சனி நட்சத்திர பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு இனி ஒளிமயமான எதிர்காலம்..!!
Shani Nakshatra Peyarchi: ஜோதிடத்தின்படி, சனி பகவான் ஏப்ரல் 7 ஆம் தேதி பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். குரு பகவான் ஆதிக்கம் செலுத்தும் நச்டத்திரம் பூரட்டாதி. குரு பகவானின் நட்சத்திரத்தில் சனி நுழைவதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கூடும்.
Shani Nakshatra Peyarchi: ஜோதிடத்தின்படி, சனி பகவான் ஏப்ரல் 7 ஆம் தேதி பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். குரு பகவான் ஆதிக்கம் செலுத்தும் நச்டத்திரம் பூரட்டாதி. குரு பகவானின் நட்சத்திரத்தில் சனி நுழைவதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கூடும். சனி பகவான் ஏப்ரல் 7 ஆம் தேதி பிற்பகல் 3:55 மணிக்கு பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரித்த நிலையில் அக்டோபர் 3, 2024 வரை பூரட்டாதி நக்ஷத்திரத்தில் இருப்பார்.
சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இந்த காலகட்டத்தில், சில ராசிகள், செல்வ வளத்தில் திளைப்பார்கள். ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இந்த அதிர்ஷ்ட ராசிகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்...
தனுசு ராசி: சனி பெயர்ச்சி பலன்கள்
சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சி, தனுசு ராசிகளுக்கு மன தைரியம் மற்றும் நம்பிக்கை உணர்வைக் கொடுக்கும். நீங்கள் எடுக்கும் எந்த முடிவும் உங்கள் குடும்ப உறுப்பினர்களால் பெரிதும் பாராட்டப்படும். அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும். உங்கள் வணிகம் வெளிநாடுகளுடன் தொடர்புடையதாக இருந்தால், நல்ல லாபத்தைப் பெறலாம். பண வரவு அதிகமாவதால் நிதி நிலை மேம்படும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் சகோதர சகோதரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். அரசு வேலைக்கு தயாராகி வருபவர்கள் கடின உழைப்பால் அரசு வேலை பெறலாம். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாகும்.
கும்ப ராசி: சனி பெயர்ச்சி பலன்கள்
கும்ப ராசிக்காரகளுக்கு சனி பகவானின் நடசத்திர பெயர்ச்சி சாதகமாக அமையும். சனிபகவான் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் நிலையில், கும்ப ராசிக்கு அதிபதி சனி பகவான். எனவே, இந்த நேரத்தில் உங்கள் நம்பிக்கை, மன தைரியம் அதிகரிக்கும். மேலும், பணியில் உள்ளவர்களின் நிலுவையில் உள்ள பணிகளும் நிறைவேறும். விரும்பிய பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான பயணம் மகிழ்ச்சியாகவும் லாபகரமாகவும் இருக்கும். திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மேலும், திருமணமாகாதவர்களுக்கு திருமண கை கூடி வரலாம். மனதளவில் இருந்து வந்த கவலைகள் நீங்கும். விரும்பிய வேலையைத் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு, காத்திருப்பு முடிவுக்கு வரும்.
மேலும் படிக்க | குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளின் வாழ்வில் ஏற்றம், லாபம், வெற்றி
விருச்சிக ராசி: சனி பெயர்ச்சி பலன்கள்
சனிபகவான் நட்சத்திர பெயர்ச்சி விருச்சிக ராசிகளுக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் சனிபகவானின் அருளால், நீங்கள் பொருள் இன்பங்களைப் பெறலாம். மேலும், இந்த நேரத்தில் வாகனம் மற்றும் சொத்து வாங்கலாம். . உத்தியோகத்தில் மறைமுக வாய்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். வாழ்க்கையில் சௌகரியங்களும், வசதிகளும் அதிகரிக்கும், பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். முதலீட்டில் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். மேலும், உங்கள் வணிகம் ரியல் எஸ்டேட், சொத்து மற்றும் நிலம் தொடர்பானதாக இருந்தால், நீங்கள் நல்ல லாபத்தைப் பெறலாம். இந்த நேரத்தில் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். வாழ்க்கையில் நல்ல காலம் தொடங்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: இன்று எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ