விருச்சிக ராசியில் சதுர்கிரஹி யோகம்: கிரகங்கள் சஞ்சரிக்கும் போதெல்லாம், அவை அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில் ஒரே ராசியில் பல கிரகங்கள் இணைந்து சஞ்சரிப்பது சுப மற்றும் அசுப யோகத்தை உண்டாக்கும். அவை அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. புதன், சூரியன், சுக்கிரன் ஆகியவற்றின் சஞ்சாரம் காரணமாக விருச்சிக ராசியில் சதுர்கிரஹி யோகம் உருவாகி வருகிறது. இந்த யோகம் 3 ராசிக்காரர்களுக்கு வேலை-வியாபாரத்தில் நிறைய பலன்களைத் தரும். இத்துடன் இந்த ராசிக்காரர்களுக்கு பண பலன்களும் கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சதுர்கிரஹி யோகம் 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும்!


துலாம்: சதுர்கிரஹி யோகம் துலாம் ராசிக்கு சுப பலன்களைத் தரும். இவர்கள் வருமானம் அதிகரிக்கும். திடீரென்று பண வரவு கிடைக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கலாம். மேலும், புதிய வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும். வேலைகளை விரைந்து முடிப்பதில் அங்கீகராம் கிடைக்கும். பொருளாதார நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். பண பிரச்சனைகள் தீரும். கடனை அடைப்பதில் வெற்றி கிடைக்கும்.


மேலும் படிக்க | சூரிய பெயர்ச்சி: திரிகிரஹி யோகத்தினால் சிக்கலில் சிக்கும் ‘4’ ராசிகள்!


மகரம்: புதன் மற்றும் சூரியனின் சஞ்சாரத்தால் உருவாகும் சதுர்கிரஹி யோகம் மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த ராசிகளின் வருமானம் பெரிய அளவில் அதிகரிக்கும். பணம் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஷேர் மார்க்கெட், லாட்டரிகளில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும். வியாபாரம் நன்றாக நடக்கும். பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். அது நன்மை தரும். முதலீடு மூலம் லாபம் உண்டாகும்.


கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு சதுர்கிரஹி யோகம் மிகவும் சாதகமாக அமையும். இவர்கள் தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான பலன்களைப் பெறுவார்கள். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வேலையில், கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். உங்கள் பணி பாராட்டப்படும். அனைவரின் ஒத்துழைப்பால் இலக்கை அடைவீர்கள். கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.


மேலும் படிக்க | மீனத்தில் வக்ர நிவர்த்தி அடையும் குரு; ‘இந்த’ ராசிகளின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்!


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது)


மேலும் படிக்க | டிசம்பரில் இரு முறை பெயர்ச்சி ஆகும் சுக்கிரனால் ‘4’ ராசிகளுக்கு சுக்கிர திசை! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ