நீதியின் கடவுளாக கருதப்படும் சனி ஒரு ராசியில் சஞ்சரிக்க சுமார் இரண்டரை வருடங்கள் ஆகும். சனிபகவானின் அருள் இல்லாமல் எவரும் உயர் பதவியில் இருக்க முடியாது. இந்நிலையில், சுமார் 30 அண்டுகளுக்கு பிறகு, 2023 ஜனவரி 17அன்று, கும்ப ராசியில் நுழைகிறார். இதன் காரணத்தால் சில ராசிகள் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். ஏழரை சனி காலம் என்றாலே எல்லோருக்கும் பயம்தான். ஒருவருடைய வாழ்க்கையில் முதல் முறையாக ஏழரைச் சனி வரும் பொழுது அதற்கு மங்கு சனி என்று பெயர்.ஒருவருடைய வாழ்க்கையில் இரண்டாவது சுற்றாக ஏழரைச் சனி வரும்போது அதற்கு பொங்கு சனி என்று பெயர். ஒருவருடைய வாழ்க்கையில் 3வது சுற்று ஏழரைச்சனி வரும்போது அதற்கு இறுதி சனி என்று பெயர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக ஏழரை நாட்டு சனி காலம் வேதனையான நேரம். ஆனால் ஜாதகத்தில் சனி யோககாரகமாக இருந்தால், அந்த நபருக்கு அந்தளவு துன்பம் இருக்காது.


தற்போது, ​​ ஏழரை நாட்டு சனி மற்றும் சனி திசையினால் அவதிப்படும் சில ராசிகள்:


தற்போது சனி மகர ராசியில் சஞ்சரிப்பதால், அதன் தாக்கத்தால் மிதுனம், துலாம் ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு  தாக்கத்தில் உள்ளனர். ஜனவரி 17-ம் தேதி கும்ப ராசிக்கு சனி பிரவேசிக்கப் போகும் போதே மிதுனம், துலாம் ராசிக்காரர்கள் சனியின் ஏழரை நாட்டு சனியிலிருந்து முற்றிலும் விடுபடுவார்கள். துலாம், மிதுன ராசிக்காரர்கள் மீதிருந்த சனி பகவானின் தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கும். தனுசு ராசிக்காரர்களும் கடந்த ஏழு வருடங்களாக அனுபவித்த துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவார்கள்.


ஜனவரி 17, 2023 முதல், கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி திசை தொடங்கும் கடக ராசிக்காரர்களுக்கு எட்டாம் வீட்டில் சனிப்பெயர்ச்சி தொடங்கும் அதே சமயம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நான்காம் வீட்டில் இருந்து சனிப்பெயர்ச்சி தொடங்கும். இதுமட்டுமல்லாமல், மகர ராசிக்காரர்களின் கடைசிக் கட்டம், கும்ப ராசிக்காரர்களுக்கு நடுப்பகுதி, மீன ராசிக்காரர்களுக்கு சனியின் சனி திசை ஆகியவை தொடங்கும்.


மேலும் படிக்க | சூரிய பெயர்ச்சி: அதிர்ஷ்டத்தில் சூரியனைப் போல் பிரகாசிக்கும் ‘சில’ ராசிகள் இவை தான்! 


சனியை மகிழ்விக்க பரிகாரங்கள்


1. சனியை மகிழ்விக்க, ஓம் ஹனுமந்தே நம என்று தினமும் ஜபம் செய்யலாம்.


2. உங்கள் முன்னோர்களை நினைத்து அரச மரத்திற்கு தண்ணீர் விடவும்.


3. ஒவ்வொரு சனிக்கிழமையும், ஏழைகளுக்கு உதவவும், அவர்களுக்கு அன்ன தானம் செய்யவும். சனி கோவிலுக்கு எண்ணெய் தானம் செய்யவும்.


4.சனி திசை அல்லது ஏழரை நாடு சனியின் பாதிப்பில் இருந்து விலக,  'ஓம் ஷன்னோ தேவி ரபிஷ்டாய ஆபோ பவந்து பிபதயே ஷன்யோ ரவிஸ்ர வந்துனஹ்' என்ற சனி மந்திரத்தை ஒரு கற்றறிந்த பிராமணரை கொண்டு 23 ஆயிரம் முறை உச்சரிக்கவும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சுக்கிரன் மாற்றத்தால் உருவாகும் அஷ்டலக்ஷ்மி ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு சுக்கிரதசை 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ