குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளின் வாழ்வில் ஏற்றம், லாபம், வெற்றி

Guru Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் கிரக பெயர்ச்சிகளுக்கு முக்கிய பங்குள்ளது. மே 1 ஆம் தேதி சுப கிரகமான குரு பகவான் பெயர்ச்சி ஆகவுள்ளார். 

Guru Peyarchi Palangal: குரு பெயர்ச்சிக்கும் சனி பெயர்ச்சிக்கும் சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. கல்வி, திருமணம், புத்திசாலித்தனம், குழந்தைகள், பணம், செல்வச் செழிப்பு ஆகியவற்றுக்கு காரணி கிரகமாக உள்ள குரு பகவான் மே 1 ஆம் தேதி மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இது மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. குரு பெயர்ச்சியால் அனைத்து 12 ராசிகளிலும் ஏற்படவுள்ள மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /13

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் குரு பகவானின் சிறப்பு அருள் கிடைக்கும். கடன் தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். நீண்ட நாள் ஆசைகள் இப்போது நிறைவேறும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். 

2 /13

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் குரு பெயர்ச்சியால லாபகரமான பலன்களை அடைவார்கள். இவர்கள் தங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் இந்த மாற்றத்தால் பயனடைவார்கள். புதிய வாகனம், வீடு, மனை, சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.   

3 /13

மிதுனம்: வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மிதுன ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகரிக்கும். பணி இடத்தில் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய பொறுப்புகளை பெற வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். பண வரவு நன்றாக இருக்கும். காது, மூக்கு, தொண்டை, அல்சர் உபாதைகள் வரலாம். 

4 /13

கடகம்: குரு பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் அமைதி அதிகமாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பரிபூரண ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். 

5 /13

சிம்மம்: சிம்ம ராசிக்கு குரு அருளால் தொல்லைகள் நீங்கி நல்ல காலம் ஆரம்பமாகும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு இது நல்ல காலமாக இருக்கும். குறிப்பாக வெளிநாட்டில் உயர்கல்வி படிக்க விரும்பும் சிம்ம ராசி மாணவர்கள் நல்ல செய்திகளை பெறுவார்கள். படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். பணி இடத்திலும் நல்ல செய்திகள் கிடைக்கும். ஆன்மீக விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். 

6 /13

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அற்புதமான நற்பலன்களை அளிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் அன்பும் புரிதலும் அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். 

7 /13

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். பணி இடத்தில் உங்கள் பங்களிப்பு அதிகமாகும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல காலம் ஆரம்பம் ஆகும். பல வித தொழில்களில் முதலீடு செய்வீர்கள். இப்போது முதலீடு செய்யலாம். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வீடு, நிலம் வாங்க இது உகந்த நேரமாக இருக்கும். 

8 /13

விருச்சிகம்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். வெளிநாடுகளில் வர்த்தகத்தை விரிவு படுத்த வாய்ப்பு கிடைக்கும். இந்த காலத்தில் தொழில் விருத்தி அடையும் வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். 

9 /13

தனுசு: வாழ்க்கைத் துணையுடன் புரிதலும் அன்பும் அதிகமாகும். குழந்தை பாக்கியம் வேண்டும் நபர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும், பன வரவு அதிகமாகும். இதனால் பொருளாதார நிலை மேம்படும். தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். 

10 /13

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அற்புதமாக இருக்கும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.

11 /13

கும்பம்:  குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு பலவிதமான நல்ல செய்திகள் வரும். பொருளாதார நிலை முன்பு விட நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பண வரவு அதிகமாகும்.

12 /13

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். வணிகத்தில் லாபம் அதிகரிக்கும். பணி இடத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும். 

13 /13

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.