2024 ஜனவரியில் வங்கிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை... முழு விபரம்..!!

2024 ஜனவரி மாதத்திற்கான வங்கி விடுமுறைப் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 25, 2023, 01:18 PM IST
2024 ஜனவரியில் வங்கிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை... முழு விபரம்..!! title=

2024 ஜனவரியில் வங்கி விடுமுறைகள்: 2024 ஜனவரி மாதத்திற்கான வங்கி விடுமுறைப் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் விடுமுறைப் பட்டியலின்படி, நாடு முழுவதும் உள்ள வங்கிகள் இந்த மாதம் இரண்டாவது மற்றும் நான்காவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர மொத்தம் 11 நாட்களுக்கு மூடப்படும்.

அரசு சார்ந்த பண்டிகைகளின் போது, சம்பந்தப்பட்ட  மாநிலங்களில் மட்டும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இருப்பினும், குடியரசு தினம் போன்ற தேசிய அளவிலான முக்கிய கொண்டாட்டங்கள் மற்றும் தினங்களின் போது, நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும். இந்த வரவிருக்கும் விடுமுறை நாட்களில் வங்கிக் கிளைகள் மூடப்படும் என்றாலும், மொபைல் பேங்கிங், UPI மற்றும் இன்டர்நெட் பேங்கிங் போன்ற டிஜிட்டல் சேவைகள் எந்த இடையூறும் இல்லாமல் செயல்படும்.

தேதி  நாள் விடுமுறை மாநிலங்கள்
1 ஜனவரி 2024 திங்கட்கிழமை புத்தாண்டு தினம்  பல மாநிலங்கள்
11 ஜனவரி 2024 வியாழன் மிஷனரி தினம் மிசோரம்
12 ஜனவரி 2024 வெள்ளிக்கிழமை சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி  மேற்கு வங்கம்
13 ஜனவரி 2024 சனிக்கிழமை லோஹ்ரி பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்கள்
14 ஜனவரி 2024 ஞாயிறு மகர சங்கராந்தி பல மாநிலங்கள்
15 ஜனவரி 2024 திங்கள் பொங்கல் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம்
15 ஜனவரி 2024  திங்கள் திருவள்ளுவர் தினம் தமிழ்நாடு
16 ஜனவரி 2024 செவ்வாய்கிழமை துசு பூஜைமேற்கு வங்காளம் மற்றும் அசாம் மேற்கு வங்காளம் மற்றும் அசாம்
17 ஜனவரி 2024 புதன்கிழமை குரு கோவிந்த் சிங் ஜெயந்தி பல மாநிலங்கள்
23 ஜனவரி 2024 செவ்வாய்கிழமை  சுபாஷ் சந்திரபோஸ் ஜெயந்தி பல மாநிலங்கள்
26 ஜனவரி 2024 வெள்ளிக்கிழமை குடியரசு தினம் இந்தியா முழுவதும் 
31 ஜனவரி 2024 புதன்கிழமை மீ-டேம்-மீ-ஃபை அசாம்

வங்கிகளின் மாதந்திர விடுமுறை பட்டியலை முந்தைய மாத இறுதி நாட்களில் ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது வரும் ஜனவரி மாதத்திற்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாம் மொபைல் மூலமாக இணைய வங்கிச் சேவை வசதிகளை பயன்படுத்தி வந்தாலும், குறிப்பிட்ட சில வேலைகளுக்கு வங்கிக்கு செல்ல வேண்டியுள்ளது.  எடுத்துக்காட்டாக, கணக்கில் இருக்கும் பணம் திரும்பப் பெறுதல் மற்றும் டிமாண்ட் டிராஃப்ட் போன்ற வேலைகளுக்கு மக்கள் வங்கிகளுக்கு தான் செல்ல வேண்டியிருக்கும். அப்படி இருக்கையில் நீங்கள் வங்கிக்கு செல்லும் அன்றைய தினம் வங்கி மூடப்பட்டு இருந்தால், உங்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். அதனால் நீங்கள் ஒவ்வொரு மாதத்திலும் வங்கிகள் எந்தெந்த நாட்களில் மூடப்பட்டு இருக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்திருப்பது உங்களுக்கு நல்லது.  

மேலும் படிக்க | வாங்கின தேதியில் இருந்து வாரண்டி கிடையாதாம்...பதறாதீங்க... முதல்ல இதை படிங்க..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News