தீபாவளி 2022: ஒருவர் செய்யும் செயல்களை கணக்கு வைப்பவர் சித்ரகுப்தர் என்பது இந்து மத நம்பிக்கை. தீபாவளி பண்டிகையின்போது, சித்ரகுப்தரையும், கர்மக்கணக்கை எழுதும் பேனா மற்றும் மையையும் வணங்குவது இந்திய பாரம்பரியம் ஆகும். இந்து மத நம்பிக்கைகளின்படி, தர்மராஜன் என்று அழைக்கப்படும் எமனுக்கு உதவியாளராக செயல்படுபவர் சித்ரகுப்தர். ஐப்பசி மாத வளர்பிறையின் இரண்டாம் நாளில் சித்ரகுப்தரை வழிபடுவது வழக்கம். இன்று சித்ரகுப்தரை வனங்கின்லா, ஒருவர் இறந்த பிறகு நரக வேதனையை அனுபவிக்க வேண்டியதில்லை என்பது நம்பிக்கை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடவுள் சித்ரகுப்தர் அனைத்து மனிதர்களின் பாவ புண்ணிய கணக்கை பராமரிப்பவர். அவரையும், அவர் வைத்திருக்கும் பேனா மற்றும் மையையும் இந்த நாளில் வணங்குகிறார்கள். இந்த ஆண்டு சித்ரகுப்தரின் வழிபாடு அக்டோபர் 27 ஆம் தேதி செய்யப்படுகிறது. வழிபாட்டின் சுப நேரம், முறை மற்றும் பிற தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.


ஐப்பசி மாத சுக்ல பக்ஷத்தின் இரண்டாம் தேதி யான இன்று (அக்டோபர் 27) மதியம் 12:45 வரை சித்ரகுப்தரை வணங்க உகந்த இருக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். ஆனால் இன்று முழுவதுமே சித்ரகுப்தரை வழிபடலாம். மதியம் 01:18 மணி முதல் 03:33 மணி வரை வழிபாட்டிற்கு உகந்த நேரம்.


மேலும் படிக்க | துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகும் புதனுக்கான பரிகாரங்கள்!


சித்ரகுப்த பூஜை விதி


சதுர வடிவில் ஒரு கோலத்தைப் போட்டு, அதன் மீது மனைப்பலகையை வைக்கவும். மனைப்பலகையின் மீது சித்திரகுப்தரின் படத்தை வைக்கவும். அதன் பிறகு, சித்ரகுப்தரின் படத்திறு பூ வைத்து பொட்டிட்டு அலங்காரம் செயவும். ஒரு புதிய பேனாவுடன் ஒரு காகிதத்தையும் வைக்கவும். அதில், ஓம் அல்லது ஓம் நமசிவாயா அல்லது ராமா ராமா என மங்கலமான வார்த்தைகளை எழுதவும்.


இதற்குப் பிறகு, சித்ரகுப்தருக்கு நைவேத்தியங்கள் செய்யவும். அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளை மன்னிக்க வேண்டும் என சித்ரகுப்தரை வணங்கி, பாவங்களுக்கு மன்னிப்புக் கோருங்கள், அதன் பிறகு சித்ரகுப்தருக்கு கற்பூர ஆரத்தி காட்டவும். 


சித்ரகுப்தன் யார்
சித்ரகுப்தர், படைப்புக் கடவுள் பிரம்மாவின் குழந்தை என்று நம்பப்படுகிறது. பிரம்மா இந்த உலகத்தை உருவாக்கியபோது, ​​பூமியில் வாழும் மக்களை அவர்களின் செயல்களுக்கு ஏற்ப தண்டிக்கும் பணி எமனிடம்  ஒப்படைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. தனக்கு உதவுவதற்காக ஒருவர் தேவை என்று எமதர்ம ராஜா பிரம்மாவிடம் கேட்டார்.


அதன் பிறகு பிரம்மா ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். இந்த தவத்த்டின் பயனாக  பிரம்மாவின் உலில் இருந்து சித்ரகுப்தர் பிறந்தார். தனது உடலில் இருந்து வெளிவந்த சித்ரகுப்தரையே, எமதர்மனுக்கு உதவியாளராக நியமித்தார் பிரம்மா.


மேலும் படிக்க | வக்ரமாகும் செவ்வாய்: மகாபுருஷ ராஜயோகத்தால் இந்த ராசிகளுக்கு செல்வம் பெருகும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ