறு விதமானப் பலன்களைத் தரும் என்பதால், சனிப்பெயர்ச்சி அனைவராலும் கூர்ந்து கவனித்து ஆராயப்படுகிறது.

சனிப்பெயர்ச்சி 2023 மேஷம்

சனி மேஷ ராசியில் இருந்து 11வது வீட்டிற்குச் செல்கிறார்,  ஒருவரின் ஜாதகத்தில் பதினொன்றாவது வீடு வருமானம் தரும் வீடு.  இந்த ஆண்டு, சனியின் சஞ்சாரம், மேஷ ராசியினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வருமானம் எதிர்பாராத விதமாக உயரும் வாய்ப்பு அதிகரிக்கும். கடந்து வந்த தடைகள் மற்றும் இதுவரை நீங்கள் எடுத்த முயற்சிக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இருந்தாலும் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பதால் உஷாராக இருக்கவும்.

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2023: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் பம்பர் லாபம், செல்வம் பெருகும் 

சனிப்பெயர்ச்சி 2023 ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் தனிப்பட்ட முயற்சிகளில் பெரிய வெற்றி காத்துக் கொண்டிருக்கிறது. தொழில் ஸ்திரமாகும் என்பதோடு, வளர்ச்சிக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். வெளிநாட்டில் வேலை செய்வதற்கும், நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்கும் அதிக வாய்ப்புகள் கிடைக்கும். வேலைகள் அதிகரிக்கும் என்பதால், திட்டமிட்டு செயல்படுவது அனைவருக்கும் நல்லதாக இருக்கும். இல்லாவிட்டால் கெட்ட பெயர் வந்துசேரும்.  

சனிப்பெயர்ச்சி 2023 மிதுனம்
குடும்பத்தில் பெற்றோருடனான உறவு சீர்குலையும், அதிலும் தந்தையுடனான உறவை பேணி காக்க வேண்டிய அவசியம் உண்டு. கடினமாக உழைத்தால் தான் வெற்றி கிடைக்கும். தற்போது நீங்கள் உழைக்கும் உழைப்புதான், எதிர்காலத்தில் உங்களுக்கான அஸ்திவாரமாக இருக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம். வேலைச் சுமை கூடினாலும், அதற்கான பலன்கள் இப்போது கிடைக்காமல் போனாலும், எதிர்காலத்திற்காக இவற்றை செய்கிறோம் என்று நம்பிக்கை வையுங்கள்.

சனிப்பெயர்ச்சி 2023 கடகம்
கடக ராசியில் இருந்து எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கும் சனி 7 மற்றும் 8 ஆம் வீடுகளுக்கு அதிபதி. எனவே, சனி கிரகத்தின் அனுகூலமான பலன்களை எதிர்நோக்கலாம். ஆனால்,  மன அழுத்தத்தை ஏற்படுத்தும் காரியங்கள் நடைபெறும். அதிலிருந்து வெளிவர முயற்சி செய்வது நல்லது. வாழ்க்கைத் துணையின் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும் என்பது ஆறுதலாக இருக்கும்.  

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன் - குபேர யோகம் பெறப்போகும் 3 ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News