நீங்கள் ஜனவரி மாதம் பிறந்தவரா? அப்போ உங்கள் குணம் இப்படித்தான் இருக்கும்!
ஒவ்வொரு மாதம் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும். அப்படி ஜனவரியில் பிறந்தவர்களின் குணம் எப்படியிருக்கும் என பார்க்கலாமா?
ஒருவரின் குணாதிசயம், அவர்களை பொருத்தது என்றாலும், அவர்கள் பிறந்த நேரத்தையும் தேதியையும் வைத்தும் அது அமைக்கப்படும். தேதியும் நேரமும் ஒருவரின் குணாதிசயத்தை தீர்மானிப்பது போல, அவர்கள் பிறந்த நேரமும் இதனை தீர்மானிக்கிறது. வருடத்தின் முதல் மாதமான ஜனவரி, பலருக்கு புதிய ஆண்டின் முதல் மாதம் என்பதால் இது ஸ்பெஷலாக இருக்கும். இந்த மாதத்தில் பிறந்தவர்களும் ஸ்பெஷலானவர்களாக இருப்பர்.
ஜனவரியில் பிறந்தவர்கள்..
ஒரு மனிதரின் குணாதிசயம், அவரது பிறந்த தேதி மற்றும் பிறந்த தேதியின் படி நிர்ணயிக்கப்படுவதாக ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகிறது. ஜனவரியில் பிறந்தவர்கள் பல சிறப்பான குணாதிசயத்தை கொண்டுள்ளனர். அவை என்னென்ன குணாதிசயம் தெரியுமா?
மகிழ்ச்சியானவர்களாக இருப்பர்...
ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியான மனநிலையை கொண்டவர்களாக இருப்பார்களாம். இவர்களுக்கு நகைச்சுவை உணர்வும், பிறரை மகிழ்விக்கும் குணமும் அதிகமகா இருக்குமாம். இவர்களின் இந்த குணத்தால் பலர் இவர்களால் ஈர்க்கப்படுவர். மேலும், இவர்கள் பிறரது உணர்ச்சிக்கு மதிப்பு கொடுப்பவர்களாக இருப்பார்களாம்.
கனவை நோக்கி ஓடுபவர்கள்..
ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் தங்களது கனவை நோக்கி ஓடுபவர்களாக இருப்பார்களாம். ஒரு விஷயத்தை அடைய வேண்டும் என்று தீர்மானித்து விட்டாலோ, அல்லது ஒரு கனவை அடைய வேண்டும் என்று நினைத்தாலோ அதை கண்டிப்பாக முடித்தே தீருவர். தங்களது கனவை அடைய வழியில் எத்தனை சிரமங்கள் ஏற்பட்டாலும் அதை அடையும் வரை இவர்கள் ஓய்வதில்லை. மேலும், இவர்களில் பலர் கலை உலகில் திகழ்பவர்களாக இருப்பார்களாம். கடின உழைப்பாளிகளாக இருக்கும் இவர்கள், தலைமை பண்பு உடையவர்களாகவும் இருப்பராம்.
மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இன்று எந்த எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்?
அன்பு கொண்டவர்கள்..
ஜனவரி மாதம் பிறந்தவர்கள் அவர்கள் அன்பு நிறைந்தவர்களாக இருப்பது உங்களுக்கு புரியும். இவர்களுக்கு யாரையும் எளிதில் புண்படுத்த மனம் வராது. தங்களது அன்புக்குரியவர்களின் வெற்றிக்காகவும் அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் இவர்கள் போராடுவர். இவர்களை ஏதாவது கூறினால் எப்படி இவர்களுக்கு கோபம் வருமோ அதே போல, தனது அன்புக்குரியவர்களை கூறினாலும் இவர்களுக்கு கோபம் வரும்.
அடிக்கடி கோபம் வருமாம்..
ஜனவரியில் பிறந்த சிலருக்கு அடிக்கடி கோபம் வருமாம். இவர்களில் பலர் எப்போதும் நிகழ்விலேயே இருப்பர். அதிகம் யோசிக்காதவர்களாக இருப்பர். அதனால், என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே யோசிக்காமல் பேசி விடுவர். ஆனால், சில நாட்களில் அப்படி ஒன்று நடந்ததையே இவர்கள் மறந்து விடுவர்.
மேலும் படிக்க | இரவில் ஏன் நகம் வெட்டக்கூடாது? ஆன்மிகம் கூறும் பதில் இதுதான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ