அஸ்தமனமாகும் குரு! சிக்கலில் சிக்கும் ‘சில’ ராசிகள்! மீள செய்ய வேண்டியவை!
ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் குறிபிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சி ஆவதோடு, அவ்வப்போது தங்கள் நிலையையும் மாற்றிக் கொள்கின்றன. திருமணம் வாழ்க்கை, குழந்தைக பாக்கியம், அதிர்ஷ்டம், செல்வம், கல்வி போன்றவற்றுக்கு குரு காரணி. குருவின் நிலை சாதகமாக இல்லாவிட்டால், அந்த ஜாதகரின் திருமணம், நிச்சயதார்த்தம், பெயர் சூட்டுதல் போன்ற சுப மற்றும் மங்களகரமான நிகழ்வுகள் எதுவும் நடைபெறாது என்று நம்பப்படுகிறது. ஏப்ரல் 22 முதல் வியாழன் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். அதற்கு முன்னதாக மார்ச் மாதம் 28ம் தேதி குரு அஸ்தமனமாகிறார். மீன ராசியை ஆளும் கிரகம் செவ்வாய். அப்படிப்பட்ட நிலையில் கும்பம், மீன ராசிக்காரர்கள் குருவின் அஸ்தமனத்தின் போது சில மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.
கும்ப ராசியில் குரு அஸ்தமனத்தின் தாக்கம்
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கும்ப ராசிக்கு 2 மற்றும் 11 வது வீட்டின் அதிபதியாக குரு கருதப்படுகிறது. மார்ச் 28ல் குரு அஸ்தமனம் ஆகப்போகிறது. குரு மீனத்தின் இரண்டாவது வீட்டிலும் மேஷத்தின் மூன்றாவது வீட்டிலும் அஸ்தமனமாகிறார். இதன் போது, மீனத்தில் குரு அஸ்தனமாவதால், இந்த ராசிகள் நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், எந்த வகையான முதலீட்டிலிருந்தும் கொஞ்சம் விலகியே இருங்கள். நிதி விவகாரம் எந்தவொரு முக்கிய முடிவு எடுப்பதை தவிர்க்கவும். கும்ப ராசிக்காரர்கள் வியாழன் அன்று குரு மந்திரம் மற்றும் காயத்ரி ஏகாக்ஷரி பீஜ மந்திரமான 'ஓம் பிருஹஸ்பதயே நம' என்று ஜபிக்க 108 முறை வேண்டும். இதனால், பாதிப்புகள் குறையும்.
மேலும் படிக்க | தோஷங்கள் அனைத்தையும் நீக்கி, சகல செல்வங்களையும் கொடுக்கும் கோபூஜை!
மீன ராசியில் குரு அஸ்தமனத்தின் தாக்கம்
ஜோதிடத்தின் படி, குரு பகவான் லக்னம் மற்றும் மீனத்திற்கு 10 ஆம் வீட்டிற்கு அதிபதி. குரு லக்ன வீட்டில் அஸ்தமித்து அதன் பிறகு மேஷத்தின் இரண்டாம் வீட்டில் அஸ்தமனமாகிறார். இதுபோன்ற சூழ்நிலையில், மீன ராசிக்காரர்களுக்கு உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மோசமான உடல் நலம் வாழ்க்கையில் பல தடைகளை உருவாக்கும். வேலையில் மும்முரமாக இருப்பதால் குடும்பத்திற்கு நேரம் கொடுக்க முடியாமல் போகும். இதன் போது, குருவை வலுப்படுத்த மஞ்சள் நிற ஆடைகளை அணியுங்கள். வியாழன் அன்று குரு மந்திரம் மற்றும் காயத்ரி ஏகாக்ஷரி பீஜ மந்திரமான 'ஓம் பிருஹஸ்பதயே நம' என்று 108 முறை ஜபிக்க வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)
மேலும் படிக்க | சகல சங்கடங்களையும் போக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! கடைபிடிக்கும் முறை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ