ஜோதிடத்தில், குரு கிரகம் சுப பலன்களை தருகிறது. அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் கிரகம் வியாழன். குருவின் வக்ர நிவர்த்தி மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. தற்போது, வியாழன் அதன் சொந்த ராசியான மீனத்தில் வக்ர நிலையில் உள்ளது, ஆனால் நவம்பர் 24, 2022 முதல், அது மீனத்தில் வக்ர நிவர்த்தி அடையப் போகிறது. நவம்பர் 24, வியாழன் காலை 4.36 மணிக்கு குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால், வாழ்வில் பணம், வேலை, திருமணம் போன்ற விஷயங்களில் குருவின் ஆசியினால் வெற்றிகளைப் பெற்றி மகிழ்ச்சியான வாழ்க்கையை பெற உள்ள 5 ராசிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
வக்ர நிவர்த்தி அடையும் குருவினால் பலன் பெறப் போகும் ராசிகள்
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு வக்ர நிவர்த்தி அடையும் குரு மிகவும் சாதகமாக இருப்பார். தொழில் துறையில் பெரிய ஆதாயங்கள் உண்டாகும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகம். புதிய வேலையில் சேரலாம். வருமானம் அதிகரிக்கும். தொழில் தொடங்க நல்ல நேரம். உறவுமுறைகள் சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.
கடகம்:
வக்ர நிவர்த்தி அடையும் குரு கடக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் புதிய ஒளியை ஏற்படுத்தும். பணம், தொழில், திருமணம் ஆகியவற்றில் இருந்து வந்த தடைகள் நீங்கும். வெளிநாடு செல்ல வாய்ப்பு கிட்டும். வியாபாரத்தில் முதலீடு செய்வதற்கு நல்ல நேரம். புதிய வேலையைத் தொடங்கலாம். பணம் வரவு சாதகமாக இருக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.
கன்னி:
வக்ர நிவர்த்தி அடையும் குருவினால் ஏற்படும் மாற்றங்கள் கன்னி ராசியினருக்கு அதிகப் பணவரவைத் தரும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு அல்லது பெரிய சலுகைகள் கிடைக்கும். மரியாதை அதிகரிக்கும். மனைவி தரப்பினில் இருந்து முழு ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்:
நவம்பர் 24-ம் தேதி முதல் விருச்சிக ராசிக்காரர்களின் பொன்னான நாட்கள் தொடங்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் அமையும். உயர் பதவி, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. பணியிடத்தில் சக ஊழியர்களுடன் நல்ல உறவு. வேலை சம்பந்தமாக வெளியூர் செல்லலாம். சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள்.
கும்பம்:
வக்ர நிவர்த்தி அடையும் குரு , உங்கள் பல விருப்பங்களை நிறைவேற்றுவார். கடின உழைப்பு வெற்றியைத் தரும். அதிர்ஷ்டத்தின் உதவியால் அனைத்து வேலைகளும் நிறைவேறும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து வேலை வாய்ப்புகள் வரலாம். வியாபாரத்தில் பெரிய லாபம் கிடைக்கும். காதல் துணையுடன் நல்லுறவு இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது)
மேலும் படிக்க | டிசம்பரில் இரு முறை பெயர்ச்சி ஆகும் சுக்கிரனால் ‘4’ ராசிகளுக்கு சுக்கிர திசை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ