வக்ரமாகும் செவ்வாய்: மகாபுருஷ ராஜயோகத்தால் இந்த ராசிகள் மீது பண மழை, செல்வம் பெருகும்

Mars Transit:  செவ்வாயின் வக்ர நிலை மகாபுருஷ ராஜயோகத்தை உருவாக்குகிறது. இந்த யோகம் குறிப்பிட்ட நான்கு ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 19, 2022, 03:47 PM IST
  • வக்ரமாகும் செவ்வாய் கும்ப ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தருவார்.
  • உங்களின் ஆற்றலும் உற்சாகமும் கவனிக்கத்தக்கதாக இருக்கும்.
  • இதனால் உங்களின் திறமை அதிகரித்து அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுவீர்கள்.
வக்ரமாகும் செவ்வாய்: மகாபுருஷ ராஜயோகத்தால் இந்த ராசிகள் மீது பண மழை, செல்வம் பெருகும் title=

மகாபுருஷ ராஜ யோகம்: வேத ஜோதிடத்தில் செவ்வாய் கிரகங்களின் தளபதியாகக் கருதப்படுகிறது. தைரியம், வலிமை, திருமணம், நிலம் ஆகியவற்றின் காரக கிரகமாக செவ்வாய் உள்ளது. ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக இருந்தால், அந்த நபரின் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். அவர் முழு உத்வேகத்துடன் உழைத்து நல்ல முன்னேற்றம் பெறுவார். செவ்வாய் அவரது வாழ்நாள் முழுதும் அவருக்கு செல்வச்செழிப்புகளை வழங்குவார்.

அக்டோபர் 30, 2022 முதல், செவ்வாய் கிரகம் வக்ரமாக உள்ளது, அதாவது இயல்பு நிலைக்கு எதிர் நிலையில் செல்லவுள்ளது. செவ்வாய் கிரகத்தின் வக்ர இயக்கம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், செவ்வாயின் வக்ர நிலை நான்கு ராசிகளுக்கு மிகவும் நல்ல பலன்களை அள்ளித் தரும். செவ்வாயின் வக்ர நிலை மகாபுருஷ ராஜயோகத்தை உருவாக்குகிறது. இந்த யோகம் குறிப்பிட்ட நான்கு ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். இதனுடன், வேலை வணிகத்திலும் அதிக வெற்றியைக் கொடுக்கும். நவம்பர் 13 வரை செவ்வாய் வக்ர நிலையில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

வக்ர நிலைக்கு மாறும் செவ்வாய் இந்த ராசிக்காரர்களுக்கு பலன் தருவார்

ரிஷபம்: 

செவ்வாயின் வக்ர நிலையால் உருவாகும் மஹாபுருஷ ராஜயோகம் ரிஷப ராசிக்காரர்களுக்குப் பலன் தரும். அவர்களின் வருமானம் கூடும். வியாபாரத்தில் பெரிய லாபம் கிடைக்கலாம். ரிஷப ராசிக்காரர்கள் நீண்ட பயணம் ஒன்றில் செல்லக்கூடும். இந்த பயணத்தால் அனுகூலமான பலன்கள் உருவாகும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். குறிப்பாக அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு பெரிய பதவி அல்லது மரியாதை கிடைக்கும். மூதாதையர் சொத்து, பூர்வீக வியாபாரம் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க | தீபாவளிக்கு அடுத்த நாள் சூரிய கிரகணம்: இந்த ராசிகளுக்கு நெருக்கடி, எச்சரிக்கை தேவை 

சிம்மம்: 

செவ்வாயின் வக்ர நிலை சிம்ம ராசிக்காரர்களுக்கு அனைத்து பணிகளிலும் அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். நடக்காமல் முடங்கி இருந்த பணிகள் வேகமாக நடைபெறும். பணியில் சிறப்பாகச் செயல்படுவீர்கள். உங்களுக்குப் பாராட்டும் மரியாதையும் கிடைக்கும். அதிக தன்னம்பிக்கை மற்றும் வீரம் இருந்தால் பெரிய காரியங்கள் கூட எளிதாக நடக்கும். உங்கள் தொழிலில் பெரிய முன்னேற்றம் அடையலாம். தேர்வுகள், நேர்முகத்தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடக்கும். 

கன்னி: 

செவ்வாயின் வக்ர இயக்கத்தால் உருவாகும் மகாபுருஷ ராஜயோகம், கன்னி ராசிக்காரர்களுக்கு வேலை, வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றியைத் தரும். சொத்து, வாகனம் வாங்கும் வாய்ப்பு உருவாகும். கல்வித்துறையுடன் தொடர்புடையவர்கள் ஆதாயமடைவார்கள். வேலையில் உங்களின் வரம்பும் செல்வாக்கும் அதிகரிக்கும். முதலீடு மூலம் லாபம் உண்டாகும்.

கும்பம்: 

வக்ரமாகும் செவ்வாய் கும்ப ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தருவார். உங்களின் ஆற்றலும் உற்சாகமும் கவனிக்கத்தக்கதாக இருக்கும். இதனால் உங்களின் திறமை அதிகரித்து அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுவீர்கள். பண வரவு சாதகமாக இருக்கும். தொழில் மேம்படும். சட்ட விரோதமான வேலைகளைச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பரிபூரண ஆதரவு கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தோஷ நிவர்த்தி பரிகாரம் செய்பவரா? கட்டாயம் இதை செய்ய வேண்டாம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News