கடகத்திற்கு மாறும் புதன்! கும்பத்தில் வக்ரமாகும் சனி! கதிகலங்கும் 4 ராசிகள் உஷார்!

Shani Budhan Transit 2024 :  ஜூன் 29, 2024 அன்று மதியம், புதன், கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதற்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு சனி தனது ராசியான கும்பத்தில் வக்ரகதிக்குச் செல்கிறார்

Shani And Budhan Transit : சனி மற்றும் புதன் நிலைகளில் 12 மணி நேரத்திற்குள் ஏற்படும் மாற்றங்கள் 4 ராசிக்காரர்களுக்கு பெரும் சிரமத்தைக் கொடுக்கும்.

1 /9

நவகிரகங்களின் இயக்கத்தின் வேகம் ஒன்றுடன் ஒன்று மாறுபடும். சில நேர்சுற்றில் சுற்றினால், சில வக்ர கதியில் நகரும். ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர்ந்துக் கொண்டே இருக்கின்றன

2 /9

புத்திகாரகர் புதன், நீதிக்காரகர் சனி இருவரும் ஒருவரின் வாழ்க்கையின் முக்கியமான கட்டங்களை தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றனர்

3 /9

நீதிக்காரகரான சனீஸ்வரர், ஒருவரின் நன்மை தீமைகளை எடைபோட்டு அவர்களின் கர்மபலன்களை நிர்ணயம் செய்யும் நீதிபதியாக செயல்படுபவர்

4 /9

புத்தி, அறிவு, கல்வி என ஒருவரின் அறிவார்ந்த பண்புகளுக்கு காரணமான புதனின் வலிமையே ஒருவரின் அந்தஸ்தாக மாறுகிறது

5 /9

புதனும் சனியும் தங்கள் இயக்கத்தை மாற்றுவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு பணப் பிரச்சனைகள் ஏற்படும்ம் செலவுகள் அதிகரிக்கும். சம்பாதிப்பதை விட அதிகமாக செலவு செய்வதால் மனதில் கலக்கம் உண்டாகும். முடிவுகளை எடுக்கும்போது கவனமாக இருக்கவும்.

6 /9

உங்கள் உடல்நலம் மற்றும் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சிந்தித்து செயலாற்றுங்கள் பேசுங்கள். உங்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும். செலவு அதிகரிக்கும் காலம் என்பதால் சிக்கனத்தை கடைபிடியுங்கள்

7 /9

மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. மேலோட்டமாகப் பார்த்தால் எல்லாம் சரியாகத் தோன்றினாலும் திடீரென்று ஏதேனும் ஒரு பிரச்சனை வரலாம். வருமானம் அதிகரிப்பது போல தெரிந்தாலும் செலவுகள் அதிகரிக்கும். கவனத்துடன் செலவு செய்யுங்கள். அநாவசியமாக உணர்ச்சிவசப்பட வேண்டாம்

8 /9

ஜூன் 29க்குக் பிறகு அடுத்த சில நாட்கள் ஏற்றத் தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். கடக ராசிக்காரர்களுக்கு தங்கள் தொழிலில் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நேரம் இது. சிலருக்கு நஷ்டம் ஏற்படலாம், கடன் வாங்க நேரிடலாம். பிரச்சனைகள் ஏற்பட்டால், பொறுமையாக இருங்கள்.

9 /9

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.  பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது