அஸ்தமனம் ஆகும் குரு... சிக்கல்கள் உங்களுக்கு காத்திருக்கு... கவனமாக இருங்க!
குரு அஸ்தமனம் 2024: தேவர்களின் குரு என அழைக்கப்படும் குரு பகவான் மே 1ஆம் தேதி புதன்கிழமை பெயர்ச்சியாகிறார். மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறும் குரு பகவான் பிறகு மே 6ஆம் தேதி செவ்வாய் அன்று அஸ்தமனமாகிறார்.
குரு அஸ்தமனம் 2024: தேவர்களின் குரு என அழைக்கப்படும் குரு பகவான் மே 1ஆம் தேதி புதன்கிழமை பெயர்ச்சியாகிறார். மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறும் குரு பகவான் பிறகு மே 6ஆம் தேதி செவ்வாய் அன்று அஸ்தமனமாகிறார். அஸ்தமனம் ஆகும். குரு பகவான் ஜூன் 2 வரை அஸ்தம நிலையில் இருப்பார். குரு பெயர்ச்சிக்கு பின் நடக்கும் குரு அஸ்தமனம் காரணமாக, கன்னி, தனுசு உள்ளிட்ட 5 ராசிகளுக்கும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. இந்த ராசிக்காரர்கள் பணத் தொழில் மற்றும் குடும்பப் பிரச்சினையில் சிக்கி தவிக்கலாம் என்பதால், கவனமாக இருக்க வேண்டும். குரு அஸ்தமனம் ஆவதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.
கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்களுக்கு குரு அஸ்தமனம் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த நேரத்தில், நீங்கள் வேலை அழுத்தத்தில் இருப்பீர்கள்.இதன் காரணமாக தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களாலும் அதிகாரிகளாலும் வேலையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இந்த ராசிக்காரர்கள் தங்கள் உணவு பழக்க வழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் உங்கள் உடல்நலன் பாதிக்கப்படக்கூடும். உறவினர்களுடன் பேசும்போது உங்கள் கவனம் தேவை. இல்லையெனில் உறவுகள் பாதிக்கப்படும்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்காரர்கள் குரு அஸ்தமனம் காரணமாக உடல் ஆரோக்கியத்தில் பல சவால்களை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில், மனநலம் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் ஆரோக்கியத்தை முழுமையாக கவனித்துக் கொள்ளுங்கள். வேலை தேடும் நபர்கள் இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் பணியிடத்தில் பிரச்சனைகள், தடைகள் வரலாம். வணிகர்கள் தங்கள் வணிக ஒப்பந்தங்களில் கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் நிதி இழப்பு வாய்ப்பு உள்ளது.
தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்களுக்கு குரு அஸ்தமனம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. இந்த காலகட்டத்தில், நீங்கள் குடும்பம் மற்றும் சமூக வாழ்க்கையில் இழப்புகளை சந்திக்க நேரிடும். மேலும், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை தாறுமாறாக செலவழிப்பதை தவிர்க்கவும், இல்லையெனில் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். திருமண வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், உங்கள் மனைவியுடன் சில பிரச்சினைகளில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது இருவருக்கும் இடையே உறவை பாதிக்கும். இந்த காலகட்டத்தில் வேலை அல்லது தொழிலில் அதிக எதிர்பார்ப்புகளை கொண்டிருக்காதீர்கள், உங்கள் முன்னேற்றத்தின் வேகம் குறையலாம்.
மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளை இனி கையில பிடிக்க முடியாது..!!
மகர ராசி
மகர ராசிக்காரர்கள் குரு அஸ்தமனம் காரணமாக பல விஷயங்களில் தடைகளை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில், வாழ்க்கையில் அமைதியும் திருப்தியும் இல்லாமல் போகும். உங்கள் வேலையில் நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். அதிகரித்து வரும் செலவுகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் நீங்கள் பின்னர் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உங்கள் வார்த்தைகளையும் எண்ணங்களையும் கட்டுப்படுத்த வேண்டும், இல்லையெனில் நீங்கள் சொல்வதை யாராவது தவறாகப் புரிந்து கொள்ளலாம். இந்த காலகட்டத்தில், சில பிரச்சினைகளில் உறவினர்களுடன் கருத்தியல் வேறுபாடுகள் இருக்கலாம். இதன் காரணமாக வீட்டில் சூழ்நிலை மோசமடையக்கூடும்.
மீன ராசி
மீன ராசிக்காரர்களுக்கு குரு அஸ்தமனம் கலவையான பலன்களைத் தரப் போகிறது. இந்த நேரத்தில் மன உறுதி இல்லாமல் இருக்கலாம். கோப உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கலாம். கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு உங்கள் வேலையை கவனமாகச் செய்ய வேண்டும். இந்த காலகட்டத்தில் நீங்கள் பெரிய வேலை அல்லது முதலீடு செய்வது சாதகமாக இருக்காது. உத்யோகத்தில் இருப்பவர்கள் பணியிடத்தில் உள்ள எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலையில் முழு கவனம் செலுத்த வேண்டும். மேலும், இந்த காலகட்டத்தில் யாரையும் அதிகம் நம்பாதீர்கள். குடும்ப உறுப்பினரின் உடல்நிலை குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியிருக்கும், இதன் காரணமாக நீங்கள் மனக் கவலையாக இருப்பீர்கள்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ