Venus Transit: சுக்கிரன் அசுரர்களின் குருவாக கருதப்படுகிறார். இதுமட்டுமின்றி, அவர்  செல்வம் மற்றும் செழிப்பை அளிக்கும் சுப கிரகமாகவும் பார்க்கப்படுகிறார். அனைத்து கிரகங்களையும் போலவே சுக்கிரனும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு தனது ராசியை மாற்றுகிறார். செல்வத்தை அள்ளித் தரும் சுக்கிரன் தற்போது தனுசு ராசியில் இருக்கிறார். அவர் அடுத்த மாதம் அதாவது பிப்ரவரியில் மகர ராசியிலும், மார்ச் மாதம் மீன ராசியிலும் பெயர்ச்சி அடையவுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மீனத்தில் சுக்கிரன் பெயர்ச்சி


ஜோதிட சாஸ்திரப்படி, சுக்கிரனின் உச்ச ராசி மீன ராசியாகும். மார்ச் 31 மாலை 4:54 மணிக்கு அவர் மீன ராசியில் பெயர்ச்சியாகிறார். பொதுவாகவே அனைத்து கிரகங்களின் மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரனின் பெயர்ச்சியும் அனைத்து ராசிகளிலும் (Zodiac Signs) மாற்றங்களை கொண்டு வரும். 


வேத ஜோதிடத்தின்படி, மீனத்தில் சுக்கிரன் நுழைவது (Venus Transit) அனைத்து 12 ராசிகளிலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரனின் ராசி மாற்றத்தால், மக்கள் அழகு, கவர்ச்சி, உயர் அறிவு, புத்திசாலித்தனம், திருமண வெற்றி, செல்வம், உறவுகள் மற்றும் சமூகத்தில் மரியாதை ஆகியவற்றைப் பெறுவார்கள். அனைத்து ராசிகளுக்கும் இதனால் நற்பலன்கள் கிடைக்கும் என்றாலும், சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான மகிழ்ச்சியும், வெற்றியும், செழிப்பும் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


மிதுனம் (Gemini)


மிதுன ராசிக்கு பத்தாம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதால், மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில், இந்த ராசிக்காரர்கள் செல்வத்துடன் குடும்ப துக்கங்களிலிருந்தும் விடுபடுவார்கள். உலக இன்பங்களை அடைவார்கள். புதிய வாகனம், வீடு ஆகியவற்றை வாங்கும் யோகம் உருவாகும். வேலை தேடி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல இடத்திலிருந்து வேலை வாய்ப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே மகிழ்ச்சி நிலவும். உங்கள் பெற்றோரின் ஆதரவையும் பெறுவீர்கள்.


மேலும் படிக்க | சனி உச்சம்.. உருவாகும் அபூர்வ யோகம், இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை


கன்னி (Virgo) 


சுக்கிரன் கன்னி ராசியில் ஏழாமிடத்தில் அமர்வதால், கன்னி ராசிக்காரர்களுக்கு மீனத்தில் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் நல்ல பலன் கிடைக்கும் என்று வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன. சுக்கிரனின் சஞ்சாரத்தால், திடீரென பணப் பலன்கள் கிடைக்கலாம். பண வரவு அதிகமாகும். தொழிலில் முன்னேற்றமும் ஏற்படும். மூதாதையர் சொத்துக்களால் பண ஆதாயம் பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.


கடகம் (Cancer)


கடக ராசியில் சுக்கிரன் ஒன்பதாம் வீட்டில் அமர்வார். இதனால் கடக ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். சொந்த தொழில் செய்யும் கடக ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சிலருக்கு திடீரென்று அரசியலில் நுழையும் வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் ஒரு பெரிய தலைவரை சந்திக்கலாம், அவர் மூலம் பல உதவிகளை பெறக்கூடும். 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை. )


மேலும் படிக்க | சனி பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், பொற்காலம் துவங்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ