ஒரே நாளில் அருணாச்சலேஸ்வரருக்கு பக்தர்கள் செலுத்திய காணிக்கை மொத்தம் 3 கோடி ரூபாய்!
Counting Of Money Offerings Of Thiruvannamalai : திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஆனி மாத பௌர்ணமி அன்று கிரிவலம் வந்து சென்ற பக்தர்கள் செலுத்திய உண்டியல் வருவாய்...
திருவண்ணாமலை : அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஆனி மாத பௌர்ணமி அன்று கிரிவலம் வந்து சென்ற பக்தர்கள் செலுத்திய உண்டியல் வருவாய் ரூ.2 கோடியே 58 லட்சம் ரொக்க பணமும், 181 கிராம் தங்கமும், 1465 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்துயுள்ளனர். திருவண்ணாமலை நகரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று (2024 ஜூன் 25, செவ்வாய்க்கிழமை) காலையில் தொடங்கி மாலை வரை நடைபெற்றது.
ஆனி மாத பௌர்ணமி தினத்தன்று பல்வேறு மாநிலங்களில் இருந்து அருணாசலேசுவரர் திருக்கோயிலுக்கு 12 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பக்தர்கள் கிரிவலம் நடந்து சென்றும் தரிசனம் செய்து சென்றனர்.
சுவாமி தரிசனம் செய்வதற்காக அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்த பக்தர்கள், காணிக்கையாகவும், நேர்த்திகடனாகவும் உண்டியலில் செலுத்திய நன்கொடைகளை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. அதில் ரூ.2 கோடியே 58 லட்சம் ரொக்க பணமும், 181 கிராம் தங்கமும், 1465 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்தியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் படிக்க | கடகத்திற்கு மாறும் புதன்! கும்பத்தில் வக்ரமாகும் சனி! கதிகலங்கும் 4 ராசிகள் உஷார்!
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி முடிந்து உண்டியல் எண்ணப்படுவது வழக்கம், அதன்படி திருக்கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி முன்னிலையில் சுமார் 200 பேர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
அருணாசலேசுவரர் திருக்கோயிலுக்கு பௌர்ணமி அன்று வெளி நாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிவார்கள், பக்தர்கள் நினைத்த காரியம் நிறைவேற அருணாசலேசுவரரை வேண்டி நேர்த்தி கடனாக காணிக்கை செலுத்துகின்றனர்.
ரொக்கக் காணிக்கை மட்டுமின்றி, தங்கம் வெள்ளி போன்றவற்றையும் உண்டியலில் செலுத்துகிறார்கள், அந்த வகையில் கடந்த மாதம் 21 ஆம் தேதி நடைபெற்ற ஆனி மாத பௌர்ணமி மற்றும் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நேற்று காலை தொடங்கி மாலை நிறைவு பெற்றது.
மொத்தம் ரூ.2 கோடியே 58 லட்சம் ரொக்க பணமும், 181 கிராம் தங்கமும், 1465 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளதாக அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி தெரிவித்தார்.
மேலும் படிக்க | குரோதி ஆண்டு ஆனி மாதம் 12ம் நாள் புதன்கிழமை ராசிபலன்கள்! அதிர்ஷ்டமான நாள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ