சனிக்கிழமைகளில் சனிப் பரிகாரம்: சனீஸ்வரர் நவகிரகங்களில் ஒருவர். மந்தன் என்றும் சனைச்சரன் என்றும் அழைக்கப்படும் சனீஸ்வரர் ஒருவரின் கர்மத்திற்கு ஏற்ற பலன்களைக் கொடுப்பார். தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் ஆகிய நான்குக்கும் இவரே காரகன். சனி ஒருவர் ஜாதகத்தில் ஆட்சியாகவோ, உச்சமாகவோ இருந்தால், அவர் எல்லாவித சௌக்கியங்களையும் பெற்று, உயரிய வாழ்க்கை வாழ்வார் என்பது ஐதீகம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த சனீஸ்வரர் எமதர்மராஜனின் சகோதரன் என்பதால் சனி பகவான், ஒருவரின் ஆயுளை ஆதிக்கம் செய்யும் ஆயுள்காரகன் ஆவார். நீண்ட ஆயுளைக் கொடுக்கும் சனீஸ்வரரே அகால மரணத்திற்கும் காரணமாகிறார். நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டவர்கள் மரணத்தை வேண்டினாலும் கொடுக்காமல் தாமதிப்பவரும் சனிதேவர் தான். ஆயுட்காரகர், தர்மக்காரகர் என்று பெயர் பெற்ற சனீஸ்வரரை சாந்திப்படுத்தும் சில பரிகாரங்களை சனிக்கிழமைகளில் செய்தால் சனீஸ்வரரின் உக்ரம் குறையும்.


சனிக்கிழமைகளில் சனிப் பரிகாரம் 


ஒருவர் ஜாதகத்தில் சனி பகவான் பகையாகவோ, நீசமாகவோ இருந்தால், அவருடைய எல்லா முயற்சிகளிலும் தோல்வியோ அல்லது காரியத்த்டையோ ஏற்படும். அதுமட்டுமல்ல, எடுத்த காரியம் நிறைவேறினாலும், கிடைத்திருக்க வேண்டிய நியாயமான மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாத அளவு வேறு சிக்கல்கலை கொடுத்துவிடுவார். ஆனால், சனி பகையாகவோ அல்லது நீச்சமாகவோ இருந்தாலும், பிற கிரகங்கள் வலிமையாக இருந்தால், இந்தப் பலன்கள் சாதகமாக மாறும்.


மேலும் படிக்க | இந்த இரண்டு ராஜயோகத்தால்... 4 ராசிகளுக்கு பெரிய சர்ப்பரைஸ் காத்திருக்கிறது


சனீஸ்வரர் மகரம், கும்பம் ராசிகளுக்கு அதிபதியாக திகழ்கிறார். மேற்கு திக்குக்கு அதிபதியான சனி பகவானின் அதிதேவதை : பிரம்மன் என்பது குறிப்பிடத்தக்கது. கருமை நிறத்தை தனது வண்ணமாக கொண்டுள்ள சனி பகவானின் வாகனம் காகம் என்றால், அவருக்கு பிடித்த தானியம் எள். அதேபோல, சனி பகவானுக்கு பிடித்த மலர்கள் கருங்குவளை மற்றும் வன்னி ஆகும்.


ஸ்ரீ சனீஸ்வரர் காயத்ரி மந்திரம்


சனிக்கிழமை நாளன்று, சனீஸ்வரரின் காயத்ரி மந்திரத்தை படித்தால், அவர் அருள் புரிவார்.


ஓம் காக த்வஜாய வித்மஹே: கட்க ஹஸ்தாய தீமஹி தன்னோ மந்த ப்ரயோதயாத் என்பது சனி காயத்ரி மந்திரம் ஆகும்.


சனிக்கிழமையில் அனுமன் வழிபாடு


அனுமன் கவசம் பாடி, சனிக்கிழமை தோறும் அனுமனை வழிபட்டால் சனீஸ்வரர் மனம் மகிழ்வார். ஏழரைச் சனி,அஷ்டமத்துச் சனி,அா்த்தாஷ்டச் சனி, கண்டகச் சனி போன்றவற்றின் ஆதிக்கத்தில் சிக்கி இருப்பவர்களுக்கு ஏற்படும் தடைகளையும் தாமதங்களையும் நிவர்த்தி செய்ய அனுமன் வழிபாடு அவசியம்.


கொடுக்கல் வாங்கல்களில் சிக்கல்கள், வளர்ச்சியில் தளர்ச்சி, மனக்குழப்பங்கள் என பல்வேறு முன்னேற்றத் தடைகளையும் ஏற்படுத்தும் சனீஸ்வரருக்கு, அனுமாரை வழிபடுபவர்களைக் கண்டால் பிடிக்கும். எனவே, அனுமனை வழிபட்டால் தடைகள் தானாக விலகும். எதிரிகள் பலம் குறையும்.


மேலும் படிக்க | சுக்கிரன் அருளால் அக்டோபர் மாதம் இந்த ராசிகளுக்கு அமர்க்களமாய் இருக்கும்: உங்க ராசியும் இதுவா?


சனி ஆதிக்கத்தில் இருப்பவர்கள். அவர்கள் அவசியம் அனுமன் வழிபாட்டை மேற்கொள்ளவேண்டும். அதிலும் குறிப்பாக, சனிக்கிழமையன்று, சனீஸ்வரரும் அனுமாரும் இருக்கும் கோவில்களுக்கு சென்று அனுமன் வழிபாட்டை மேற்கொண்டால் சீரும், சிறப்பும் செல்வாக்கும் அதிகரிக்கும்.


சனிக்கிழமையில் அத்தி மர வழிபாடு


சனிக்கிழமைகளில் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதுடன், அங்கு அத்தி மரம் இருந்தால், அந்த மரத்தை தொடாமல் 9 முறை வளம் வந்து வணங்க வேண்டும். அத்தி மரம் என்பது திருமாலின் அம்சம் நிறைந்த மரமாகும். திருப்பதி வெங்கடாசலபதி சனி பகவானின் அம்சம் பொருந்தியவர் என்பதால், அத்தி மர வழிபாடு மகாலட்சுமி அருளை கொண்டு வந்து சேர்க்கும்.


மேலும் படிக்க | ‘இந்த’ 6 ராசிக்காரர்களுக்கு அவர்களின் மாமியாருடன் ஒத்து போகாது..! யார் அவர்கள்..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ