தினப்பலன், ஆகஸ்ட் 10 2023: மனித வாழ்க்கையில் கிரக நிலைகளுக்கும், அவற்றின் பெயர்ச்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் உள்ளது. ஒருவரது நட்சத்திரம், ராசியை பொறுத்தும் அவர்களது குணாதிசயங்கள் மாறுபடும். கிரக மாற்றங்கள் மற்றும் பிற ஜோதிட அம்சங்களின் அடிப்படையில் அனைத்து ராசிக்காரர்களுக்கும் அன்றைய பலன்கள் அமைகின்றன. இன்றைய தினம் அனைத்து ராசிகளுக்கும் எப்படி இருக்கும்? யாருக்கு மகிழ்ச்சி காத்திருக்கின்றது? இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எப்படி உள்ளது? அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலனை இங்கே காணலாம்.
மேஷம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. பிள்ளைகளால் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு சுபசெலவுகள் செய்ய கூடிய வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணிச்சுமை குறையும். தொழில் சம்பந்தமாக வெளியூர் தொடர்பு கிடைக்கும்.
மிதுனம்
இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். வியாபாரத்தில் நண்பர்களால் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். வேலையில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலப்பலன்கள் கிட்டும்.
கடகம்
இன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பொருளாதார பிரச்சினைகள் நீங்கும்.
சிம்மம்
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். பொருளாதார தேவைகள் நிறைவேறும்.
கன்னி
இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் நிதானம் தேவை. புதிய முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.
துலாம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். வீண் பிரச்சினைகள் உங்களை தேடி வரும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர் பதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.
தனுசு
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும்.
மகரம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று தாமத நிலை ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்தழைப்பும் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
கும்பம்
இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் கிட்டும். உத்தியோக ரீதியான பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
மீனம்
இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் இனிய செய்திகள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். பழைய கடன்கள் வசூலாகும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறைந்து லாபம் பெருகும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ